யாழிசை திண்டுக்கல் மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். சென்னை குருநானக் மெட்ரிகுலேசன் பள்ளியில் 3 ஆம் வகுப்பு வரை படித்தவர், பின்பு தன் தந்தையின் பணியிழப்பால், வேளச்சேரி மாநகராட்சிப் பள்ளியில் ஓராண்டு படித்தார். தற்போது வேளச்சேரி புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார். செஸ் விளையாடுதல், ஓவியம் வரைதல், கதை எழுதுவதில், பாடல்கள் கேட்பதில் ஆர்வம் உடையவர். இங்கு இணைக்கப்பட்டுள்ள ஓவியங்களில் சில 2019 ஆம் ஆண்டு வரைந்தவை. இனி யாழிசையின் ஓவியங்களுடன்…











கவிஞர் பச்சோந்தியின் இயற்பெயர் ரா.ச.கணேசன். கணையாழி, வம்சி, ஆனந்த விகடன், நீலம், ஜனசக்தி ஆகிய நிறுவனங்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது தடாரி இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
வேர்முளைத்த உலக்கை, கூடுகளில் தொங்கும் அங்காடி, அம்பட்டன் கலையம், பீஃப் கவிதைகள், கபால நகரம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள்’ எனும் நாட்குறிப்பு நூலும் இதுவரை வெளியாகி உள்ளன. ‘மாமிச அம்புலி’ என்னும் சிறுகதை அகழ் இணைய இதழில் எழுதியுள்ளார்.








Leave a Reply