ஒரு சிறுமி ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அந்த எண்களை வரிசையாக வைப்பது, பின்னர் கலைத்துப் போடுவது, மறுபடியும் வரிசையாக வைப்பது இப்படியாக விளையாடிக் கொண்டிருந்தார்.
கடைசியாக ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்களை வரிசையாக வைத்துவிட்டுத்
தூங்கிவிட்டார்.
பிறகு தூக்கம் கலைந்து எழுந்தார். எழுந்து பார்த்தால் ஏழு என்ற எண்ணைக் காணவில்லை. சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தார் கிடைக்கவில்லை.
என்னுடைய ஏழு என்ற எண் என்ன ஆனதோ? எங்கு போனதோ? என்று கவலை கொண்டார்.
அப்போது, அந்த வழியாக எழுபத்தி ஏழு என்ற எண் வந்தது. சிறுமி கவலையுடன் இருப்பதைப் பார்த்தது. “ஏன் கவலையுடன் இருக்கிறாய்?” என்று கேட்டது.
“என்னுடைய ஏழு என்ற எண்ணைக் காணவில்லை” மெல்லிய குரலில் சொன்னார்.
உடனே அந்த எழுபத்தி ஏழு என்ற எண் சொன்னது “நாங்கள் இருவரும் தனியாகப் பிரிந்தால்
ஏழு என்ற எண்ணாக ஆகிவிடுவோம். உன்னுடைய ஏழு என்ற எண் கிடைக்கும் வரை எங்கள் இருவரில் ஒருவரை வைத்துக்கொள்”.
அதற்கு அந்தச் சிறுமி சொன்னார். “நீ இரண்டு இலக்க எண், இரண்டாகப் பிரிந்தால் உன் மதிப்பு குறைந்துவிடும். எனக்காக நீ ஒரு நிமிடம் கூட உன் மதிப்பை இழக்க வேண்டாம்’.
“மதிப்பை இழப்பதை விட உன்னுடைய மகிழ்ச்சிதான் எனக்கு முக்கியம்” என்றது எழுபத்தி ஏழு.
இப்படி பேசிக் கொண்டிருக்கும்போது காணாமல்போன ஏழு என்ற எண் எங்கிருந்தோ திரும்பி வந்தது.
அதைப் பார்த்து சிறுமி மகிழ்ச்சி அடைந்தார்.
Art : artistbynumber.com
வேலூரில் வசித்துவருகிறார். பிரியாத மழை நினைவு என்கிற கவிதை கவிதை நூலையும்
புலி கிலி, எருமையின் நிழல் ஆகிய சிறார் கதை நூல்களையும், பூதம் தூக்கிட்டுப்போன தங்கச்சி, தங்க மாங்கனி ஆகிய நாட்டுப்புற சிறார் கதை தொகுப்புகளையும், கை வீசி நடக்கும் நிழல், நீலக்குரல் ஆகிய சிறார் பாடல்களையும் எழுதி உள்ளார். சிறார் கதைச் சொல்லியான இவர் சிறார்களுக்காகக் ‘கூட்டாளிகள்’ என்ற கலைக் குழுவைவையும், ‘தமிழ்க் கனவு’ என்ற இலக்கிய அமைப்பை நடத்திவருகிறார்.








Leave a Reply