Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

பிறழ்வு

முத்துவேல் .
முத்துவேல் .
December 1, 2025
பிறழ்வு

மாட்டை மந்தை மடக்கி விட்டு முக்கம் தெறித்தபடி வேப்ப மரத்தடியில் வந்து உட்கார்ந்தாள் பிச்சை. “மதுரை வீரா எல்லாத்தயும் உங்கண்ணால பாத்துட்டு தான இருக்கிற உன்னும் எம்மாத்தத்தான் இந்த மனசும் ஒடம்பும் தாங்கும், என்ன இட்டுக்கின்னு போவமாட்டீயா?” எனத் தனக்குத்தானே நிழல் கண்ட மரத்தடியில் குந்தி பினாத்துவது அவளுக்கொன்றும் புதிதில்லை.

பூனைக்குடும்பத்தில் பிச்சை மட்டும்தான் கடைசி வரை புருஷனுடன் ஒன்றாக இருந்து பிள்ளைக் குட்டிகளைப் பெற்று கட்டு செட்டாகக் குடும்பம் நடத்தியவள் என்று இப்போது வரை அகரத்தில் பேசுவதுண்டு. அது உண்மையுங்கூட.

அந்தக் காலத்தில் அகரத்தையே கட்டியாண்டு சொத்துப்பத்தோடு பத்துக் குடும்பத்திற்குச் சோறு போடும் பெரிய மனுஷனாய் இருந்தவர் பூனை. தன் மகன்களுக்கு வாய்த்த பொண்டாட்டி மார்களில் மூன்று பேர் முழுநேரக் குடிகாரிகளாகி பூனையின் நல்ல பெயர் மீது சேரள்ளிப் பூசியதோடு அவர்களும் சீரழிந்து போனார்கள்.

பெருமாளைக் கைப்பிடித்த அந்த நாள் தொடங்கி தான் வாழவந்த குடும்பம் செல்லரித்த பனைவாரையாய்க் கொஞ்சம் கொஞ்சமாய் ஒன்றுமில்லாமல் போவதை எதுவும் செய்ய இயலாதவளாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள் பிச்சை.

அப்பன் ஆத்தாள் உடன் பிறந்த அண்ணன் தம்பி எல்லோரும் காட்டுக்குப்போய்ச் சேர பெருமாள் மட்டும்தான் மிச்சமிருந்தான். தன் அப்பனும் குடும்பமும் அகரத்தில் வாழ்ந்த வாழ்க்கையை ஆடுமாடுகளுடன் நடந்த படி நினைத்துப் பார்க்கும் அவன். தன் வீட்டில் அன்று ஒரு வேளைக் கஞ்சிக்குக் கையேந்தி நின்றவர்கள் இன்றைய நிலையைக் கண்டு தனியாகத் தனக்குத்தானே புன்னகைத்த படி நடப்பான். புதுப்பேட்டை சாலையையும் சுடுகாட்டையும் பனஞ்சாலையையும் பார்த்துப் பார்த்து எதையெதையோ நினைப்பான். மந்தைசாய்த்து மேய்ச்சலுக்கு விட்டவன் தன் தம்பி தேசிங்கின் சமாதியின் மேல் ஒரு பிடி சோறள்ளி வைத்துக் காகங்களை அழைத்து அவைகள் உண்பதை ஒரு அம்மாவைப் போல் பார்த்துக் கொண்டு நிற்பான்.

வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் பெருவலி பூனை மக்களில் மிச்சமாயிருந்த அந்த ஒற்றை மனிதனுக்குள்ளிருந்து வதைத்துக் கொண்டிருந்தது. அந்த உடலும் மனமும் சமநிலைதவறி அவனின் கட்டுப்பாட்டில் இல்லாமல் வேறெதுவோ அவனை ஆட்டுவித்தது.

ஆலமரத்தின் அத்தனை கிளைகளும் பட்டுப்போக உயிரிலைகளுடன் ஒரே ஒரு விழுது மட்டும் நின்றிருக்கும் கோரக்காட்சியைப் போன்றது அவனது நிகழ்காலம். அவனின் நிலையை எண்ணியெண்ணித்தான் பிச்சை மனதோடு மட்கி மண்ணைத்தின்று கொண்டிருந்தாள் தினம் தினம்.

O

புதுப்பேட்டை சாலையில் ஏதோ வண்டி வருவது போல் தெரிந்ததும் உற்றுப் பார்த்தாள். அமராவதி பெரியம்மாள் சாவுக்குப் போயிருந்தவன் அவளைக் கண்டதும் நின்றேன்.

“சின்னாம்மா தம்பி வந்துகீறாம் பாருத” என சாந்தி அக்கா பிச்சையிடம் சொன்னாள்.

“வா எப்பா வா ஒக்காரு எப்ப வந்த?”

ரேஷன் புடவை முக்காட்டை இழுத்து விட்டபடி ஆத்தாளின் அதே வாஞ்சையுடன் அழைத்தாள். மச்சினன் மகனெல்லாம் இல்லை. அவள்பெற்ற ஆறு பிள்ளைகளோடு நானும் ஒன்றெனத்தான் நன்றி பாராட்டுவாள் அந்த நல்லத்தங்காள்.

பூவெடுத்த எள்ளுச்செடி தளதளவென இளங்காற்றில் தள்ளாடிக்கொண்டிருந்தது. பின்மதியவெயில்தாழ்ந்திருக்க வயலையொட்டி கட்டப்பட்ட சாந்தி அக்காளின் கிழக்குப் பார்த்த கீற்றுக் கொட்டகை வீட்டின் சிமெண்ட் திண்ணையில் உடம்பை அப்படியும் இப்படியும் அசைத்து உட்கார்ந்தேன். கனிமொழி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

“சாவுக்குப் போயிவந்தயா எப்பா”

“அங்கதாம்மா இருந்தேன்…எடுக்க மூணு மணி ஆவுமாம். தாத்தா சமாதிக்கா போய் வரலான்னு வந்தேன். வெய்யிலாமா காயுது முர்ளி அண்ணன் பிரபுக்குலாம் சொல்லல.”

“முர்ளி அண்ணன் வந்துங்கீறானாம் பிரப்பு அதோ மஞ்சளா வூட்டாண்ட கள்ள குடிச்சிட்டு நட்டுங்கீறாரே பாக்கல”

“சாப்புட்டு வந்தியா எப்பா வூட்ட பச்ச மல்லாட்ட இருக்குது செத்த நேரம் இரு. அள்ளியாறேன்”

என்று எழுந்தவளை வேண்டாமென உட்கார வைத்தேன்.

ஊரில் நடந்தவைகளை அவள் சொல்லச் சொல்ல கேட்பது அத்தனை நயமாய் இருக்கும். தலையை ஆட்டி ஆட்டி கையை வீசி முகத்தை நெரித்துச் சுளித்து முறுக்கித் திருப்பி கோபமும் நக்கலும் நையாண்டியும் கலந்து அந்தச் சம்பவங்களைப் பிரதியெடுத்து அப்படியே பேசுவாள். அகரத்தில் செவியிருப்போர் அவளின் நாத்திறம் அறிவர். முந்தானையிலிருந்து ஒரு செரங்கா சூரப்பழத்தை அவிழ்த்துக் கொடுத்து விட்டு என் கால் மாட்டில் உட்கார்ந்தாள் பிச்சையம்மாள்.

“துன்னுவியாடா? தம்பி இத்த” சாந்தி அக்கா சந்தேகமாய்க் கேட்டாள்.

“பள்ளிக்கொடம் வுட்டுவந்தா துன்ன சோறு ஏதுக்கா அப்ப ஆத்தாங்கரயில முதுவுல முள்ளுமாட்டி இழுக்க இத்ததானக்கா பெறிச்சி துன்னுக்கின்னு கெடப்போம்”

“ஜமீன் கொய்யாக்கா. எளநீருதான் பாதிநாளு பசியாத்தனது தோ போறாரே தொர அவருக்கு என்னிக்கு வந்துச்சி இந்த காரு மூக்கொழுவனான் தூம ட்ரவுசுருல பட்டனு இல்லாம அண்ணா கவுத்துல தூக்கி வுட்டுக்கினு அலஞ்சவரு மேரியா தெரியுது”

ஏதோ அங்கலாய்ப்பும் ஆத்திரமும் பற்றிக்கொள்ள இருந்ததை மறந்து விட்டு புதுப் பணக்கார மிதப்போடு நடந்து கொள்ளும் யாரையும் எனக்குப் பிடிக்கவில்லை. ஏனோ அவர்களின் மீது வெறுப்பும் ஒவ்வாமையும் ஒரு சேர கவிந்தன. அதிலொருவனாய் இந்தப் பக்கமாய்த் திரும்பாமல் காரைத்திருப்பும் சந்திரனைப் பற்றிச் சொன்னதும்
கனிமொழி, பஞ்சமாமா பொண்டாட்டி, சாந்தி அக்கா என எல்லோருமாய்க் கொல்லெனச் சிரித்தார்கள்.

“கொழந்தைங்க கீதா எல்லாம் எப்பிடிகீறாங்க எப்பா ஏந்தான் வந்துகிந்துகூட போவ மாட்றீங்க”
-பிச்சையம்மாள் ஏக்கமோடு கேட்டாள். சூரப்பழக்கொட்டைகள் வாயில் சேர்ந்திருந்தன. அதக்கித் துப்பிவிட்டு வந்தேன்.

“எங்கம்மா நேரம் இருக்குது. இந்தப் பொம்பளய ஆஸ்பத்திரிக்கி இட்டுக்கின்னு அலையவே செரியா இருக்குது. மாசம் ரெண்டு வாட்டி ரத்த ஊசி தோ நாலுநாளா வந்து சோறுதண்ணி எடுக்காம உக்கும் கொட்டிக்கினு படுத்திருக்குது. அந்தப் பொண்ணும் பாவம். இன்னாமா பண்ணுவா”

“இன்னா அம்மா இப்பிடி சொல்றாளேன்னு நெனைக்காத எப்பாடி…
பொம்பளயாடா தம்பி அது நம்ம புள்ள நாலுபேருக்கு மனுசனா இருக்குதே நம்ம இப்படி பண்றது நாயமான்னு நெனச்சிப் பாக்கறாரா ? அவரு. ஆம்பள கெட்டான் எப்பா அந்த மகராசன் போய்ச் சேந்தான் ஒரு வூட்ல அம்மாத்தம்யான் கூடப்பொறந்த அண்ணந்தம்பி வூட்லகூட பச்சத்தண்ணி வாங்க மாட்டாரு…
இவுரு இன்னான்னா இந்த அகரத்தயே ஒரு ரவுண்டு வராரு இந்த சீம்சி செருப்பால அடிபட்ட பைய்யன் ஊர்ல வழிய வாட்டயப் போற நாயெல்லாம் ஒரு சொல்லு சொல்லுது. ஜென்மமே குன்னிப்போவுது எனுக்கு”

“அய்க் அய் அய்க் அய்ய மதிக்குதா பாரான் அது”
நெல்லில் இறங்கிய மாட்டை அதட்டியபடியே அம்மாவைப்பற்றி பிச்சையம்மாள் சொல்லச் சொல்ல ஆத்திரமாய் வந்தது. அவள் சொல்வது அத்தனையும் உண்மைதான். முன்பு சொன்ன அந்த மூன்று பேரில் அம்மாவும் ஒருத்தி.

“ஒடம்புதான் செரியில்லயே அந்தக் குடியத்தான் வுட்டுத் தொலையாந்தேன்னு கேட்டதுதாண்டா தம்பி…
‘ஓ நீதானா அவனுக்கு போன்பண்ணி போன் பண்ணி சொல்றதுன்னு’ வூட்டுக்கு வர்ரதே இல்ல.
வண்டி அந்தப் பக்கமாவே போவுது”

“நாயத்தக்கேட்டா ஆவல எப்பா அவங்களுக்கு. நம்ம வூட்டுக்கு வந்துகூட ரொம்ப நாள் ஆவுது”
பிச்சையம்மாளும் சாந்தி அக்காவும் மாறி மாறிச் சொன்னார்கள். ரெண்டாம் தடவையாக சூரப்பழக்கொட்டையை எட்டித் துப்பினேன்.

“எம்மா அந்தப் பொம்பளயப் பத்திப் பேசாதம்மா. திருந்தற ஜென்மமா அதெல்லாம் வுட்டுத்தள்ளு நைனா எப்படி கீறாரு அதச் சொல்லு மின்ன சொன்னயே அப்படித்தான் இருக்குறாரா? இப்ப ஒடம்பு பரவாயில்லையா?” என பெருமாள் அப்பனைப் பற்றி பேச்சுத் திரும்பியது.

“அத்தயேங் கேக்கற எப்பா இந்த கேசவுட மோசம் அது உங்கம்மா காரியையும் அவரையும் ஒரு ஏர்ல கட்டலாம். கொஞ்ச நஞ்சமான கூத்தா தோ பாத்துங்கீறாங்களே இவங்கள கேளான்”

வெற்றிலை எச்சிலை எட்டித் துப்பினாள்.

“வூட்ல ஒரு துணி மணி கெடயாது எப்பா எல்லாத்தயும் சுருட்டிக் கொன்னுமோயி ஆத்துல வெள்ளம் போச்சே அதுல போட்டுட்டு வந்துட்டான் மகராசன்”

“அய்ய அய்ய அப்பறம் நீ எங்கத போயிருந்த”

பிச்சையம்மாள் செருமிக்கொண்டே இன்னொரு தடவை எட்டி எச்சிலைத் துப்பினாள்.
பஞ்சமாமா பொண்டாட்டியும் சாந்தி அக்காவும் எளக்காரமாய் ஒரு சிரிப்பு சிரித்தார்கள்.

“வெள்ளத்துக்குப் பொருளு குடுக்கறாங்கன்னு கோயிலாண்ட போயிருந்தேன். அதுக்குள்ள இந்தக் கோலம்”

“அந்த அடமழயிலயும் குளுர்லயும் மாத்துக்குக் கூட ஒரு கந்த இல்ல தோ இத்தத்தான் எப்பா சுருட்டிக்கின்னு இருந்தேன்”

எனக் கட்டியிருந்த அந்தப் பழம் புடவையை இழுத்துக் காண்பித்தாள். ஊர்ப் பொம்பளைகள் முன்னால் ஒவ்வொன்றாய் நினைவைக் கிளறிச் சொல்லச் சொல்ல உள்ளுக்குள் ஒரு உறுத்தல் இருந்தது பிச்சைக்கு. எல்லோருக்கும் தெரிந்தது தானே புதுசா என்ன சொல்லப் போகிறோம் என்ற சுய சமாதானத்துடன் பெருமாள் அப்பனைப் பற்றி இன்னும் பேசினாள்.

“சின்னாம்மா சின்னாம்மா அந்த எள்ளு வெறச்சக் கதய சொல்லுத” சாந்தி அக்கா எடுத்துக் கொடுத்தாள்.

“பிரபு எள்ளுவெற வாங்கியாந்து வச்சிட்டு ஊருக்குப் போயிவந்து கழினிக்கிக் கெளம்பி எங்கத யம்மா எள்ளுன்னு? தேடறான் எப்பா வூட்ல இருந்த ஒரு அடுக்குப்பான வுடல எறக்கி எறக்கி எல்லாத்தையும் பாக்கறோம். வூட்ல வச்ச எள்ளு எங்கடி போயிருக்கும்னு நான் ஒரு பக்கம் தேடறேன் குட்டி செவுத்து மேல ஒக்காந்துகின்னு சொல்றாரு.”

‘எள்ளத்தான் வெறச்சிட்டு வந்துட்டன அப்பறம் இன்னாத்த தேடறீங்க ‘
இதைச் சொல்லி விட்டு பிச்சையம்மாள் ஒரு முக்கம் தெறித்தாள்.

“எங்களுக்கா ஒண்ணும் வெளங்கல. பிரபு என்ன மொறைக்கிறான்”

“யோவ் ஓட்டாத கழனியிலயா?”

“பின்ன இன்னா கழனி சும்மாக்கெடக்குது வெறய வாங்கி வூட்லயா பூட்டி வச்சிருப்பாங்க”

“அடங்கோத்தா பைத்தியக்கார தேவிடியா பைய்யான்னு பிரபு பூர்சங்கொம்ப ஒடிச்சிக்கினு ஓடியாறான் எப்பா போயிப்பாத்தா சால ஓரம் ஓட்டாத மூணு தளயிலயும் எள்ளு வெறச்சிருக்கறது தெரியுது. பில்லுக்கு நடுவுல அங்கொன்னும் இங்கொன்னுமா கண்ணுக்குத் தட்டுப்படுது…

வெறச்சி ரெண்டு நாள் ஆயிருக்குது வீராசாமிய கூப்டாந்து ஒரு சாலு ஓட்டிவுட்டுட்டு வந்தோம். அந்தவாட்டி சடசடயா காயின்னா காயி செடி மதிரிக்கின்னு கொத்துக் கொத்தா அம்மாத்தம் எள்ளு எப்பா அடிச்சி தூத்தி மூட்டக்கட்ட முடியல தோ
அத்தயக்கேளாம்” என்று பஞ்சமாமா பொண்டாட்டிப் பக்கம் திரும்பிச் சொன்னாள்.

பிச்சையம்மாள் சொல்லிக் கொண்டிருக்கும் நடுவே எனக்கொரு சம்பவம் ஞாபகம் வந்தது. ஒரு தடவை புதுப்பேட்டைக்கு வண்டியில் போய்க் கொண்டிருந்தேன். பூனைதாத்தா சமாதியையொட்டிய பனஞ்சாலையில் திபு திபுவென தீ மரத்தைப் பிடித்துக்கொண்டு ஆங்காரமாய் எரிந்தது. பச்சைச் செடிகளும் கொடிகளும் பொறிந்து எரிவதைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. எழும்பிய பெரும்புகை மண்டலம் அந்த இடத்தை நிரப்பி வடக்கே திரண்டு கொண்டிருந்தது.

மாடு மேய்த்துக் கொண்டிருந்த அண்ணாமலை அண்ணனிடம் கேட்டேன். “எண்ணா யார்ணா இத கொளுத்தி வுட்டது”

“சித்தப்பன்தாண்டா தம்பி மொண்டாடோத்த மொவன். எங்கப்பாரு நெருப்ப வச்சி வுட்டரான்டா. அதோ பார்ரா தம்பி முந்தாநாளு கொளுத்துன உயிரு பன மரம் குருத்தாட எரிஞ்சி உன்னும் பொகஞ்சிங்கீது பாரு”

பிச்சையம்மாள் தொடர்ந்தாள்

இந்த ஏழெட்டு வருசமா கொஞ்சமா? நஞ்சமா? நான் படற கங்காச. போன வெள்ளத்துக்கு எந்தெந்த ஊர்ல இருந்தோ அத்தினி வண்டி காருலயும் பஸ்சுலயும் வந்து வந்து எறங்கனாங்க எப்பா டீவியில பாத்துருப்பியே… 
கொஞ்சநஞ்சமான பொருளு கெடையாது. ஆணும்பொண்ணும் வாங்கிமோயி அடுக்குதுங்க, இந்த அகரமே நெரம்பிப் போச்சி. பதனாறு போர்வ எப்பா. போர்வயின்னா போர்வ இழுத்து ஒரு யேனய மூடலாம்
எல்லாத்தயும் எண்ணி மடிச்சி பீரோவுல வச்சிட்டு மாட்ட ஓட்டிமூட்டேன் பொழுதுக்க வந்து பாத்தா ஒண்ணுகூட இல்ல”

பிச்சையம்மாள் இடைவெளி விட்டு இரும்பிக்கொண்டாள்.

“எந்த திருட்டுப்பைய்யன் மக்க இந்த வேலபாத்தாங்கன்னு எறங்கி கேழியா கேக்கறேன் பாம்புகட்ச்சாமூட்டு மூர்த்தி அண்ணங்கீறானே அவந்தான் சொன்னான்”
‘இங்கயேந்த கத்திங்கடக்கிற சுடுகாட்டுக்குப் போயிப்பாருத சின்னாமான்னு’

“போயிப்பாத்தா சுடுகாடே வண்ணாந்தொற கணக்கா ஒரு சமாதிவுடாத எல்லாத்துக்கும் ஒரு ஒரு போர்வய எடுத்துப் போத்திவுட்டுட்டு இருக்குது எப்பா”

கிண்டலும் கேலியுமாய் “நீ வேறத ஆயா எல்லாருக்கும் குளுருமுன்னு எடுத்தும்போயி போத்துவுட்டுருப்பாரு” என கனி சிரித்தாள்.

“தோ போன மாசண்டா தம்பி…வூட்டுப்பின்னால இருக்கிற இந்தக் கழனியெல்லாம் கோதுமய மூட்டயாட தூக்கியாந்து நெல்லு வெறைக்கிறமேரி வெறச்சி வுட்டுட்டு நிக்கிறாரு இன்னாத சித்தப்பானு கேக்கறேன் கோதுமமா. வெளஞ்சா நீயுந்தான் நாலு மரக்கா அறத்துக்காம் அப்பிடின்றாரு” என சாந்தி அக்கா போனமாசக் கதையைச் சொன்னாள்.

எவ்வளவைத்தான் தாங்குவாள் பிச்சையம்மாள் என்றிருந்தது. ஆறுதல் சொல்லியெல்லாம் தேற்ற முடியாத அளவுக்கு அவஸ்தைகளையே உடம்பாகச் சுமந்து கொண்டிருக்கிறாள் அவள் என்று அன்றுதான் தெரிந்தது எனக்கு.

“ஏதாவது டாக்டர் கிட்ட இட்டுமோயி பாக்கலாமாமா?”

“எம்மாங்கோடி டாக்டரு. எந்தெந்த ஊரு. காசு பணன்னு பாத்தனா த  இந்த மொன மூக்குல இருந்தது கூட இருக்குதான்னு பாரு எஞ்சத்துக்கு எம்மாத்தம் முடியுமோ எல்லா எடத்தயும் இட்டுமோயிப் பாத்துட்டேன்…

அது ஒடம்பத்த நோவு எப்பா, எல்லாத்தயும் சொல்லிட்டாங்க. மரக்காணத்துல பூமிஸ்வரன் கோயிலாண்ட கீறாரே அந்த சாமியாருதான் கண்ணாடியில பாக்கற மேரி ஒண்ணுவுடாம எல்லாத்தயும் புட்டுப் புட்டு வச்சிட்டாரு”

“பனங்கா வுழுந்து வெய்யில்லயே கடந்து மூஞ்சிப்பக்கம் அப்பிடியே சுருங்கிப்போவுமே அதுமேரி சுருங்கிடுச்சாம் அவரு மூள என்னதான் பண்ணாலும் அது தெளியாதுன்னு சொல்லிட்டாரு எப்பாடி”

பிச்சையம்மாளுக்குத் தெரிந்த இந்த வாழ்வுக்கான ஆதார நம்பிக்கைகள் எல்லாமும் காய்ந்து மட்கிய உமரஞ்செடி தட்டியெனக் கண்முன்னே ஒடிந்து விழுந்து கிடந்தது.

பெருமாளின் போக்கால் பெரிதாக நொந்து போயிருந்தாள் அவள். ஊருக்குள் போகவே கூசிப்போனாள். என்னிடம் சொன்னது பாதியும் சொல்லாதது மீதியுமாய் மென்று விழுங்கினாள்.

சொந்தக்காரிகளுக்கும் அக்கம் பக்கத்தாருக்கும் இது குறித்த எந்த வருத்தமும் இல்லை. கூத்தாடி கோமாளி போன்ற கணநேர சுவாரஸ்யம்தான் பெருமாளின் கதை அவர்களுக்கு. இப்போது பக்கத்தில் உட்கார்ந்து கேட்டுக்
கொண்டிருக்கும் இவர்கள் பேசும் தொனியிலிருந்தே அது புலப்படுகிறது. மாறாக எல்லோருக்கும் உள்ளூர ஒரு குதூகலமும் குரூர ரசிப்பும் இருந்ததாகவே எனக்குப்பட்டது. மனிதர்கள் அவ்வளவுதான்.

போன அமாவாசைக்கு முந்தைய நாள் பெருமாள் அப்பன் வீட்டிலிருந்த மிளகாய், மல்லாட்டை, கெவுரு எல்லாவற்றையும் மொத்தமாய்க் கொட்டி வாட்ட வாராபதி குட்டையில் கொண்டு போய்க் கொட்டிவிட்டு வந்தான். ஆடுமாடு தின்ற மீதியைக் கூடை முறம் பின்னும் நோக்கணும் அவன் பொண்டாட்டியும் அள்ளிப்புடைத்துத் தூற்றி வாரிக் கொண்டு போனார்கள்.

பிச்சையம்மாள் காய்ந்த மல்லாட்டையை வறுத்து ஆறவைத்து விட்டு பால் கறந்து விட்டு வருவதற்குள் முறத்தோடு வாரி சூரக்கொள்ளை விட்டதைக் கண்டு அவள் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.

“நீ மாட்டுக்கினு பொறுப்பு இல்லாத கொள்ளுமோட்டு மசானக்கொள்ளக்கிப் போவாம வுட்டுட்ட. நானும் போவல அதுக்குத்தான் கொள்ள வுட்டேன். கழனியில வெளஞ்சதாச்சே அதுக்குப்போயி அழுவுற” என அவன் ஞாயத்தோடு பெருமாள் அப்பன் பூவரசங்கிளையைப் பிடித்துக்கொண்டு சாதாரணமாய்ப் பேசினான்.

பிச்சையம்மாள் மிச்சமிருப்பதையும் கொட்டி ஆத்தினாள்.

“தீவாளிக்கி சீட்டுப் போட்டு அரிசி, கோதும, கடுவு, உளுந்து, கடலப் பயிரு, சீரவம், மொளவு, எல்லாம் வாங்கியாந்து வச்சிருந்தேன். பிரிச்சிக்கூடப் பாக்கல. எல்லாத்தயும் மொத்தமாக்கொட்டி கலந்து வூட்ல இருந்த ரேஷன் காடு, ஆதார்காடு, பேங்க்கு புக்கு, ஏரிவேலக்காடு எல்லாத்தையும் அதலயே போட்டு மூட்டக்கட்டி ரோட்டப்போன குறிகாரன் தலமேல தூக்கி அனுப்பிட்டாரு”

“இங்க யாரும் பாக்கலயா”?

“பாக்கலயா எல்லாம் வேடிக்க பாக்கறாங்க இன்னா ஏதுன்னு ஒருத்தரு கேக்கப் போறாங்க”

“ராமசாமி அண்ணமூட்டு கழனியத் தாண்டிப் போய்ட்டான். பிரபு தண்ணிப் பாய்ச்சிங்கீறான். ஓட்டமா ஓடி புடிக்கச்சொல்லி எறக்கிப் பிரிச்சிப் பாத்தா அத்தயேங் கேக்கற காடுங்கள மட்டும் எடுத்துக்கிட்டோம். எல்லாம் ஒண்ணாட ஒண்ணு பெசிரிக்கின்னு ஒண்ணுத்துக்கும் ஒதவுல அப்படியே தூக்கிக் கொரங்குகிட்டதான் கொட்னேன்.”

“இன்னாதாம்மா அவருக்குப் பாத்தா நெதானமா நல்லாதான் பேசறாரு”

‘ஒருவனை உட்புறமாக அறிந்து கொள்ள உலகில் எந்தக் கண்ணாடி இருக்கிறது? ஒருவருக்கொருவர் எவ்வளவு அருகில்தான் நின்றாலும் உள்ளுக்குள் நினைப்பது அவ்வளவு எளிதாய்ப் புலப்பட்டு விடுகிறதா என்ன?

உடலால் அனுபவிக்கும் அவஸ்த்தைகளைக் காட்டிலும் மனதால் அனுபவிக்கும் அவஸ்த்தைகள் கொடியதல்லவா…

“தோ போன செவ்வாக்கெழம ராத்திரி ஒரு கெடாக்குட்டிய புட்ச்சிகினு போயி ஜமீனான்ட இருக்குதே ஐனா கோயிலு அதும் வாசல்ல கட்டிட்டு அங்கயே படுத்துக்கினு கீறாரு. ஆட்டுக்குட்டி மேல ஊருபட்ட மஞ்சாகுங்கத்தப் பூசி செடியில கட்னக்குட்டி கட்ன வாக்குல நிக்குதாம்… இன்னாடி இதுன்னு வேலைக்குப் போன பொம்ளைங்க குட்டியமட்டும் அவுத்து இட்டாந்துட்டுக் கீறாளுங்க …அவங்கள கேயின்னா கேயி எப்பா அம்மாங்கொந்த கேயாம்”

பெருமூச்சு விட்டபடி கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன். பிச்சையம்மாளின் குரல்கொஞ்சம் உடைவது போலிருந்தது. இவ்வளவு நேரம் அவள் சொல்லிக்கொண்டிருந்த தொனி மாறுவதைக் கவனித்தேன். இவ்வளவையும் மனம் விட்டு வேறு யாரிடமும் சொல்லியிருப்பாளா? என்று தெரியவில்லை.

“இதெல்லாம் கூட பரவாயில்ல எப்பா. எம்புள்ளதான் செத்தா நீதான் வந்து தூக்கிப் போடபோற…

ஒரு மணி உச்சி வெய்யிலு பொம்பளைங்க மல்லாட்டக்கள கொத்திங்கீறாளுங்க. ஒடம்புல பொட்டுத்துணி கெடயாது புதுப்பேட்ட ரோட்டுக்கா அவரு பாட்டும் நடந்து போறாரு பின்னாலயே கத்திக்கினு ஓடறேன். எல்லாம் நின்னு பாக்கறாங்க. என்னால ஓட முடியல எரப்பு இழுக்குது. மண்ணுத் தடுக்கி வுழுந்து எழுந்து ஓடி கட்டியிருந்த பொடவய ஒரு மொனய அவுத்து மூடி ரோட்டவுட்டு எறங்கி கருக்கங்கன்னு பக்கமா இட்டாந்து நிக்கிறேன்”

பிச்சையம்மாவால் அதற்கு மேல் பேசமுடியாமல் நெஞ்சு குழறி கமுறி அழுதபடி முந்தானையை இழுத்து மூக்கை உறிஞ்சித் துடைத்தாள். என் கையில் இருந்த தண்ணீர் சொம்பு நடுங்கிக் கொண்டிருந்தது.


Art : Daisei Terazono

முத்துவேல் .
முத்துவேல் .
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (4)
  • கட்டுரை (100)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (4)
  • கட்டுரை (100)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top