Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

மீளுதலை விரும்பும் சொற்கள்

சு. ராம்தாஸ்காந்தி
சு. ராம்தாஸ்காந்தி
December 1, 2025
மீளுதலை விரும்பும் சொற்கள்

சுயம்

நாமே தொலைத்துக்
கடந்து, மறந்து
வெகுதூரம்
விட்டகன்றுவிட்ட
சுய அடையாளத்தை,
நகர்வலம் முடிந்து
சொந்த ஊர் செல்லும்
பேருந்திற்காகக் காத்திருக்கும்
நிமிடங்களிலான உரையாடலில்
யாரோ ஒருவர்
நினைவூட்டும் பொழுதில்
தற்கணத்தின் கீழ்மைகள் யாவும்
சிரசிலிருந்து கழன்று விழுந்து
தூய்மையின் எஞ்சிய உடலத்திலிருந்து
கலங்கி வழியும் உணர்தலில்
வாழ்வின் பொய்க்காத சூத்திரம்
வென்று விடுகிறது.


மனநிலை

முதன்முதலாக
சொந்த ஊர்
அசூயையாகத்
தோன்றுபவனின்
தொப்புள்கொடி
சன்னமாகப்
பழுதடையத் தொடங்குகிறது.


கடமை

மட்கல் வாடை மிகுந்த
பழையதின் வன்மம்
வரிசைக்கிரமமாக
மனக்கண்ணில் வந்து
நிற்கிறபோதும்
தலைக்குச் சிறுத்த
வளையத்திற்குள்
முகத்தை நுழைத்து விட்டு
பாதையைத் தேடும்
ஒரு நான்குகால்
பிராணியைப் போல
நீங்கள் என்னை
மன்னித்து
அணைத்துக் கொள்ள வேண்டும்.


உண்மை

‘பாசாங்கிற்கு’
அழைத்தபோதுதான்
சடாரெனக்
கைகளை உதறியது
என் கண்ணீர்.


நேசம்

என்னை
முழு முற்றாக
வெறுப்பதற்கான
சாத்தியக்கூறுகள்
மிகுந்திருக்கிறபோதும்
ஒரு அசுத்தத்தை
அப்புறப்படுத்துகிற
குறைந்தபட்ச தர்மத்தின்
ரீதியிலாவது
நீங்கள் என்னை
நேசிக்க வேண்டும்.


ஆறுதல்

“தைரியமாக இரு“
சொல்ல யாரும்
இல்லாவிடினும்
நமது
சுயநலத்திற்காகவேனும்
இருக்கத்தான்
வேண்டியிருக்கிறது
’தைரியமாக?’


பலி

ஆறுதலை
அடுத்தவரிடத்தில்
தேடத் தோன்றாத அல்லது
கிடைக்காத
விரக்தியின் மனம்
ஒரு பெரும் எரிதலுக்குத்
தயாராகும்
ஈர அடுப்பைப் போல
புகையத் தொடங்குகிறது.


பாலாஜி மில் ஸ்டாப்

கழியில் முடியப்பட்டு
நீளும் கயிற்றில்
நான் நடை பயில்வதாகத்
தோன்றுகிறது
தாளம் தட்டுகிற தகப்பன்
கழைக்கூத்தாடிகளைப் போல
கீழே இல்லை,
என் தலைக்கு மேலமர்ந்து
தடுமாற்றம் ரசிப்பவன்
என்னைக் கைவிட மாட்டானென்று
நம்புகிறேன்.


நம்பிக்கை

கையாலாகாத வன்மம்தான்
உயிரைத் தக்க வைத்திருக்கிறது
சுயத்தின் பிடியில்
நடை இல்லையெனினும்
வரையறுக்கப்படாத
எதிர்காலத்தின் பாதையை நம்பிக்
கால்கள் நீள்கின்றன
துடைப்பாரற்றுத் தரையில் வீழ்ந்து
உலர்ந்து போன கண்ணீர்த் துளிகளின் காரணம் கேட்டு ஆறுதல் பகிர
வறண்ட நதியின் செந்நீர் வெள்ளம் போல
என்றேனும் ஒரு நாள்
செகசோதியாக நான் வருவேன்.


நீ

கொஞ்சம் வறுத்த ஈசலோடும்
நான்கு முறிந்த காளான்களோடும்
ஓதமேறிய என் குடிசைக்குத் திரும்பும்
மழைக்காலம் போல ‘நீ ’
என்னிடம் மீண்டும் வருவாயென
நான் ஒரு எளிய சம்சாரியைப் போல்
நம்புகிறேன்!


Art : MONTAUK

சு. ராம்தாஸ்காந்தி
சு. ராம்தாஸ்காந்தி
பழனி அருகேயுள்ள மானூர் கிராமத்தில் சுப்பிரமணி – பார்வதி (சின்னப்புள்ள) இணையருக்கு மகனாகப் பிறந்த சு.ராம்தாஸ்காந்தி வேதியியல் மற்றும் கல்வியியலில் இளங்கலைப் பட்டங்கள் பெற்றவராவார்.
மணல்வீடு சிறுபத்திரிகையில்  இவரது முதல் இரண்டு கவிதைகள் வெளியானதைத் தொடர்ந்து நடுகல், வாசகசாலை, சீர், குறி, உயிர் எழுத்து, பேசும் புதிய சக்தி, கொலுசு, உயிர்வனம், புக்டே

போன்ற பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள் மற்றும் கட்டுரை எழுதியிருக்கிறார்.

மனித உறவுகளுக்கிடையே ஊடாடும் கீழ்மைகள், தனிமை, அன்பிற்கான ஏக்கம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பாடுபொருளாகக் கொண்டுள்ள இவரது கவிதைகள் விரைவில் தொகுப்பு வடிவம் காண்பதற்கான கனவைச் சுமந்து நிற்கின்றன.

இலக்கியம், சினிமா, ஆன்மீகம் மற்றும் மெய்யியல் தத்துவங்களில் ஆர்வமிக்க இவர் நாதஸ்வரம், கரகாட்டம் மற்றும் எஸ்.ஜானகி பாடல்களின் பெரும் ரசிகர். தற்போது சொந்த ஊரிலேயே
வசித்து வருகிறார்.
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025
  • வண்ணார் : வரலாறும் வலிகளும்

    வண்ணார் : வரலாறும் வலிகளும்

    December 2, 2025
  • பொலி எருமை

    பொலி எருமை

    December 2, 2025

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (67)
  • கட்டுரை (1)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)

Archives

  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (67)
  • கட்டுரை (1)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top