Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

இன்கா நாடோடிக்கதைகள் – 10 : மலைக்கழுகு தேடிய மனைவி

எழில் சின்னதம்பி
எழில் சின்னதம்பி
May 1, 2026
இன்கா நாடோடிக்கதைகள் – 10 : மலைக்கழுகு தேடிய மனைவி

ஒரு மலைக்கழுகு ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ஓர் அழகிய இளம் பெண்ணின் மேல் காதல் கொண்டது. அந்த மலைக்கழுகு ஓர் அழகான இளைஞனாக உருமாறி, அவளுடைய ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த இடத்திற்கு வந்து அவள் அருகில் நின்றது.

“நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று அவன் கேட்டான்.

“நான் என் ஆட்டு மந்தையை மேய்க்கிறேன்” என்று அவள் பதிலளித்தாள். “நான் பாடல்கள் பாடுவேன், என் ஆட்டுக்குட்டிகளை உண்ண வரும் நரியையும், என்னைத் தன் நகங்களால் தூக்கிச் செல்ல முயலும் பெரிய கழுகையும் என் கவண் கொண்டு விரட்டுவேன்.”

“நான் உன்னுடன் தங்கி, நரியை விரட்டவும் கழுகைப் பயமுறுத்தவும் உனக்கு உதவட்டுமா?”

“ஓ, வேண்டாம்” என்று அவள் பதிலளித்தாள். “எனக்கு உன் உதவி தேவையில்லை. உன் உதவி கிடைத்தால், நான் என் சுதந்திரத்தை இழந்துவிடுவேன். நான் என் ஆடுகளை நேசிக்கிறேன்; சுதந்திரமாக இருக்கவும், தனியாக இருக்கவும், பாடி மகிழவுமே நான் விரும்புகிறேன். எனக்குத் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை.”

“அப்படியானால் நான் போகிறேன். ஆனால் நீ என்னைக் காண்பது இதுவே கடைசி முறை அல்ல” என்று சொல்லிவிட்டு நீங்கியது இளைஞன் வேடத்தில் இருந்த கழுகு.

அடுத்த நாள், அந்தக் கழுகு மீண்டும் இளைஞனின் வேடத்தில் வந்தது.

“நாம் பேசலாம் அல்லவா?” என்று அவன் அந்த ஆடுமேய்க்கும் பெண்ணிடம் கேட்டான்.

“ஆம், பேசலாமே” என்று அவள் கூறினாள். “சொல், நீ எங்கிருந்து வருகிறாய்?”

“நான் இடிமுழக்கத்திற்கு அருகிலுள்ள உயர்ந்த மலைச் சிகரங்களிலிருந்து வருகிறேன்” என்று அவன் கூறினான். “விடியலின் முதல் ஒளியையும், மாலையின் கடைசி ஒளியையும் நான் காண்கிறேன். அங்கிருக்கும் பளபளப்பான பனிக்கு நடுவே நான் தூய்மையான தனிமையையும் மேலான அமைதியையும் அனுபவிக்கிறேன். நீ என்னுடன் அங்கு வரமாட்டாயா? நீ ஆகாயத்தின் அரசியாக இருப்பாய். தெளிந்த நீல வானம் நமக்குக் கூரையாக இருக்கும்; பள்ளத்தாக்கின் ஆழத்திலிருந்து பூக்கள் அவற்றின் நறுமணத்தை மேலே அனுப்பி வைக்கும். என் அன்பே, நீ அங்கு வரமாட்டாயா?”

“இல்லை, உன்னுடைய மலைச் சிகரங்கள் மேல் எனக்கு அக்கறை இல்லை. நான் என் புல்வெளியையும் என் ஆடுகளையும் மட்டுமே விரும்புகிறேன். மேலும் நான் என் தாயை மிகவும் நேசிக்கிறேன். நான் போய்விட்டால் அவள் எனக்காக வருந்தி அழுவாள்.”

“நான் இனி எதையும் சொல்ல மாட்டேன்,” என்றான் அவன். “ஆனால் எனக்கு ஒரு சிறிய உதவி செய். என் தோளுக்குப் பின்னால் ஒரு எரிச்சலான அரிப்பு உள்ளது. நான் சொறிந்து கொள்வதற்கு உன்னுடைய உடையில் இருக்கும் நீண்ட ஊசியையாவது தருவாயா?”

அந்த இளம் பெண் அவனிடம் ஊசியைக் கொடுத்தாள், அவன் அதைப் பயன்படுத்தி முடித்ததும் நன்றி சொல்லி அங்கிருந்து சென்றான்.

அடுத்த நாள், அதே இளைஞன் மீண்டும் வந்தான். “நீ என்னை வசீகரித்துவிட்டாய்” என்று அவன் கூறினான். “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது. இப்பொழுதே என்னுடன் வந்துவிடு.”

“இல்லை, நான் வரமாட்டேன்” என்று அவள் கூறினாள். “என் ஆடுகள் என்னைத் தேடும். நான் இல்லாமல் என் தாய் வருத்தப்பட்டு அழுவாள். நீ இங்கிருந்து சென்றுவிடு!”

“ஆ!” என்று அவன் அலறினான், “என் தோளுக்குப் பின்னால் அதேபோன்ற எரிச்சலான அரிப்பு உள்ளது. அல்பாக்கா கம்பளியைப் போன்ற மென்மையான உனது விரல்களால் அதைத் தேய்த்துவிட்டால், நீ என்னை என்றென்றும் குணப்படுத்திவிடுவாய். தயவுசெய்து எனக்கு உதவுவாயா?”

அவன் குனிந்தபோது, அந்தக் கவனக்குறைவான இளம் பெண் அவன் முதுகில் ஏறினாள். அவள் தன் தோள்களில் அமர்ந்திருப்பதை உணர்ந்த அடுத்த நொடி, அவன் ஒரு பெரிய கழுகாக மாறி, தன் இறக்கைகளுக்கு இடையில் அந்த அழகிய சுமையுடன் வானத்தை நோக்கி வேகமாகப் பறந்தான். அவர்கள் மேலே உயர்ந்தார்கள். ஒரு நீண்ட பயணத்திற்குப் பிறகு மலையின் உச்சிக்கு அருகிலுள்ள ஒரு குகையை அடைந்தார்கள். அந்தக் குகையில் கழுகின் தாய் வசித்து வந்தாள்; அவள் மங்கிப்போன இறக்கைகளைக் கொண்ட ஒரு வயதான பெண்மணி. அதே சிகரத்தில் உள்ள மற்ற குகைகளில் மற்ற கழுகுகள் வசித்து வந்தன. அது ஒரு பெரிய கூட்டம். அந்த இளம் பெண்ணின் வருகையைக் கழுகுகள் மகிழ்ச்சி ஆரவாரத்துடனும், பலமாகச் சிறகுகளை அடித்தும் வரவேற்றன. கழுகின் வயதான தாய் அவளைக் கண்டதில் மகிழ்ச்சியடைந்தாள். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைத் தன் பெரிய இறக்கைகளால் ஆவலோடு அணைத்துக்கொண்டாள். அந்தப் பெண் தன் இளம் கழுகுடன் மகிழ்ச்சியாக இருந்தாள். அவன் அன்பாக இருந்தான். ஆனால் அவன் அவளுக்கு உண்பதற்கு எதையும் கொண்டு வரவில்லை.

கடைசியில் அவள் அவனிடம் சொன்னாள்: “உன்னுடைய கனிவான அரவணைப்புகள் என் இதயத்தை மகிழ்ச்சியடையச் செய்கின்றன. ஆனால் நான் பசியால் பலவீனமடைந்து வருகிறேன். நான் உண்ணவும் பருகவும் வேண்டும் என்பதை மறந்துவிடாதே. எனக்கு நெருப்பு வேண்டும். எனக்கு இறைச்சி வேண்டும். மண்ணில் விளையும் நல்ல பொருட்கள் எனக்குத் தேவை. என் அன்பே, எனக்குப் பசிக்கிறது; தாகமாகவும் இருக்கிறது.”

கழுகு பறந்து சென்றது. கவனிக்கப்படாமல் இருந்த ஒரு சமையலறையைக் கண்டுபிடித்து, அங்கிருந்த அடுப்பிலிருந்து சில எரியும் கரிக்கட்டைகளைத் திருடி வீட்டிற்கு எடுத்துச் சென்றது. அது தனது அலகால் மலைப்பகுதியில் ஒரு நீரூற்றைத் திறந்து தெளிவான நீரைக் கொண்டு வந்தது. கீழே வெகு தொலைவில் உள்ள வயல்களிலிருந்தும் பாதைகளிலிருந்தும், இறந்த விலங்குகளின் இறைச்சித் துண்டுகளைச் சேகரித்து வந்தது. அது தோட்டங்களைத் தோண்டி உருளைக்கிழங்குகளை வீட்டிற்கு எடுத்து வந்தது.

அந்த இறைச்சி துர்நாற்றம் வீசியது. உருளைக்கிழங்குகள் அழுகிப் போயிருந்தன. பசியைத் தாங்க முடியாமல், அந்த இளம் பெண் அந்த அருவருப்பான உணவை உண்டாள். அவள் ரொட்டி சாப்பிட ஆசைப்பட்டாள். ஆனால் கழுகால் அதைக் கொண்டுவர முடியவில்லை.

இதற்கிடையில், அந்த இளம் பெண்ணின் தாய் தனது வெறிச்சோடிய வீட்டில் அழுதுகொண்டிருந்தாள். அந்த இளம் பெண்ணுக்கும் வீட்டின் ஞாபகம் வந்தது. கெட்டுப்போன உணவாலும் தனது காதல் கழுகின் இடைவிடாத அரவணைப்புகளாலும் அவள் சோர்வடைந்தாள். அவள் உடல் மெலிந்து போனாள்; அவளுடைய உடலில் இறக்கைகள் முளைத்தன. அவள் முட்டையிட்டாள். அவள் உண்மையில் அந்தக் கழுகின் மனைவியாகவும், ஆகாயத்தின் அரசியாகவும் மாறிவிட்டாள். ஒருநாள் தன் தந்தையைப் போலவே வானத்தில் அச்சமின்றிப் பறக்கப்போகும் குஞ்சுகளைப் பொரிக்கும் வேலையை அவள் செய்தாள்.

இருந்தாலும், கைவிடப்பட்ட அவளுடைய தாய் தன் வீட்டில் ஆறாத துயரத்துடன் அழுதுகொண்டிருந்தாள். அவள் மீது இரக்கம் கொண்டு, அக்கம் பக்கத்தில் வசித்த ஒரு கிளி வந்து அவளிடம் பேசியது: “அன்புள்ள பெண்ணே, அழாதே. உன் மகள் உயர்ந்த மலைகளில் உயிருடன் இருக்கிறாள். அவள் பெரிய மலைக்கழுகின் மனைவி. ஆனால், உன் தோட்டத்தில் உள்ள சோளத்தை எனக்குத் தந்து, உன் மரங்களில் நான் அமரவும் கூடு கட்டவும் போதுமான இடத்தை அளித்தால், நான் அவளை உன்னிடம் திரும்ப அழைத்து வருவேன்.”

தாய் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டாள். அவள் கிளிக்குத் தனது சோளம் முழுவதையும் கொடுத்து, தனது மரங்களில் கூடு கட்டவும் இடம் கொடுத்தாள்.
கிளி உயர்ந்த மலைச்சிகரத்திற்குப் பறந்து சென்றது. கழுகுகள் கவனக்குறைவாக இருந்த ஒரு தருணத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த இளம் பெண்ணைத் தூக்கிக்கொண்டு, அவளது தாயிடம் கொண்டு வந்து சேர்த்தது. அந்தப் பெண் மிகவும் மெலிந்து போயிருந்தாள்; தான் உண்ட மோசமான உணவினால் அவளது உடலில் துர்நாற்றம் வீசியது. அவளைச் சுற்றித் தொங்கிய பளபளப்பான இறக்கைகள், ஒரு மனிதர் பறவையைப் போல வேடமிட்டிருப்பது போன்ற ஒரு விசித்திரமான தோற்றத்தை அவளுக்கு அளித்தன. ஆனால் அவளது தாய் அவளை மகிழ்ச்சியுடன் வரவேற்றாள். தன் கண்ணீரால் அவளது உடலைக் கழுவினாள். அவளிடம் இருந்த மிகச்சிறந்த ஆடைகளை மகளுக்கு உடுத்தினாள். பின்னர் அவளைத் தன் மடியில் அமரவைத்து, எல்லையற்ற திருப்தியுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தான் இழந்த காதலால் துயரமும் கோபமும் அடைந்த மலைக்கழுகு, அந்தக் கிளியைத் தேடிப் புறப்பட்டது. தோட்டத்தில் சோளத்தைத் தின்று வயிறு புடைக்க, மரத்திற்கு மரம் திருப்தியுடன் பறந்து கொண்டிருந்த கிளியை அது கண்டுபிடித்தது.

கழுகு கிளியின் மீது பாய்ந்து அதை அப்படியே முழுதாக விழுங்கியது. ஆனால் கிளி கழுகின் உடலுக்குள் நேராகச் சென்று மறுமுனை வழியாக வெளியே வந்தது. கழுகு அதை மீண்டும் விழுங்கியது; கிளி மீண்டும் பின்புறம் வழியாக வெளியே வந்தது. ஆத்திரமடைந்த கழுகு, கிளியைப் பிடித்துத் தனது கூர்மையான நகங்களால் துண்டு துண்டாகக் கிழித்து, ஒவ்வொரு துண்டாக விழுங்கியது. ஆனால் அது விழுங்கிய ஒவ்வொரு துண்டிலிருந்தும், ஒரு அழகான சிறிய கிளி மறுமுனை வழியாக வெளியே வந்தது. இதிலிருந்துதான் இன்று நாம் காணும் சின்னஞ்சிறு கிளிகள் உருவானதாகச் சொல்லப்படுகிறது.

துயரம் நிறைந்த அந்த மலைக்கழுகு தனது மலைக்குத் திரும்பியது. துக்கத்தின் அடையாளமாகத் தனது இறக்கைகளைக் கருப்பு நிறமாக மாற்றிக்கொண்டது. அது விட்டுச் சென்ற கண்ணீர்த் துளிகள், அடுப்புக்கு மேலே பட்டாம்பூச்சிகளைப் போலச் சுழலும், காற்றில் மிதக்கும் சாம்பல் துகள்களாக மாறின. அந்தப் பெண்ணின் நினைவிலேயே இருந்த அந்த மலைக்கழுகு இறுதியில் உயிரை விட்டது.


 

எழில் சின்னதம்பி
எழில் சின்னதம்பி
பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி.
சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு – தரப்பகுப்பாய்வு இயக்குனராகப் பணிப்பொறுப்பு.

மொழிபெயர்ப்புக் கதைகளும், கலை இலக்கியக் கட்டுரைகளும் கல்குதிரை, சிறுகதை, தினவு, தடாரி, காலச்சுவடு, சிறுவர்களுக்கான ‘இயல்’ போன்ற இதழ்களில்  வெளியாகியிருக்கின்றன. மாய எதார்த்தக் கதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு ‘கடைசி வருகை’ முதல் புத்தகம், மார்ச் 2022-ல்வெளியானது. ‘லத்தீன் அமெரிக்கப் பெண்ணெழுத்து’ எனும் இரண்டாவது மொழிபெயர்ப்புத் தொகுப்பான ‘கடலோடியின் மனைவி’ 2024 டிசம்பரில் வெளியானது. ‘இயல்திரிபுப் புனைகதைகளின்’ மொழிபெயர்ப்புத்தொகுப்பான ‘சிலந்தி’ டிசம்பர் 2025ல் வெளியாகியிருக்கிறது.
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • தூக்கிடல்

    தூக்கிடல்

    May 1, 2026
  • அறியாமையின் கண்கள்

    அறியாமையின் கண்கள்

    May 1, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 10 : மலைக்கழுகு தேடிய மனைவி

    இன்கா நாடோடிக்கதைகள் – 10 : மலைக்கழுகு தேடிய மனைவி

    May 1, 2026
  • மறதியிலிருந்து (1920)

    மறதியிலிருந்து (1920)

    May 1, 2026
  • ஒளியின் பிரகாசிக்கும் பெருமிதங்கள் (பாகம் – 3)

    ஒளியின் பிரகாசிக்கும் பெருமிதங்கள் (பாகம் – 3)

    May 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (9)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (103)
  • கட்டுரை (5)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (82)
  • கவிதை (15)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (47)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (43)
  • வாழ்வியல் (2)

Archives

  • May 2026 (9)
  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • தூக்கிடல்

    தூக்கிடல்

    May 1, 2026
  • அறியாமையின் கண்கள்

    அறியாமையின் கண்கள்

    May 1, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 10 : மலைக்கழுகு தேடிய மனைவி

    இன்கா நாடோடிக்கதைகள் – 10 : மலைக்கழுகு தேடிய மனைவி

    May 1, 2026

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (9)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (103)
  • கட்டுரை (5)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (82)
  • கவிதை (15)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (47)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (43)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top