வித்யா விவேக் ஊட்டியில் பிறந்தவர். மார்க்கெட்டிங் மற்றும் மனிதவளத்துறையில் பட்ட மேற்படிப்பை முடித்துள்ள இவர் பள்ளி, கல்லூரிப் பருவங்களில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் பெரும் ஈடுபாடு கொண்டவராக இருந்துள்ளார். இயற்கையும் இறையும் மட்டுமல்லாது மரபார்ந்த சிந்தனைகள், வாழ்வியல் இவரின் வண்ணங்களில் பெரும் பங்கு வகிக்கின்றன. அன்றாட வாழ்வை உருவ ஓவியங்களாக்க வேண்டும் என்பதில் பெரு விருப்பமுடையவராகத் திகழ்கிறார். தன் தந்தையின் பணிநிமித்தம் காரணமாக அரவங்காடு, நாக்பூர் என வெவ்வேறு இடங்களில் புலம்பெயர் வாழ்வை மேற்கொண்டவர், 2018 ஆம் ஆண்டு முதல் அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரில் வசித்து வருகிறார். அங்கு பிறநாட்டுக் கலைஞர்களுடன் இணைந்து கலைச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

Leave a Reply