தீக்கற்றை
தீ தன்னைத் தானே பரவச் செய்யும்
அதில் மிதமும், மிகையும் காலத்தைப் பொறுத்தமையும் – தீ
பொழுது – 06
ஒரு மனத்தை
அமைதியுறச் செய்தல்
இலகுவானதுதான்
அதோ
அந்த மெல்லிய எரியும் தீயில்
எந்த முணுமுணுப்புமில்லை
பொழுது – 07
இங்கு எல்லாம் விழித்துக் கொள்கின்றன
எல்லாவற்றிலும் விழித்திருத்தல் மிக நல்லது
துளி தீ போதும்
பெருந்தீ பற்றிக் கொள்வதற்கு.
பொழுது – 08
என் நிழல்
என்னைத்தான் பின் தொடர வேண்டும்
எரியும் தீயில்
சரி, தவறென எதுவுமில்லை.
பொழுது – 09
இங்குத் தனியாய்ச் செய்ய எதுவுமில்லை
தேவைகள் முடிந்த பின்
நாம் நகர்த்தப்படுவோம்
அல்லது
நகர்ந்து கொள்வோம்
பற்றியெரியும் குப்பைத் தீயில்
பயன்படுத்தப்பட்ட தேவைகள் ஒளிர்கின்றன.
பொழுது – 10
எத்தனை எத்தனை முகங்கள்
ஒவ்வொன்றுக்கும்
ஒரு பெயர் சூட்டியும், சூட்டப்படாமலும்
முகத்தை நசுக்குகிறீர்கள்
சொல்லுங்கள்….
தீயிற்கு எதாவது முகமுண்டா?
பொழுது – 11
என் விருப்பம் எனக்கானது
சிரித்தலும், அழுதலும் இயல்பானது
பெருங்கட்டிடம் தீக்கொண்டு எரியும் போது
நானெங்கே நிற்க வேண்டுமென
நான் மட்டுமே சிந்திக்க வேண்டும்.
Thanks : saatchiart








Leave a Reply