Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

நாவல் கண்கள்

காவிரி நாடன்
காவிரி நாடன்
August 1, 2025
நாவல் கண்கள்

நாவல் பழங்களைப் போலிருந்தன செத்து மிதந்த அத்தையின் கண்கள். அத்தை என்பவளுக்குப் பெயர் தேவையில்லை. அத்தை என்ற வார்த்தைக்குள் ஆயிரம் உறவு இருக்கிறது. நான் பிறந்ததும் அவள்தான் என்னை முதல் முதலாகத் தூக்கிக் கொஞ்சினாள் என்று அம்மா சொன்னாள். அத்தையின் உடலை எங்கள் வீட்டில் வைக்க அப்பா ஒத்துக்கொள்ளவில்லை. தலைவாசலில்தான் கிடத்தினார்கள். அவளுக்காக அழுதவர்கள் என் அப்பாயும், அமுத ராணியும்தான். வேடசந்தூரிலிருந்து பாதர் வந்து கல்லறையில் ஜெபம் செய்த பின் உடனே புதைத்து விட்டார்கள். உச்சி வெயிலில் செத்து, அந்தி வெயில் மறையும் முன்பே அனைத்தும் செய்து முடித்துவிட்டார்கள். அதன் பிறகு செய்ய வேண்டிய எந்தக் காரியத்திற்கும் அப்பா வரவேயில்லை.

அப்பாயும் அமுத ராணியும் தோட்டத்துக் குடிசையில் வாழ்ந்தார்கள். பள்ளி முடிந்து தோட்டத்திற்குச் செல்லும் போதெல்லாம் அப்பாயி தின்பண்டம் ஏதாவது கொடுத்து மடியில் வைத்துக்கொண்டு இயேசுவின் கதை சொல்லுவாள். “பாவம் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் என்றார். இப்ப அவரவே கொல்லுற காலமாயிடுச்சு” என்பாள். அப்பாயிக்கு ஒரே கவலை, நல்ல இடத்தில் ராணிக்குக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டுப் போய்விட வேண்டும் என்பதுதான்.

அமுத ராணி வேடசந்தூர் அருகே உள்ள பஞ்சு மில்லுக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள். அவள் வீட்டுக்கு வருவதற்கு முன்பே நான் அங்கு சென்று விடுவேன். பக்கத்து ஊரில் அமுதராணியை ஒருத்தனுக்குப் பிடித்துப் போக வந்து பெண் கேட்டான். அப்பாயிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆனா ரெண்டு நாள்ல வந்து பொண்ணு வேணாம்னு பையனோட அப்பா சொல்லிட்டுப் போனார். விசாரிக்கையில், அப்பாதான் அவங்க ஊர்ல போயி மாப்பிள்ளை அப்பாவைப் பார்த்து இந்தச் சம்பந்தம் உங்களுக்கு வேணாம்னு சொல்லிட்டு வந்ததா அப்பாயி கேள்விப்பட்டாள். டவுன்ல மாப்ள பார்த்துக் கல்யாணம் செய்த போது தாய்மாமன் முறைக்குக் கூட வந்து நிக்கல. “உங்க ஐயா உங்களை விட்டுட்டுச் சாகும்போது நீ மூனு வயசுப் பையன். அவ கைக்குழந்தை. தனி மனுஷியா இருந்து உங்கல கரை ஏத்தினேன். இப்ப உனக்குக் காசு பணம் வந்துருச்சு, சாதி மயிரு முளைச்சிருச்சு, உன் காசு பணம் சாதி எல்லாத்தையும் செல்லரிக்காமப் பூட்டிக்கோடா… என் மகளும் இந்தக் குடும்பத்திற்கு எப்படி எல்லாம் பாடுபட்டு இருப்பாள். ஏதோ அவ தலைவிதி அப்படி ஆகிப்போச்சு. நீ வேணா பொறந்தவ வேணாம்னு இருக்கலாம் நான் மக வேணான்னு இருக்க முடியுமா?”, “செத்தாலும் நீ ஏ மூஞ்சில முழிக்காத” என்று கோபமாகப் பேசிவிட்டுப் போனாள் அப்பாயி.

அன்று அப்பாயி சோழவந்தானுக்கு நெல்லறுக்கப் போன கதையைச் சொன்னது நினைத்துப் பார்த்தேன். வேடசந்தூர் எப்போதும் வானம் பார்த்த பூமிதான். திண்டுக்கல்லில் மழை கொட்டு கொட்டுன்னு கொட்டினாலும் வேடசந்தூர் பக்கம் தூறல் கூட விழாது. நெல்லு வயல்கள் ரொம்பக் கம்மி. கிணறு வச்சுயிருக்கிற கவுடர் சம்சாரிகள்தான் ஏக்கர் கணக்கில் நெல்லு வயல் போடுகிறவர்கள். அதனால அறுவடைக் காலம் சீக்கிரம் முடுச்சுடும். கூலி நெல் மாசத்துக்குக் கூடத் தாங்காது. அதனால நெல்லறுக்க மதுரை, சோழவந்தான், தேனிக்கின்னு மானாவாரி மக்கள் போயி கூலி நெல் மூட்டைகளை ரயிலுல ஏத்திக்கிட்டு திண்டுக்கல் வந்து, திண்டுக்கல் வாணிவிலாஸ்க்கு மாட்டு வண்டியில் வரும் சம்சாரிகளிடம் கெஞ்சி ஏத்திக்கிட்டு ஊர் வருவார்கள். அப்படித்தான் நெல்லறுக்க ராசு தாத்தி ஆளு கூப்பிட ஊருக்கு வந்திருந்தாள். ராசு தாத்தி வாக்கப்பட்டது சோழவந்தான். அண்ணன் தங்கவேலு வயலுல அறுவடை முடியும்போது வருவாள். யார்யாரைக் கூட்டிட்டுப் போகனும். எத்தனை ஆளுங்க வராங்க எத்தனை படி மரக்க நெல்லுக் கூலி என்பதையெல்லாம் கணக்குப் பார்த்து ஆளுகல கூட்டிவர ‌கணபதி என்ற தோட்டத்துப் பண்ணையாளையும் விட்டுட்டுப் போவாள்.

ராசு தாத்தி ஆள் கணக்கில் எப்போதும் அப்பாயிக்கு இடமுண்டு.

“என்ன மதல இந்த வாட்டியும் வந்தரனும்டி “

“வரேன்… இந்த வாட்டி ஏ மகளும் செய்வா, கூலி போட்டுக் கொடு ராசு ஒனக்குப் புண்ணியம் வரட்டும்”

“ஒ மக களத்து வேல செய்யிறளவுக்குப் பெரிய மனுஷி ஆய்ட்டாள”

பத்து வயதுச் சிறுமி செபஸ்த்தியம்மாள் நின்றுகொண்டு இருந்தாள்.
“என்னடி பனஒசரம் இருக்கா. வயசுக்கு வந்தவுடனே கட்டிக்கொடுத்தரலாம் போல”

அப்ப, அப்பா ரெங்கர் பண்ணையில் பண்ணைக்கு இருந்தாரு. சுத்துப் பட்டுல ரெங்கர் பண்ணைக்கு இன்னொரு பேரு எருமை மாட்டுப்பண்ணை. அவரு காட்டுல தலகாணும் மட்டும் எரும மேயும். உழுவதற்குக் கூட எருமைதான். நாலு மணிக்கெல்லெம் ரயில் மூஞ்சிகொண்ட பாலேத்த பெரிய டெம்போ வந்து நிக்கும். எந்நேரமும் தயிரு , மோரு, வெண்ணையினு ஒரே வாசமாதான் இருக்கும். பண்ணையில போயி மகனிடம் சொல்லி விட்டு ரயிலேறி சோழவந்தான் போயி அப்பாயும் மகளும் நெல்லறுத்த இரண்டு நாளுல அப்பாயிக்குக் காய்ச்சல் வந்து படுத்துருச்சாம். ராசு தாத்தியும் வைத்தியம் பாத்துச் சரிவரல.

“ஏ செபஸ்த்தி ஒங்க ஆயிக்கு உடம்பு ரொம்ப நோகுது. நீ உடனே கூட்டிட்டுப் போயி திண்டுக்கல் பெரியாஸ்பத்திரியில சேத்துப் பாரு. கூலிய கணபதி வரப்பக் கொடுத்துட்டறேன்” என்று கூறி பத்து ரூபா செலவுக்குக் கொடுத்து விடவும், அவர்கள் கொட்டகையிலிருந்து தன் அம்மாவைக் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு ரெண்டு மைல் தொலைவு நடந்து சோழவந்தான் ரயில் ஜங்சனுக்கு வந்து சேர்ந்தார்கள். எங்க போயி எப்படி டிக்கெட் எடுக்கறதுன்னு தெரியல. அம்மாவ விட்டிட்டுப் போகவும் முடியாது. அங்க நின்னுக்கிட்டு இருந்த ஒரு எத்துப்பல்லுக்காரன்

“ஏம்மா எங்க போகணும் “

“திண்டுக்கல் போகணும் ண்ணே…”

“நானும் திண்டுக்கல்தான் போறேன்”

“அது யாரு”

“எங்க அம்மாண்ணே மேலுக்கு முடியல”

“அடடா…செரி காசு கொடு நான் போயி டிக்கெட் வாங்கி வாறேன்.”

அவளும் நம்பி கையில இருந்த பத்து ரூபாய கொடுத்து விட்டாள். தன் அம்மாவைக் கைத்தாங்கலாக வைத்துக்கொண்டு ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தாள்.

தன் அம்மாவுக்கு ஏதும் ஆகக் கூடாது. சீக்கிரம் குணமாக வேண்டும் என்று மாரம்பாடி அந்தோணியாரை வேண்டிக்கொண்டாள். ஆனா போனவன் திரும்பி வரவேயில்லை. இரண்டு மூன்று ரயில்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தன. அம்மா பிணம்போலப் படுத்துக் கிடந்தாள். செபஸ்தியம்மாள் அழுதுகொண்டே ஓடினாள். உள்ளே நின்ற ஒருவரிடம் விவரத்தைச் சொன்னாள். அவன் டிக்கெட் கொடுக்குற இடத்தைக் காட்டி அனுப்பினான். “கடைசி ரெயின் ஆறு மணிக்கு. அதுக்குள்ள காசு கொண்டு வா” என்றான். இவள் அழுதவாறு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றாள். அப்போது ஒரு ரெயில் வந்து நின்றது. அங்கிருந்து சில பேர் இறங்கி வந்தார்கள். உடனே இவள் ஓடிப் போய் “ஐயா எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. ஊருக்குப் போகக் காசு கொடுங்கய்யா” என்று கை நீட்டிப் பிச்சைக்கேட்டாள். சிலர் விலகிப் போனார்கள். இருவர் மட்டும் ஐஞ்சு பைசாவும் பத்துப் பைசாவும் போட்டார்கள். அடுத்த ரெயில் வந்தது….அடுத்த ரெயில் போனது… சற்று சுய நினைவு வந்து கண்முளித்தாள். அப்பாயி சற்றுத் தூரத்தில் தன் மகள் கைநீட்டிப் பிச்சையெடுப்பதைப் பார்த்துக் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தாள். “அந்தோணியாரே… எ பிள்ளைய பிச்ச எடுக்க வச்சுட்டியே… நீ வெளங்குவீயா. இத‌ப் பாத்து உசுரு இருக்கே எனக்கு” கண்களாலும் மனசுக்குள்ளும் அழுதாள். டிக்கெட் எடுத்துக்கொண்டு அம்மாவுக்கு இரண்டு பன்னும் வாங்கி வந்து குடுத்தபோது அவளைக் கட்டிப்பிடுச்சு அழுதுச்சாம்.

2

அம்மா சொல்லியும் ஊர் சொல்லியும் கேட்கல, ஜாதி அப்பன் எங்களையும் அவரின் சொல்லுக்குக் கீழே வைத்துக் கொண்டான். அப்பா மாட்டு ஏவாரி நல்லவங்க கையில மட்டுமல்ல ராசி எங்க அப்பன் கையிலும் ராசி உண்டு என்று மாடு வாங்க தேடி வந்து கூட்டிப் போவார்கள். அப்பா மாதிரி மாட்டுக்கு மூக்கணாங் கயிறு எவராலும் போட முடியாது எப்பேர்ப்பட்ட சண்டி மாட்டையும் ஒத்த கையில கொம்பு புடிச்சு மூக்கை வளச்சி கயிறு போட்டு விட்டுருவாரு. அப்பாவுக்குப் பட்ட பெயரே மூக்கணாங்கயிறு பொட்டு. நான் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தபோது அப்பா வந்து “அப்பாயி போன வாரம் செத்துப் போச்சு” என்றார். “உனக்கு பரீட்சை நடக்குதுன்னு கடிதம் போட்டியா அதான் உன் கிட்ட ஏதும் சொல்லடா” அப்பாயியை நினைத்து அழுகை வந்தது. ஆனால் அப்பாவுக்கு முன் அழவில்லை, அதற்கும் ஏதாவது திட்டுவாரு.

3

நான் வெளி மாநிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அப்பா இறந்துவிட்டார் என்று தந்தி வந்தது.  நான் ரயிலில் இரண்டு நாள் முழுவதும் பயணம் செய்து ஊருக்கு வந்தபோது அப்பாவைப் புதைத்துவிட்டார்கள். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அமுத ராணி துக்கத்துக்கு வந்துட்டுப் போனதாகக் கேள்விப்பட்டேன். “நாற்பதாம் நாளுக்கு அமுத ராணிக்கு முறைப்படிச் சொல்ல வேண்டும்” என அம்மா கூறினாள். நானும் அம்மாவும் அவள் வீட்டுக்குச் சென்று நாற்பதாம் நாளுக்குப் பத்திரிகை வெச்சோம். அவள் அழுதாள் அழுதாள் அப்படி ஒரு அழுகை அவளின் இரண்டு பிள்ளைகளும் கணவனும் தேற்றியும் அழுகையை நிறுத்த முடியவில்லை. போகும்போது அம்மாவைப் பார்த்து “தம்பி எப்படி வளர்ந்துட்டான்” என்றாள்.

4

அத்தை மிகவும் அழகானவள். அவள் கண்கள் நாவல் பழங்களைப் போல அழகாக இருக்கும். அவள் ஊரை விட்டுப் போனபோது கர்ப்பமாக இருந்தாள் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவள் அமுத ராணியைக் கூட்டி வந்தபோது அவள் பெரிய மனுசியாக இருந்தாள். அத்தை உடம்புக்கு முடியாமல் மிகவும் மெலிந்து போய்க் காணப்பட்டாள். அமுத ராணி அத்தைக்குப் பிறந்தவளில்லை. அவர்களை எந்தக் காரணமும் கேட்காமல் ஏற்றுக் கொண்டவள் அப்பாயி மட்டும்தான். அப்பா சண்டை போட்டார். அப்பாவிடமும் சண்டை போட்டுவிட்டு மூவரும் தோட்டத்தில் குடிசையில் போய் வாழ்ந்தார்கள். அத்தையை இறுதிவரை அப்பா மன்னிக்கவே இல்லை.
ஒரு நாள் முன்பே வந்து எல்லா வேலைகளையும் செய்தாள். வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்தவளிடம் சென்று அருகில் அமர்ந்து “அக்கா உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா” என்றேன். “நீங்கெல்லாம் பேசுவீங்கன்னு எனக்கு இப்பத்தான்டா தெரியும் தம்பி” எனக்கு ஏதோ ஒரு அம்பு இதயத்தில் பட்டது. அத்தையைப் பத்தி எனக்கு இப்ப வர ஒன்னும் தெரியாதுக்கா அவுங்க பத்திக் கேட்கணும்னு தோணுச்சு.

மீண்டும் அவள் அழ ஆரம்பித்தாள், கண்களைத் துடைத்துவிட்டுப் பேச ஆரம்பித்தாள். நான் எங்க பிறந்தேன் எனக்குத் தெரியாது. எங்க அப்பா ஒரு பார்வையற்றவர், எனக்கு விவரம் தெரிய ஒரு கோவில் நகரம் ஒரு ஆத்தோரம் தார்ப்பாய் டென்டு போட்டுக் கிடந்தோம். காலைல எழுந்து எங்க அப்பாவ டவுனுக்குள்ள இருக்கிற ஒரு பெரிய சர்ச்சுக்குக் கூட்டிட்டுப் போயி வாசல்ல பிச்சை எடுக்க ஒக்காந்துக்குவோம். இருட்டுன பிறகு பிச்சைக் காசுல ஏதாவது தின்னுட்டு வந்து டென்டில் போய்ப் படுத்துக்குவோம். இப்படித்தான் எங்க வாழ்க்கை போயிட்டு இருந்துச்சு.

ஒரு நாளு செபஸ்தியம்மா புள்ளத்தாச்சியா வந்து ராப்பகலா ஆத்துல உக்காந்து இருந்தாள். எங்க டென்டுக்கு வந்து குடிக்கத் தண்ணி கேட்டு மயக்கம் போட்டு விழுந்துட்டா. நானும் எங்க அப்பாவும் பக்கத்துல இருக்கவங்களும் சேர்ந்து ஆஸ்பத்திரியில் சேர்த்துக் காப்பாத்துனோம் . நா அநாதைன்னு அவ சொன்னதுக்கு அப்புறம் அப்பா எங்க கூடவே கூட்டிட்டு வந்துட்டாரு. என்ன வீட்டிலேயே விளையாடச் சொல்லிட்டு அப்பாவை, செபஸ்தியம்மா கூட்டிட்டுப் போக ஆரம்பிச்சாள். கொஞ்ச நாள் கழிச்சு அவளுக்குப் பாப்பா பொறந்தது. பாப்பா அப்படியே உங்க அப்பாயி மாதிரியே இருந்துச்சு.

நான் பாப்பாவப் பாத்துட்டு வீட்ல இருந்தேன். அப்பாவை அம்மா கூட்டிட்டுப் போயி கோவிலில் உட்கார வச்சுட்டு வந்து என்னையும் கூட்டிட்டு ஆஸ்பத்திரியில கக்கூஸ் கழுவுற வேலைக்குப் போயிட்டு ராத்திரில போயி அப்பாவக் கூட்டிட்டு வரும். ஒரு நாள் அம்மா வேலை முடிஞ்சு அழுதுகிட்டே வந்தா. நா எவ்வளவு கேட்டும் அவ அழுதுட்டுதான் இருந்தா அன்னைக்கு முழுவதும். அவ கன்னத்துல யாரோ அடிச்ச கைரேக பதிஞ்சு இருந்துச்சு. பாப்பா நடக்கிற வயசு. பாப்பா காணமுன்னு தேடுனோம். எங்க தேடியும் கிடைக்கல. அடுத்த நாள் அது விளையாடிய ஒரு பொம்மைதான் கொஞ்ச தூரம் தள்ளிக் கிடைச்சது. அப்பயிலிருந்து அம்மா பித்துப் பிடுச்சது போல ஆயிட்டா என்று கூறி அழுக ஆரம்பித்தாள்.

சிறிது நேரம் கழித்துப் பேச ஆரம்பித்தார். ஒரு நாள் சர்ச்சுக்குள்ள போய் இயேசு சிலையைக் கட்டிப்பிடித்து அழுதுட்டு இருந்தா. அங்கிருந்த பாதர் எங்க கதையைக் கேட்டு இறக்கப்பட்டு அவங்க ஆஸ்பத்திரியில் வைத்துக் குணப்படுத்தினாங்க. எங்க அப்பாவும் கொஞ்ச நாள்ல உடம்புக்கு முடியாமல் செத்துப் போயிடுச்சு. மீண்டும் அழுதாள். “அக்கா வேண்டாம் போதும்” என்றேன். கண்களைத் துடைத்துக் கொண்டு அதலாம் ஒன்னும் இல்லப்பா. எனக்கு ஒங்கிட்ட சொன்னா பாரம் இறங்கி வச்சது போல இருக்கும்.

நான் வயசுக்கு வந்ததுக்குப் பிறகு அம்மாவுக்கு என் மேல ஒரு பயம் வந்துருச்சு. அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை. ஃபாதர் கிட்டச் சொல்லி ஆஸ்பத்திரியில் பார்த்ததில கேன்சர்ன்னு சொன்னாங்க. எனக்கு அப்ப எதுவும் தெரியல. அப்புறம்தான் என்னைக் கூட்டிட்டு இங்க வந்துடுச்சு. எல்லாம் சொல்லி முடித்து அழுதாள். அக்கா அழ வேண்டாம் இனி நாங்கள் இருக்கோம் என்றேன்.

“யாரும் எனக்கு வேண்டாம் ஏதோ நீங்க வீடு தேடி வந்து கூப்பிட்டதால வந்தேன். அம்மா இங்கே கூட்டிட்டு வந்தப்ப உங்க அப்பா எங்களை எத்தனை தடவ தேவிடியா தேவிடியான்னு சொன்னாரு தெரியுமா. அது இன்னும் என் மனசுக்குள்ள இருக்குது. அப்பாயி செத்தப்பக்கூட உங்க அப்பா ஒரு மூணாம் மனுசனப் போலத்தான் இருந்தார்” என்றாள். நான் அவளைத் தேத்தி விட்டு வீட்டுக்குள் வந்தேன்.

அன்று இரவு என்னால உறங்க முடியல. நான் பின்னோக்கிப் போய் அந்த நாவல் மரத்தின் அடியில் நின்று கொண்டேன். கண்மாய் நீரின் மேல் நாவல் பழங்கள் விழுந்தன. நானும் நீரில் குதித்தேன் ஆழம் செல்லச் செல்ல, நாவல் பழங்கள் அத்தையின் கண்களாக மாறின. தன் குழந்தை மார்பில் அணைத்தபடி அழுதுகொண்டிருந்தாள். அவளின் கன்னத்தில் அப்பாவின் கைரேகை. அவள் குழந்தையின் கழுத்தை நெரிக்கும் மூக்கணாங்கயிற்றைப் பிடித்து இழுத்து நீரை விட்டு வெளியேறியபோது நாவல் மரம் முழுவதும் கண்கள் தொங்கிக்கொண்டிருந்தன.


Art : etsy

காவிரி நாடன்
காவிரி நாடன்

கவிஞர். தி.காவிரிநாடன் திண்டுக்கல் மாவட்டம் வி.அம்மாபட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். கழுத்தில் மாட்டிக்கொண்ட முத்தம் (2016) ரியா வரைந்த வானம் (2023) இரண்டு கவிதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். தற்சமயம் திருப்பூரில் அயனிங் மாஸ்டர் வேலை செய்துகொண்டு இருக்கிறார்.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top