Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

சீனுராமசாமி கவிதைகள்

சீனு ராமசாமி
சீனு ராமசாமி
January 2, 2026
சீனுராமசாமி கவிதைகள்

அவர்கள்

உன்னிடம் இருக்கும் நான்
என்னிடம் இருக்கும் நீ
அவரவர்கள் அவரவர்களுக்கு உரியவர்களை எடுத்துக் கொண்டார்கள்.
எடுத்துக் கொண்டவர்களைப் பார்த்து
எப்பொழுதும் மௌனமாகக் கவனித்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் ஒருவரை ஒருவர்
கண்காணிப்பவர்கள்,
சுதாரிப்பாக இருப்பவர்கள்,
கவனத்தின் பனி மூடிய இரவுகளில் விழித்திருப்பவர்கள்,
அவர்கள் ஒருவரின்றி ஒருவரோடு பேசுபவர்கள்
ரகசியத் தர்க்கம் செய்பவர்கள்.
அவர்கள் வாழ்நாளில் கடைசி வரைக்கும்
சந்திக்காமல் மரிக்கப் போகிறவர்கள்.
அவர்கள் என்னிடம் இருக்கும் நான்
உன்னிடம் இருக்கும் நீ


அருள் கூற்று

தாய் அருவி கொட்டுகிறது
ஊறிய மருந்தாகக் கொட்டுகிறது
நிலவு உருகி பாலருவியாகக் கொட்டுகிறது
தெய்வத்தின் அருள்
நீரின் வடிவில் கொட்டுகிறது
சித்தம் தணிந்து தெளிய கொட்டுகிறது
மொழியின் வனத்திலிருந்து
கவிதையின் உச்சாடனம் இடையறாது கொட்டுகிறது
மிக உச்சியில் இருந்து
உன் உச்சிக்குக் கொட்டுகிறது


காரணங்களின் காரணம்

காரணம் கேட்கிறார்கள்
எல்லாவற்றுக்கும்,
எல்லா இடங்களிலும்
ஏதோ ஒரு காரணம் தேவைப்படுகிறது
எல்லோருக்கும்,
எல்லோரும் சொல்கிறார்கள்
காரணங்களை,

பெரிய பொய்கள் காரணங்களில்
பதுங்கி மறைந்திருக்கின்றன,
உண்மையான காரணங்களை
பலரால் சொல்ல முடியவில்லை,
எல்லோரும் காரணங்களைக் கண்காணிக்கிறார்கள்.
காரணங்களைப் பரப்புகிறார்கள்
காரணங்களைப் போற்றுகிறார்கள்
காரணங்களை அவதூறு செய்கிறார்கள்
காரணங்களை புறங் கூறுகிறார்கள்
பலர் அதை மிகவும் கௌரவமாக விரும்புகிறார்கள்,

பள்ளிக்குப் போகாமல்
ஒரு காரணத்தை விடுமுறைக்கு எழுதச் செய்யும்
குழந்தைகளுக்குக் காரணங்களைக் கையாளும் பயிற்சியை ஆரம்பித்து விடுகிறார்கள்,

இறந்த காரணத்தை அறிய முற்படுவதன் அவசரமும்
அவர்கள் வாழ்ந்த காலத்தின் காரணங்களை அறியாமல்
விட்டு விடுவதும் வினோத
வாழ்வின் நடனம்,

காரணமின்றி நடக்கும்
எதிர்பாராச் சம்பவங்களுக்குப் பின்னே
யாரோ காரணத்தோடு சிரிக்கிறார்கள்,

அதைக் கடவுள் என்கிறார்கள் சிலர்.
அதை விதி என்கிறார்கள் பலர்,

காரண காரியமின்றி
நிகழப்போகும் ஒரு மனித நட்பை
நான் உவந்து மகிழ்கிறேன்.


மனம்

எல்லோரோடும் இருக்க முடியாமல் போகிறது
சிலரோடு இருக்க நேர்கிறது
இருக்க நினைப்பவர்களோடு
இருக்க நினைத்தாலும்
அவர்களுக்கு
அந்த எண்ணம் இல்லாமல் போய்விடுகிறது
நம்மோடு சிலர் இருக்க விரும்புகிறார்கள்
கொஞ்சம் விலகியிருந்தால் தேவலையென்று படுகிறது


திண்ணையில் படுத்துக்கொள்வேன்
தெருமுனை டீக்கடையில்
படித்த தினத்தந்தி மீது
சிறு கல் வைத்து மறக்காமல்
வந்த வழி ஊன்றி
திண்ணையில் மீண்டும்
படுத்துக் கொள்வேன்.

வெயில் மழை பனி எல்லாம்
அதற்குள் அந்த எல்லைக்குள்
வந்து போய்விடுகிறது

யாரும் வரவில்லை
யாரும் வர வேண்டாம்

ஊரெல்லாம் சுற்றிவிட்டு
நேரத்திற்கு வந்து சேரும்
இங்கு வளரும் நாய்
சிறிது அதிகாரம் செய்ய எனக்கு,

மகாமுனி வருசநாட்டு கருப்பண்ணசாமியிடம்
எனக்குப் போதும் என்று சொல்லி
நாளாயிற்று,

காத்திருக்கிறேன்.


Art : Isabella Lee

சீனு ராமசாமி
சீனு ராமசாமி
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • மாதுளை மரம்

    மாதுளை மரம்

    January 4, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    January 4, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 6

    இன்கா நாடோடிக்கதைகள் – 6

    January 4, 2026
  • நிணம் : நுண்கதை- குறுங்கதை- சிறுகதை

    நிணம் : நுண்கதை- குறுங்கதை- சிறுகதை

    January 4, 2026
  • சிக்கிம் சுந்தரி

    சிக்கிம் சுந்தரி

    January 4, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (9)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (11)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இதழ் 8 (44)
  • இலக்கியம் (15)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (80)
  • கட்டுரை (2)
  • கதை (4)
  • கதை (3)
  • கவிதை (62)
  • கவிதை (11)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (11)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (36)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (5)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (9)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (3)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (27)
  • வாழ்வியல் (2)

Archives

  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • மாதுளை மரம்

    மாதுளை மரம்

    January 4, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    January 4, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 6

    இன்கா நாடோடிக்கதைகள் – 6

    January 4, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (9)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (11)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இதழ் 8 (44)
  • இலக்கியம் (15)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (80)
  • கட்டுரை (2)
  • கதை (4)
  • கதை (3)
  • கவிதை (62)
  • கவிதை (11)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (11)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (36)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (5)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (9)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (3)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (27)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top