Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

றியாஸ் குரானா கவிதைகள்

றியாஸ் குரானா
றியாஸ் குரானா
November 1, 2025
றியாஸ் குரானா கவிதைகள்

இரண்டு சர்வாதிகாரிகளின் குடியரசு

நான் என்பது ஒரு சோவியத்
அடுக்குமாடிக் குடியிருப்பு
மிகவும் நெரிசலானது
அங்கு இரண்டு பேர் வசிக்கிறார்கள்.

ஒருவன்,
அவளுடைய கூந்தலின் வாசனையை
மே தின ஊர்வலத்தின்
இறுதி முழக்கமாகக் கருதுகிறான்
புரட்சிகரமான பரவசம்.
அவள் சிரிக்கும்போது நம்புகிறான்
வர்க்கப் போராட்டம் முடிந்துவிட்டதென்று.

இன்னொருவன்,
அவளுடைய இருப்பை
ஒரு தேவையற்ற அதிகார வர்க்கமாகப்
பார்க்கிறான்.
அவளுடைய புன்னகை
ஒரு முதலாளித்துவ சதி
அவளுடைய ஸ்பரிசம்
நுகர்வோர் கலாச்சாரத்தின் ஒட்டும் பசை.

பிரச்சினை என்னவென்றால்
இந்த இரண்டு உறுப்பினர்களும்
ஒரே உடலைப்
பகிர்ந்துகொள்ள வேண்டும்
அது மிகவும் திறனற்ற அமைப்பு.

அவள் எதிரே வந்து அமரும்போது
சந்திப்பு தொடங்குகிறது.
என் வலது கை
அந்தக் காதலனின் கை

அவள் விரல்களைப்
பற்றிக்கொள்ளத் துடிக்கிறது
ரோஜாக்களை வாங்கச் சொல்கிறது

என் இடது கை
அந்த வெறுப்பாளனின் கை
சட்டைப் பைக்குள்
இறுக மூடிக்கொள்கிறது
அது சொல்கிறது:
“ரோஜாக்கள் ஒரு பூர்ஷ்வா பலவீனம்.”

அவள் பேசுகிறாள்
காதலன் அதை தேவாலய
மணியோசை என்கிறான்
வெறுப்பாளன் அதைத் தொழிற்சாலை
அபாயச் சங்கு என்கிறான்
என் காதுகள் குழப்பத்தில் அதிர்கின்றன.

மிகவும் அபத்தமான தருணம்
அவள் கேட்கிறாள்
“என்னை நேசிக்கிறாயா?”

இதுதான் இறுதி எச்சரிக்கை
உள்ளே, இரண்டு சர்வாதிகாரிகளும்
தங்கள் அணு ஆயுதப் பொத்தான்களை
ஒரே நேரத்தில் அழுத்துகிறார்கள்.

காதலன்,
என் வலது கையை ஏவுகிறான்:
“அவளை அணைத்துவிடு!”

வெறுப்பாளன்,
என் இடது கையை ஏவுகிறான்:
“அவளைத் தள்ளிவிடு!”

இரண்டு கைகளும்
ஒரே இலக்கிலிருந்து புறப்பட்ட
ஏவுகணைகள் போல நடுவானில்…
அதாவது, என் முகத்திற்கு நேராக…
மோதிக் கொள்கின்றன.

“பளார்!”

ஒரு பயங்கரமான சத்தம்
அது என் சொந்தக் கன்னத்தில்
நான் அறைந்து கொண்டதன் விளைவு.

அவள் திகைத்துப் போய்ப் பார்க்கிறாள்
அவள் புருவங்கள் உயர்கின்றன.
“எ… என்ன இது?”

நான் கன்னத்தைத் தடவியபடி
பார்வையைத் திருப்புகிறேன்.
“ஒன்றுமில்லை.
கொசு.
ஒரு… மிக, மிக ஆபத்தான கொசு.”

உள்ளே, இரண்டு சர்வாதிகாரிகளும்
தங்கள் உடைந்த மூக்குகளைப்
பிடித்துக்கொண்டு
தற்காலிகமாகப் பின்வாங்குகிறார்கள்.
உள்நாட்டுப் போர்
இன்னும் முடிவுக்கு வரவில்லை
ஆனால் கொசு செத்துவிட்டது.
அல்லது செத்திருக்கலாம்.

கண்டம்விட்டு கண்டம் பாயும்
ஏவுகணையைப் போல
அவள் வேகமாகப் போகிறாள்

இரண்டு சர்வாதிகாரிகளும்
எனது உடலுக்குள்
கைகுலுக்கிக்கொண்டு
ஊடகங்களுக்கு முன்
அமர்ந்திருக்கின்றனர்.


எழுபத்து மூன்றாம் பக்கத்து மர்மம்

எழுபத்து மூன்றாம் பக்கத்தில்
இரத்தம் உறைந்திருக்கிறது.
ஆனால் பிணம் இல்லை.
முக்கியக் கதாபாத்திரம் தப்பிவிட்டதா
அல்லது ஆசிரியர் அவனை
ரகசியமாகப் பக்கங்களுக்கு இடையில்
புதைத்துவிட்டாரா?
வாக்கியங்கள் ஒன்றையொன்று
முறைக்கின்றன
உண்மையைச் சொல்ல மறுத்து.

துப்பறிவாளனாய் மாறுகிறேன்
கமாவிற்குள் ஒளிந்து கொள்கிறேன்
பத்தியின் முடிவில் பதுங்கிப் பார்க்கிறேன்.
ஆசிரியர் வேண்டுமென்றே
சில அத்தியாயங்களைத்
தலைகீழாக எழுதியிருக்கிறார்
என்னைத் திசை திருப்ப.
முற்றுப்புள்ளிகள் கண்ணிவெடிகளாய்
வெடிக்கின்றன
நான் அடுத்த பக்கத்திற்குத் தாவும்போது.

எழுத்துக்கள் நிழல்களாய்
நகர்கின்றன
சுவரில் ஒட்டடை போலப்
படிந்திருக்கின்றன
பழைய உரையாடல்கள்.

ஒவ்வொரு சொல்லையும்
தட்டிப் பார்க்கிறேன்
ரகசியப் பாதைக்கான
திறவுகோல் உள்ளதா என.
காலம் காகிதத்தில்
உறைந்து கிடக்கிறது
சம்பவம் நடந்து
பல பதிப்புகள் ஆகிவிட்டனவா?

திடீரென, நான் தேடும் கதாபாத்திரம்
“விளக்கம்” என்ற சொல்லிலிருந்து
வெளியே வருகிறது
என் தோளைத் தட்டி,
“நீயும் இந்தக் கதையின்
ஒரு பாத்திரம்தான், துப்பறிவாயா?” என்று
கேலியாகச் சிரிக்கிறது.
“ஆசிரியர் என்னைக் கொல்லவில்லை
உன்னை இந்தக் கதைக்குள் இழுக்கவே
என்னைத் தொலைத்தார்.”

என் கையில்
பூதக்கண்ணாடி உருகுகிறது
காகிதத்தில் கறுப்பு மையாய் வழிகிறது.
பரபரப்போடு புத்தகத்தை
மூட முயல்கிறேன்
முடியவில்லை.
பக்கங்கள் ஒட்டிக்கொண்டன.
நான் எழுபத்து மூன்றாம் பக்கத்தில்
சிக்கிக்கொண்டேன்.

கதாபாத்திரத்தின் சிரிப்பொலி கேட்கிறது
அடுத்த அத்தியாயத்திலிருந்து.
ஒருவேளை, காணாமல் போனது
அவனில்லையோ?
இந்தக் கவிதையை வாசிக்கும் நீங்களா
அல்லது இந்த வரிகளை எழுதும் நானா?
துப்பறிதல் தொடர்கிறது
அடுத்த வாசகர்
இந்தச் சிக்கலை விடுவிக்கும் வரை
கவனமாக வாசியுங்கள்.
நீங்களும் ஒரு தடயமாகலாம்.


Art : saatchiart

றியாஸ் குரானா
றியாஸ் குரானா

றியாஸ் குரானா – இலங்கையின் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இலக்கியச் செயற்பாட்டாளர், கவிதை சொல்லி. ஈழத்துத் தமிழ் இலக்கிய வெளியில் பின்நவீனத்துவ எழுத்துக்களுக்கான களத்தினைக் கட்டமைத்த முன்னோடி என இவரைக் குறிப்பிடலாம். பின்நவீனத்துவக் கருத்தியல் சார்ந்து ஈழத்தில் வெளிவந்த “பெருவெளி” சிற்றிதழின் நிறுவனர்களில் ஒருவர். பரந்துபட்ட வாசிப்பும் காய்தல் உவத்தல் அற்ற விமர்சனமும் இவரது அடையாளங்கள். இவரது கவிதைகள் யாவுமே குறிப்பான ஒரு பாடுபொருளை மையமாகக்கொள்ளும் பொதுவான போக்கிலிருந்து விலகிப் பல்முனைத் தளங்களை அக்கறைகொள்பவை. நவீனம் கடந்த கவிதைகளை அக்கறை கொண்டு செயற்படுபவர். ஆதி நதியிலிருந்து கிழக்குப் பக்கம் பிரிகிறது ஒரு கிளை (நுண்காவியம், முதற்பதிப்பு 2003, இரண்டாம்பதிப்பு 2006), வண்ணத்துப்பூச்சியாகிப் பறந்த கதைக்குரிய காலம் (நுண்காவியம் 2006), நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு (கவிதைத் தொகுதி 2011), மிகுதியை எங்கு வாசிக்கலாம் (கவிதைத்தொகுதி 2013), மாற்றுப்பிரதி (கவிதைத்தொகுதி 2016) என்று இதுவரை ஐந்து படைப்புக்களைத் தமிழ் இலக்கியப் பரப்புக்கு இவர் தந்துள்ளார். வாசகர்களைத் தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்ட இவரது கவிதைகள் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (4)
  • கட்டுரை (100)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (4)
  • கட்டுரை (100)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top