மராத்தியில் : சரண்குமார் லிம்பாலே
ஹிந்தியில் : பத்மஜா க்கோர்படே
தமிழில் : வசந்ததீபன்
நான் யார்?
எதற்காக இருக்கிறது இந்த ஒளிப் பொக்கிஷ சூரியன்?
மற்றும் இந்த முடிவற்ற ஆகாயம்?
இந்த எல்லையற்ற கடல்
மற்றும் இந்தப் பரந்த தேசம்
எதற்காக இருக்கிறது?
இந்தப் பாராளுமன்றம், அரசியலமைப்பு, இந்த மக்கள்…
இந்தச் சமூகம், இந்தச் சட்டம் எதற்காக?
இந்த மக்கள், மக்களாகத்தான் இல்லை
கொடூரமான மிருகங்களின் கூட்டமாக இருக்கின்றனர் இவர்கள்…
நான் எங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இங்கே?
நானோ மரணத்திலிருந்து கண்களைத்தான் திருடிக் கொண்டிருக்கிறேன்…
நிமிஷத்துக்கு நிமிஷம்
வாழ்வின் மேல் தொங்குகிறது மரணம் இவர்களும் ஏதோ வாழ்கிறார்கள்
எரியும் குடிசையில்
பொசுங்கிக் கருகுகையில் வாழ்வதற்கான முயற்சிகள் மூச்சுத்திணறல்கள் மட்டுமே!
உண்மையில் யாராக இருக்கிறேன் நான்? மற்றும் எதற்காக இருக்கிறேன்?
ஊமை அதிகாரம், ஊமை ஜனங்கள், ஊமைக் கலாச்சாரம்!
வேதங்களும் ஊமை! சாஸ்திரங்களும் ஊமை மற்றும் மனுஸ்மிருதியும்!!!
சம போஜனம்
நான் மறந்து தான் போய் இருக்கிறேன் நான் யார்?
தெரியவில்லை எனக்கு என்ன செய்வது?
யாரோ அறிமுகமில்லாதவர் உறுதி செய்கிறார் நான் என்ன செய்வதென்று
அவர்கள் சொல்கிறார்கள் உட்கார், நான் உட்காருகிறேன்
அவர்கள் சொல்கிறார்கள் எழுந்திரு, நான் எழுந்து நிற்கிறேன்
எனக்கும் கற்களுக்கும்
எந்தவித வித்தியாசமும் இல்லை
மற்றும் அவர்கள் இதை விரும்புகிறார்கள்
மற்றும் நான் இதை விரும்பவில்லை
எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது அவர்களுடைய நன்மை உபதேசம்
நான் ஏற்றுக் கொள்ளத்தான் இல்லை எனக்கான நல்லது பற்றி உன்னுடைய கவலை கொள்ளலை
உன்னுடைய பார்வைதான் எனக்குப் பிடித்தமாயில்லை
மற்றும் விரும்பவில்லை நீ எனக்கு யாரோ போலத் தோன்றும் உணர்வுகள்
நாங்கள் – நீ எதிரிகளாக இருக்கிறோம் ஒருவருக்கொருவர்
ஒருவருக்கொருவருடைய காலாச்சாரத்தில், வாழ்வின்
பழைய – எதிர்கால – நிகழ்காலத்தின்!
இவை என்னுடைய வேலையல்ல, முகமூடியல்ல !
மற்றும் நீ கபடநாடகம் ஏன் ஆடுகிறாய் உறவாக
உன்னுடைய – என்னுடைய கைகளும் ஒன்றாக இல்லை
என்னுடைய கைகளின் மீது இருக்கிறது மனிதத்துவம்
மற்றும் நீ அணிந்து இருக்கிறாய்ப் புலிநகம்
கவனமாய் இருக்கிறோம்
நாங்கள் வாழ்கிறது ஒரு கொடியின் கீழ்
மற்றும் வாழ்கிறது ஒரு மண்டபத்தின் கீழ்
பிறகு இது சமபோஜனத்தின்
நாடகம் எதற்காக?
கேள்!
நான் உன்னுடைய வரிசையில்
எப்போதும் உட்காருபவன் இல்லை.
அறிவிப்பு
நாங்கள் சாலைகளின் மீது இறங்கி வந்து இருக்கிறோம்
அறிவிப்புகள் செய்கிறோம்
நாங்கள் உனக்கு மிகவும் குரூரமானவர்களாகத் தெரிகிறோம் இல்லையா?
எங்களுடைய – உன்னுடைய உறவுதான் வன்முறை அடிப்படையில் இருக்கிறது
இடஒதுக்கீடு கேட்டு ஜாட்கள் வன்முறையில் ஈடுபட்டனர்
உன்னுடைய இருதயம் மூடப்பட்டுள்ளது
“பத்மாவத்” சினிமாப் படத்திற்காக வன்முறையில் ராஜபுத்திரர்கள் ஈடுபட்டனர்
உன்னுடைய வாயில் நாக்குதான் இல்லை
நாங்கள் சாலைகளில் இறங்கி வந்து இருக்கிறோம்
உனக்கு மிகவும் குரூரமானவர்களாகத் தெரிகிறோம் நாங்கள்!
நாங்கள்தான் இறக்கிறோம்
உன்னுடைய தோட்டாக்களினால்
சொல் யாரும் செய்யவில்லையா துப்பாக்கிச் சூடு? வன்முறை?
சாலைகள் ரத்தத்தால் எப்படி வண்ணமாகி இருக்கின்றன
நாங்கள் சாலைக்கு வரவில்லை
ஆகையால் நாங்கள் பாதையில் வந்ததில்லை
இது உங்களின் கொடூரமான பாசாங்குத்தனம்
பாதிக்கப்பட்டவர் கம்பிகளுக்குப் பின்னே
மற்றும் குற்றவாளிக்குப் பூரண விடுதலை?
உன்னுடைய இடைத்தரகர்களால் செய்யப்பட்ட நியாயம்
உனக்குச் சார்பாக
மற்றும் எங்களுக்காக?
துப்பாக்கிகளினால் சுடப்பட்ட குண்டுகள், தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டுகள்!
எங்கள் இறந்த உடல்கள் சாலையில் காணப்படாது.
ஆகையால் பரப்பினாய் உன்னுடைய பயத்தை
இப்போது கவனமாய்க் கேள்!
நாங்கள் எழுவோம் உன்னுடைய வீடுகளில்
பார்லிமென்ட்டில், சுப்ரீம் கோர்ட்டில்
சொர்க்கம் – பாதாளத்திலும்
நாங்கள் எழுந்துவருவோம்
‘ஜெய் பீம்’ எங்களுடைய உதடுகளின் மீது மட்டும் இல்லை
பாட்டாளி வர்க்கத்தின் நாக்கின் மீது இருக்கிறது
சிவப்பு, நீலம், பச்சை, கறுப்பு மற்றும் காவி வண்ணம்
எவ்வளவு நாட்கள் சங்கராச்சாரியாரின் நிழலில் வாழ்வீர்கள்?
யார் தனது தந்தையை வாழ விடவில்லையோ அவர் உனக்கு என்ன செய்வார்?
கவனத்தில் வைத்துக் கொள்
எந்தவொரு அவதாரமும் எடுக்க மாட்டார்
இந்தப் பழமைவாதக் கற்பனைகளில்
அடமான ஞானத்தில் எழுவோம் நாங்கள்
மற்றும் துப்பாக்கிகளின் தோட்டாக்களில்
சூரியனிலும் எழுவோம் இப்போது
இருள் அதிகமாகத்தான் சத்தம் போட ஆரம்பித்து இருக்கிறது!!
Art : interest








Leave a Reply