Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

பிரமி ருத்ரா கவிதைகள்

பிரமி ருத்ரா
பிரமி ருத்ரா
October 1, 2025
பிரமி ருத்ரா கவிதைகள்

என் புனிதச் சமூகத்தெச்சங்கள்

குருதி நதி வழிந்தோடிக் கலந்த
கடலின் மீன்கள்
நாவூஉர ருசிக்கின்றன

ஆண்டவனை அண்டிய அம்மனசுகள்
ஆசைகளோடு அரக்கராகிக் கொள்கின்றன.
அம்மணமாகியவை எல்லாம்
ஆடைக்கு அடுக்கடுக்காய்
மேலாடை அணிகின்றன.

ஆனந்த அரசொன்றின்
அழிவினிலே ஆங்காங்கே
நரிகளின் வீடுகள் தோன்றுகின்றன.

காலோடு கையில்லாக் காவலன் வீட்டிலே
காட்டுக்கிழங்கு கறிக்குச் சமைக்கிறாள்.

அவன் காலையும் கையையும்
விற்றவன் பரம்பரைக்கோ
பசும்பொன் சொத்துக்கள்.

கண்ணொன்று இல்லாமல்
காதொன்றும் கேளாமல்
களமாடியவனோ இன்று
கையேந்தி அலைகின்றான்

கடவுள் தேசத்துச் சுடலைகள் மீது
சிவப்பிரிய எருக்களைகள்தான் பூஜிக்கின்றன
வார்த்தெடுத்த சமூகத்தின் எச்சங்கள்
இன்று வாசனை போதையில்
கூட்டுக் களியாடுகின்றன.

நிகழ்ந்ததால் நிகழ்வதைக் கண்டு
செல் விழுந்து செத்த பேய் ஒன்று
ஆலமரக் கீழிருந்து அழுதுகொண்டிருக்கிறது.


காலணியில் சிரிக்கும் கண்டிக் காந்தள்

கார்த்திகை மலரே…
உன்மீதான மழையின் காதலால்

கொட்டித் தீர்த்து
உனை உயிர்ப்பித்து விடுகிறது

கார்த்திகையில் மலர்கிறாய்
தையில் இறக்கிறாய்
நீயல்லவோ மழையின் காதலி

வந்தேரி தேசத்தவன்
உனைக் காலணியில் காட்சியாக்கிக்

கால்களிலே மாட்டுகிறான்.
கண்டனக் கூட்டமொன்று
கண்ணீரோடலைகிறது.

கண்கொண்டு பார்த்தாலே
கண்வருத்தம் வருமென்று
காதாலே முன்னொருகால்
கருத்தொன்று கேட்டதுண்டு.

பூசைகளில் உன்னை ஏற்க
கடவுளுக்கு மனசில்லை
மாலையாக்கி மகிழ்விற்க
மனிதனுக்குத் துணிவில்லை

உனைப் போற்றித் தொழுதோரோ
போரிட்டு மாண்டுவிட
அவர் மரணப்படுக்கைகள் மீது

இன்றும் தான் நீ பூத்துச் சிரிக்கிறாய்

யார்தானுனைக் கிள்ளியெடுத்து
அணைத்து அணைத்து முத்தமிட்டு
முகை சிந்தும் கண்களில்
ஒற்றிக் கொண்டனர்.

காலணியில் உனைக்கண்டு
கதிகலங்கிப் போனோரோ
கதறிக்கொண்டு உயிருருகி
உனையள்ளிப் பூஜையறையில்
பூசிக்கவல்லவா போகின்றனர்.

முற்றத்துத் துளசிகளில்
முன்னிருந்து நீ சிரிக்கையிலே
முக்கால விளக்கேற்றி
விரதங்களும் இருக்கலாம்.

மறந்துவிட்ட மனிதனொன்று
கண்டிக்குச் சென்றவேளை
காலணியை மாற்றியதால்
வீட்டுத் துளசிக்குத் தூரமாய்….
காந்தல் மலரிரண்டு காலணியில் சிரிக்கின்றன.


Art : Shusha Guna

பிரமி ருத்ரா
பிரமி ருத்ரா

ரவிக்குமார் பிரமிளா என்னும் இயற்பெயரைக் கொண்ட பிரமி ருத்ரா இலங்கை கிளிநொச்சியில் பிறந்தவர். இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ள இவர்,  தற்போது சிங்களப் பாட ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இலங்கையிலிருந்து வெளியாகும் ஞானம் அச்சிதழில் இவரின் கவிதைகள் வெளியாகி உள்ளன.

Share :

One response to “பிரமி ருத்ரா கவிதைகள்”

  1. Selvam kumar
    October 5, 2025

    அருமை, அற்புதம், வாழ்த்துகள்,,,

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top