உலகில் எல்லா நண்டுகளும்
பிறக்கும்போதே அநாதையாகி விடுகின்றன
வெயில் கருகாத்து
சுமந்து பொறிக்கும்
ஆமைக்குஞ்சுகள் பிரசவத்தின் போது
அருகில் தாய் இருப்பதில்லை
கடற்குதிரைகளில் ஆண்தான்
கர்ப்பம் சுமக்கின்றது
கண்ணனோ, கிறிஸ்துவோ, முருகனோ
பெரும்பாலும் கடவுளர்
ஏன் வளர்ப்புத்தாய்களிடம்
ஆம் எதற்கு இதையெல்லாம்
யோசித்துத் தொலைகிறது
மனம்
நோய்நாட்களில் அழ மரத்துப் போன மீசைமுளைத்தவர்களுக்கு
தூரத்திலிருக்கும் அம்மாக்களின் ஏக்கம் வரும்போது
இப்படித்தான் நேர்ந்து விடுகிறது
வெள்ளத்தண்ணீரில் இழுத்துச் செல்லப்படும் யானைக்குட்டியாக








Leave a Reply