Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

நெருக்கடி

அன்பரசி .
அன்பரசி .
September 1, 2025
நெருக்கடி

நடம்

வழங்கும்

நெருக்கடி 
(நாடகம்)
வசனம் : முனைவர் சு. ராஜேந்திரன்
நெறியாளுகை : அன்பரசி

காட்சி – 1

 

நான்கு நபர்கள் மேடையில் அமர்ந்து இருக்கிறார்கள். அவர்களின் முகம் தெரியாதவாறு உடம்பு முழுவதும் புடவையால் சுற்றி இருக்கிறார்கள்.
அரங்கத்தில் ஒலி இசைக்க நால்வரும் அசைகிறார்கள். இசையோடு அவர்கள் எழுந்து ஆடுகிறார்கள். நால்வரும் ஒருவரை ஒருவர் தொடாமல் நடக்கின்றனர். தொட்டாலும் ஒதுங்கிப் போகிறார்கள்.
மேடையின் நடுவே ஒரு நாற்காலி இருக்கிறது. அதற்காக நால்வரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். நடிகர்களின் நடிப்பு இசைக்கு ஏற்றார்போல் இருக்கிறது.
இதற்கு நடுவே இரண்டு குழந்தைகள் ஒன்றாக விளையாடிக் கொண்டே வருகிறார்கள். மேடையை சுற்றி விளையாடுகிறார்கள். சண்டை போட்டுக்கொண்டே நால்வரும் சிறுவர்களை கவனிக்கிறார்கள். மெதுவாக அவர்களிடம் நெருங்கி அவர்களின் கையை பிடித்து தனது உடம்பில் சுற்றி இருக்கும் புடவையை அந்த சிறுவர்களின் கையில் கட்டிவிடுகிறார்கள்.
சிறுவர்கள் தனித்தனியே பிரிக்கப்படுகிறார்கள். சிறுவர்கள் ஒன்றும் புரியாமல் நால்வர் இழுக்கும் திசைக்கு இரண்டாக பிரிந்து போகிறார்கள். இசை குறைகிறது.

காட்சி – 2

கோமாளிகள் வருகை

பாட்டு பாட, கோமாளிகள் ஆடி, பாடி பார்வையாளர்களுக்குள் இருந்து வருகிறார்கள்.
டிங்கு, டங்கு என்ற இரு கோமாளிகள் மேடைக்கு வருகிறார்கள். டங்கு பீப்பி ஒன்றை கையில் எடுத்து ஊதுகிறார். அதை பார்த்த டிங்கு தன்னிடம் இல்லை என்று அறிந்து டங்குவிடம் இருந்து வாங்கிக் கொண்டு ஓடுகிறார். ஆனால் டங்கு துரத்தவே இல்லை. டிங்கு மேடையில் ஓடிக்கொண்டே ஒரு இடத்தில் நின்று பீப்பியை ஊதுகிறார். ஆனால், சத்தம் வரவேயில்லை. இதை பார்த்த டங்கு தன்னிடம் இன்னொரு பீப்பி இருக்கிறது என்று அதை எடுத்துக் காட்டி ஊதுகிறார். அதை பார்த்த டிங்கு பீப்பியை டங்குவிடம் தூக்கி எறிந்து அழுகிறார்.
டங்கு அதை எடுத்து ஊதுகிறார், சத்தம் வருகிறது. பிறகு பார்வையாளர்களிடம் டங்கு பீப்பி கொடுக்கவா என்று கேட்டுவிட்டு… பீப்பியை டிங்குவிடம் கொடுக்கிறார். உடனே வாங்காமல், பிறகு வாங்கி ஊதுகிறார் சத்தம் வருகிறது. மகிழ்ச்சியில் இருவரும் சேர்ந்து ஊதுகிறார்கள். பிறகு ஆட்டத்துடன்….
டிங்கு : ஆமா…. நாம யாரு?
டங்கு : யாரு?
(பார்வையாளர்களிடம்)
டிங்கு : சொல்லுங்க, நாங்க யாரு?
பார்வையாளர்கள் : கோமாளிங்க…
டங்கு : நாங்க என்ன சாதாரண கோமாளிங்களா?
டிங்கு : ஊரெல்லாம் சுத்தி கத கேக்குற கோமாளிங்க…
டங்கு : அத ஏன் கதையா சொல்லிகிட்டு… பாட்டா பாடிடலாமா?
டிங்கு : ஓ… பாடிடலாமே…
டங்கு : (பாடுகிறார்) ஊரு ஊரா சுத்தி வரும் கோமாளி நாங்க…
டிங்கு : நல்ல கதைகளெல்லாம் தேடி வரும் கோமாளி நாங்க…
டங்கு : ஏய்… ஊரு ஊரா…
(மேடைக்கு மற்ற நடிகர்கள் வந்து சேர்ந்து ஆட்டத்துடன்.)
நடிகர்கள் : ஊரு… ஊரா…
டிங்கு : நல்ல கதை…
நடிகர்கள் : நல்ல கதை…
டங்கு : இங்க ஒரு கத இருக்குன்னு கேள்விப்பட்டோங்க…
நடிகர்கள் : இங்க ஒரு கத இருக்குன்னு கேள்விப்பட்டோங்க…
டிங்கு : அந்த கதைய கேட்க நாங்க இங்க ஓடி வந்தோமே…
நடிகர்கள் : அந்த கதைய கேட்க நாங்க இங்க ஓடி வந்தோமே…
டங்கு : அது என்ன கதை
அனைவரும் : மானுகதை, மயிலுகதை, யானகத, பூனகத… (2)
டண்டனக்கு டனக்குனக்கு (2)
டங்கி டங்கி டங்கி டொய்ங்…
(என்று பாடிக்கொண்டே மேடையில் அரைவட்டமாக நிற்கிறார்கள்.)
டங்கு : இந்த மானு கத மயிலு கத யான கத பூன கதையெல்லாம் இவங்களுக்கு தெரியாதா என்ன?
டிங்கு : அப்ப வாங்க… எல்லாரும் கதைய தேடலாம்…
(அனைவரும் நின்ற இடத்தில் தேடுகிறார்கள்.)
அனைவரும் : கத… கத… கத… கத…
அகிலா : எனக்கு ஒரு கத கெடச்சிருக்கு…
அனைவரும் : என்ன கத…?
அகிலா : மதுபான ஒழிப்பு
அருள் : ஏய்… நம்மள ஒழிச்சிருவாங்க.. போ…
அனைவரும் : வேற… (4)
டங்கு : எனக்கு ஒரு கத கெடச்சிருக்கு…
அனைவரும் : என்ன கத…
டங்கு : பெண்களின் வளர்ச்சி
டிங்கு : டங்கு… நீ வேற போ அந்தப்பக்கம்…
அனைவரும் : தேடு (4)
அனிதா : எனக்கு ஒரு கத கெடச்சிருக்கு.
அனைவரும் : என்ன கத…
அனிதா : Personal
அகிலா : Personal-னா அத குழி தோண்டி பொதைக்கனும்…
அனைவரும் : தோண்டு (2) பொத (2) கத (4)
கீர்த்தி : எனக்கு ஒரு கத கெடச்சிருக்கு…
அனைவரும் : என்ன கத.
( கீர்த்தி அனிதாவிடம் காதுக்குள்ள சொல்வது )
அருள் : இப்டி காதுக்குள்ள சொன்னா எங்களுக்கு எப்டி தெரியும்.
கீர்த்தி : இத வெளிய சொல்லக் கூடாது.
டங்கு : அது என்ன வெளில சொல்லக்கூடாத கத
கீர்த்தி : எல்லாருக்கும் தெரிஞ்ச கததான்
டிங்கு : தெரிஞ்ச கதையா
கீர்த்தி : ஆனா சொல்லக்கூடாது.
அனைவரும் : அப்ப அந்த கதையதான் சொல்லனும்.
டிங்கு : தெரிஞ்ச கததான்
டங்கு : தெரிஞ்சுக்க வேண்டிய கததான்
டங்கு : அப்ப நாடகத்துக்குள்ள போவோமா…?
டிங்கு : அட இப்பதான் நாடகத்த ஆரம்பிக்கிறோமா? அப்ப இதுக்கு முன்னாடி
டங்கு : ஏய்…. நாடகம் ஆரம்பிச்சுட்டு ஆனா, நம்மதான் ஆரம்பிப்போன்னு அடம்பிடிச்சு கேட்டு வந்துருக்கோம்ல…
டிங்கு : நீ லேட்டா வந்துட்டு சமாளிக்கிறியா?
டங்கு : அட… ஆமா… அப்போ எவ்வளவு நெருக்கடி தெரியுமா? அத விடு நாடகத்த ஆரம்பிப்போமா
டிங்கு : அதான் தலைப்பே சொல்லிட்டியே…
டங்கு : அப்ப சரி, வந்தவங்களுக்கு வணக்கம் சொல்லலாமா
டங்கு : எங்க நாடகத்த பாக்க வந்த உங்க எல்லாருக்கும் எங்க நாடக குழு சார்பாக வணக்கம்.
( என்று அனைவரும் மேடையில் இருந்து நகர…)
டிங்கு : ஏய்… கத சொல்லல…
டங்கு : அத சொல்லக் கூடாதாம்… நடிச்சிதான் காட்டனும் வா…
( என்று புன்னகையோடு ஓட…)

காட்சி – 3

 

மேடை மிக அமைதியாக காலியாக இருக்கிறது. அப்போது ஒலி இசைக்க, பிணம் மேடைக்கு வருகிறது. நேராக வந்து பார்வையாளர்களை பார்த்து குறுக்காக மேடை முன் படுத்துக் கொள்கிறது.

காட்சி – 4

 

Youtube Content Creator மேடைக்கு வருகிறார்.
YCC : Wow… What a Ceiling..
என்று பார்வையாளர்களை பார்த்து உற்சாகத்தோடு
YCC : Hi my fan… OK… Autograph ah… அப்றம் தரேன்…
என்று எதார்த்தமாக பிணத்தை பார்க்கிறார்.
YCC : What a Content
என்று பிணத்தை விதவிதமாக படம் பிடிக்கிறார். பார்வையாளர்களை நோக்கி
YCC : கொஞ்சம் சிரிச்சி இருந்திருக்கலாம்…
அருகில் இருக்கும் பார்வையாளர்களை பார்த்து
YCC : இத பத்தி நீங்க ஏதாவது கருத்து சொல்ல விரும்புறிங்களா?
(பதில் இல்லை)
YCC : ஓ… புரியுது. நீங்களே பல நெருக்கடியில இருக்கிங்க.
( என்று Phone-ஐ Live-ல் போட்டு… )
YCC : Hello Guys… இங்க பாருங்க, இங்க ஒரு கொலை நடந்துருக்கு… சமுதாயத்துல இது போல நெருக்கடிகள உடனுக்குடன் தெரிஞ்சுக்க நம்ம நெருக்கடி Channel-a Subscribe பண்ணிடுங்க. Like, Comment and Share பண்ணுங்க Guys. Ok Guys. இப்ப வாங்க…

YCC : இந்த கொலைக்கான நீதிய இந்த சமூக மக்கள் எப்படி வாங்குறாங்கன்னு பார்க்கலாம் Guys… இங்க இருக்க மக்கள்ட்ட அவங்க கருத்த கேட்கலாம்…

 

காட்சி – 5

 

(எனும்போது… அண்ணே வாழ்க…! என்று கோஷம் போட்டுக்கொண்டே வருகிறார்கள்.)
YCC : Guys, யாரோ வராங்க! வாங்க பாக்கலாம்.
(அண்ணே வாழ்க! அண்ணே வாழ்க! என்று நால்வர் தலையில் கிரீடத்துடன் வருகிறார்கள். )
YCC : அண்ணே…. வாங்க உங்க கருத்த சொல்லுங்க…
அண்ணன் : எங்க வரலாறு தெரியுமா…? எங்க மரபு தெரியுமா….? நாங்களாம் யாரு?
அனைவரும் : ராஜ பரம்பரை…
அண்ணன் : பெண்கள், நாட்டின் கண்கள். ஆனா, எங்களுக்கு…
அனைவரும் : வீட்டின் கண்கள்.
கீர்த்தி : இங்க பாருங்க உங்கள பெத்து வளத்து படிக்கவைக்க தெரிஞ்ச எங்களுக்கு உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க தெரியாதா?
அகிலா : இங்க பாருங்க கண்ணுகளா நம்ம கொலத்துல இருக்குறதுதான் நமக்கு பெருமை, கௌரவம், பாதுகாப்பு புரிஞ்சி நடந்துக்கோங்க.
அண்ணன் : ஆமா… நாமெல்லாம் யாரு?
அனைவரும் : வீரப் பரம்பரை…
நவீன் : அண்ணே, நீங்க என்ன சொன்னாலும் செய்வோம். உங்களுக்காக உயிரே கொடுப்போம். (என்று காலில் விழுவது. )
அண்ணன் : ம்… வா தம்பி… நாமெல்லாம் யாரு…?
அனைவரும் : ஆண்ட பரம்பரை…
YCC : நெருப்புண்ணா… இந்த கொலைய பத்தி ஏதாவது சொல்லுங்க.
( என்றதும் மேடையில் இருந்து வெளியேற…)
அனைவரும் : நாங்கலாம் யாரு, எங்க வரலாறு என்னனு தெரியுமா?
( என்று வெளியேறுகிறார்கள் )

YCC : Guys, இவுங்க வரலாறு என்னனு தெரிஞ்சா Comment பண்ணுங்க…

 

காட்சி – 6

 

( என்றதும் போராடுவோம்! போராடுவோம்! என்று சத்தம் கேட்க… )
YCC : Guys, போராட்டம் பண்றவுங்க வராங்க Guys…
( இருவர் வருகிறார்கள் )
கீர்த்தி : போராடுவோம்! போராடுவோம்!
முத்துராணி : போராடுவோம்! போராடுவோம்!
கீர்த்தி : நெருக்கடியிலிருந்து போராடுவோம்!
முத்துராணி : நெருக்கடியிலிருந்து போராடுவோம்!
கீர்த்தி : போராடுவோம்! போராடுவோம்!
முத்துராணி : போராடுவோம்! போராடுவோம்!
கீர்த்தி : தீண்டாமைக்கு எதிரா போராடுவோம்
முத்துராணி : தீண்டாமைக்கு எதிரா போராடுவோம்
கீர்த்தி : வேண்டாம்! வேண்டாம்!
முத்துராணி : வேண்டாம்! வேண்டாம்!
கீர்த்தி : வன்முறை வேண்டாம்!
முத்துராணி : வன்முறை வேண்டாம்!
கீர்த்தி : வேண்டும்! வேண்டும்!
முத்துராணி : வேண்டும்! வேண்டும்!
கீர்த்தி : நீதி வேண்டும்!
முத்துராணி : நீதி வேண்டும்!
கீர்த்தி : வாங்க இன்னக்கி நடக்குற போராட்டத்துக்கு எல்லாரையும் கூப்பிடலாம். இந்தாங்க நோட்டீஸ்…
( என்று கைகளில் கொடுக்க… அதனை பார்வையாளர்களிடம் கொடுக்கின்றனர். )
முத்துராணி : அப்போது வேலைக்கு கிளம்பி செல்லும் இருவர் மேடைக்கு அவசரமாக் வர,
அகிலா : சீக்கிரம் வாங்க… வேலைக்கு Late ஆகுது.
அருள் : சார், சார், இதோ வந்துட்டேன் சார். பக்கத்துலதான் சார் இருக்கேன். 5 Minutes-ல வந்துடுவேன் சார். ( என்று கூறிவிட்டு வருகிறார்கள் )
கீர்த்தி : ( நோட்டீஸ் கொடுத்து ) போராட்டம் நடக்குதுண்ணே… வாங்க…
அருள் : நானும் கேள்விப்பட்டேன், மனசுக்கு ரொம்ப கஷ்டமாதான் இருக்கு… நீங்க நல்லா பண்னுங்க நான் ஆபீஸ் போகனும் ( என்று நகர )
முத்துராணி : அக்கா, நீங்களாவது வாங்க…
அகிலா : இல்லம்மா… வேலைக்கி Late ஆகுதும்மா… (என்று போகிறார்கள் )
முத்துராணி : என்னப்பா இது? கொஞ்சம்கூட சமுதாய பொருப்பே இல்லாம போறாங்க…
கீர்த்தி : அது அப்படி இல்லப்பா… அவுங்க பிள்ளைக்கு School Fee கட்டணும், மாசம் EMI-னு நெறயா இருக்கு. ஒருநாள் வேளைக்கி போகலன்னா அவுங்க சம்பளத்த பிடிச்சிருவாங்க. அதுக்கு கடன் வாங்குவாங்க அப்றம் கடனுக்கு மேல கடன்…
முத்துராணி : ப்பா… இதுவும் நெருக்கடி தான்…
கீர்த்தி : அந்த நெருக்கடியில் இருந்துதான் போராடனும் வாங்க…
( என்று YCC-யிடம் நோட்டீஸ் கொடுத்துவிட்டு… போராடுவோம் (4))

YCC : Guys, நீங்களும் இந்த போராட்டத்துல கலந்துக்கோங்க Guys.

 

காட்சி – 7

 

(என்றதும் தலைவர் வாழ்க! என்று போலியான சோகம் கலந்த சத்தம் கேட்கிறது…)
YCC : Guys, தலைவர் வர்றாங்க Guys… வாங்க…
( அரசியல்வாதிகள் வருகிறார்கள் Chorous… தலைவர் வாழ்க… )
தலைவர் : தம்பியோட இழப்பு ஈடு செய்ய முடியாததுதான். இதப்பத்தி கேள்விப்பட்டதும் ரொம்ப கவலப்பட்டேன். இதற்கான உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். இறந்துபோனவர் குடும்பத்துக்கு 6 லட்சம் ரூபா நிதி வழங்கப்படும்…
YCC : தலைவரே… நீதி…?
தலைவர் : நீதியா…? அதான்…
அருள் : நிதி தரோம்ல… போங்க… போங்க…
( என்று கோரஸுடன் மேடையை விட்டு போகிறார்கள். )

YCC : நிதி – நீதி What a Rhyming Dialogue… இது புடிச்சிருந்தா ஒரு Heart-u போட்டு விடுங்க Guys…

 

காட்சி – 8

 

(என்றதும் பெண்கள் ஆண்களுக்கு சமமல்ல… அதற்கும் மேல் என்ற சத்தம் கேட்கிறது.
YCC : Guys… வாங்க… ( வந்தவரை பார்த்து ) உங்க கருத்த சொல்லுங்க…
முத்துராணி : சாதி, மதம், மாறி ஒரு ஆணும் பெண்ணும் காதலித்தால் கொலை பண்ணுவிங்களா?
கீர்த்தி : ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஒரு ஆணிற்கு தான்  Support  பண்றிங்க. ஆனா ஒரு பெண்ணுக்கு நியாயம் கேட்க மாட்றீங்க…?
அகிலா : காதலிச்ச ஒரே காரணத்துக்காக ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பெரிய அவலச் சொல்லா? இதை யாரும் கேக்க மாட்டீங்களா…?
முத்துராணி : ஒரு பெண்ணுடைய இடத்தில் இருந்து ஒரு பெண்ணை அவதூறாக பேசுறீங்களே… அந்த பெண்ணோட சூழ்நிலைய புரிஞ்சுக்க மாட்டீங்களா? நீங்களும் ஒரு பெண் தானே…
கீர்த்தி : அந்த பையனுடைய இறப்ப காரணமாக வைத்து அந்த பெண்ணை தினம் தினம் வார்த்தையால கொல்லாதீங்க…
அகிலா : ஆணவக் கொலையை சமூக வலைதளத்தில் போட்டாலே… ஒரு பெண்ணைதான் தவறா சித்தரிச்சி காட்றீங்க…. ஏன்?
YCC : Super… Super…
மூவரும் : பெண்கள் ஆண்களுக்கு சமமல்ல… அதற்கும் மேல்.

( என்று கூறிக்கொண்டே வெளியேறுகிறார்கள்)

 

காட்சி – 9

 

YCC : என்ன இது… எல்லாரும் சமம் Guys… நீங்க என்ன சொல்றீங்க…? உங்களோட Opinion-அ Comment-ல சொல்லுங்க
( என்றவாறு மொபைலை பார்க்கிறார். அதில் ஒரு பாட்டி வருவது தெரிகிறது. )
YCC : Guys… ஒரு பாட்டி வர்றாங்க… இவங்க வந்து என்ன சொல்லப் போறாங்கனு பார்க்கலாம்…
( மேடையில் பாட்டி)
YCC : பாட்டியம்மா, உங்க கருத்த சொல்லுங்க!
அகிலா பாட்டி : ஆமாம் போப்பா… சோத்துக்கும் தண்ணிக்குமே நெருக்கடியா இருக்கு. இதுல நீதிக்கு எங்கப் போறது. ரெண்டு மூனு பஞ்சம் பாத்துட்டேன். சாதியா காப்பாத்துனுச்சி? மனுசனுக்கு மனுசன் உதவிக்கிறதுதானே காப்பாத்துச்சி!
வாழ்றதுக்குதானே இவ்வளவும் இல்ல… செத்து போறதுக்கா… என்னவோ போ…
(என்று புலம்பிக்கொண்டே வெளியேறுகிறார்)
YCC : Guys… சாதாரண பாட்டி இல்ல… Experience-ஆன பாட்டி போல…

காட்சி – 10

 

(சட்டம் தன் கடமையை செய்யும் (2) என்று சத்தம் கேட்கிறது…)
YCC : Guys… Police வராங்க. என்ன நடக்கும்னு தெரியல, நா அவுங்களுக்கு தெரியாம காட்றேன்…
(காவல்துறையினர் இரண்டு பேர் மேடையின் முன் வருகிறார்கள். அதுவரை சத்தம் கேட்கும்… பார்வையாளரை பார்த்து நிற்கிறார்கள். நின்றவாரு…)
நவீன் : சட்டம் தன் கடமையை செய்யும்
கீர்த்தி : சட்டம் தன் கடமையை செய்யும்
பார்வையாளர்களுள் ஒருவர் : செஞ்சதே உங்க ஊட்டு புள்ளதானாமே…
நவீன் : யார்ரா அது…?
(என்று கோபத்துடன் முன் வர… கீர்த்தி அவரை தடுத்து நிருத்தி கண்ணை காட்டுகிறார்.)
நவீன் : சட்டம் தன் கடமையை செய்யும்
கீர்த்தி : சட்டம் தன் கடமையை செய்யும்
( என்று சொல்லிக்கொண்டே வெளியேறுகிறார்கள்)

YCC : Guys, சட்டம் தன் கடமையை செய்யும்….

 

காட்சி – 11

 

(மேடைக்கு இருவர் ஜோடியாக வருகிறார்கள். அவர்களை பார்த்ததும்)
YCC : Guys, வாங்க… வாங்க… என்று ரகசியமாக சொல்ல…
(இருவரில் ஆண் அந்த உடலைப் பார்த்து பயப்படுகிறார்… அதை பார்த்த பெண்)
முத்துராணி : நீ பயப்படாத, நான் உன்ன True-வா Love பண்ணேனே!
அருள் : என்ன? Love பண்ணுனியா?
முத்துராணி : எதுக்குடா நீ இப்படி பயப்படுற? நமக்கு ஏதாச்சும் ஆனாலும் நம்ம காதல் வாழுமுல்ல…
அருள் : நம்ம செத்து போனதுக்கு அப்றம் காதல் வாழ்ந்தா என்ன? இல்லன்னா என்ன?
(என்று சொல்லிக்கொண்டே அருள் வெளியேறுகிறார்.)
முத்துராணி : டேய்… இருடா…
(என்று பார்வையாளர்களை பார்த்து நிற்கிறார். முத்துராணி முகத்தின் இரு பக்கமும் இரண்டு இரண்டு நபர்கள் தங்கள் முகத்தை வைத்து நி
நிற்கிறார்கள். வலது பக்கம் குடும்பம் சார்ந்த இருவர், இடது பக்கம் சமூகம் சார்ந்த இருவர் நிற்கிறார்கள். )
(குடும்பம் : நவீன். கீர்த்தி | சமூகம் : அகிலா, அருள்)
நவீன் : எங்க குடும்பத்துக்குனு ஒரு கௌரவம் இருக்கு
அகிலா : ஆமா, நாதான் காதலிச்ச… செத்துடுற…
கீர்த்தி : எங்க குடும்பத்துக்கு ஒன்னுமே தெரியாது. அவுங்க ரொம்ப நல்லவுங்க.
அருள் : ஆமா, நான் தான் ஏமாத்திட்ட…
கீர்த்தி : அவுங்க ரொம்ப நல்லவுங்க…
அகிலா : செத்துடுறேன்…
நவீன் : எங்களுக்குனு ஒரு கௌரவம் இருக்கு
அருள் : ஏமாத்திட்ட…
(என்று முகத்தில் எந்த பாவனையும் இல்லாமல் சண்டை வருகிறது. முத்துராணி அனைவரையும் பார்த்துவிட்டு வெளியேறுகிறார். அவருடன்… அனைவரும் வெளியேறுகிறார்கள். சத்தம் போட்டுக் கொண்டே…)

YCC : Guys, வெளியே தெரிஞ்ச விஷயத்த வெளிப்படையா இந்த சுதந்திர நாட்டுல பேச முடியல இல்ல…

 

காட்சி – 12

 

பார்வையாளர்களுள் ஒருவர் : நீ செத்தாலும் உனக்கான நீதிய நீ தான் கேக்கனும் போல…
(என்றவுடன் ஒலி இசைக்க, வரதன் எழுகிறார்.)
YCC : நீங்களே எழுந்துட்டிங்களா?
(வரதன் அனைவரையும் பார்க்கிறார்.)
வரதன் : நான் பிணம் பேசுகிறேன்….
புதிதாக நீங்கள் ஒன்றும் பேசவேண்டாம். இந்த மாதம் என் கதை… அடுத்த மாதம் நீங்கள் பேச வேறொரு புதிய கதை வரும். அப்போதும் பேசுங்கள். நீங்கள் பேசிக்கொண்டு மட்டுமே இருங்கள் கதைகளை மட்டும்… இங்கே கதைகளுக்குப் பஞ்சமே இல்லை..
இப்போது நானும் கொஞ்சம் பேசுகிறேன்…
ஆயிரக்கான ஆண்டுகளாக என் முன்னோர் அழுத கண்ணீரின் கரிப்புச் சுவை தாளாமல், வழங்கப்பட்ட சலுகைகளில் படித்து வாழத் தொடங்கியிருந்தேன்
என் முன்னோர்களது
குரல்வளைகளை நெரித்தீர்கள்
நான் வாழத் தொடங்கும் போது கொன்று விட்டீர்கள்
நாங்க என்னப்பா செய்தோம் என
உங்களுக்குக் கோபம் வருகிறதா?
உங்கள் கைகளில் ஆயுதம் இல்லை
உங்கள் மனங்களில்?
உங்கள் சொற்களில் சாதி இல்லை
உங்கள் மௌனத்தில்
உங்கள் கண் முன்னே அப்போதுதான் வாழத்தொடங்கிய நான் கொல்லப்படும் போது
நான் சத்தமிட்டு அலறிய போது
என் உயிரற்ற முகத்தில் என் தாய் வைத்த கடைசி
முத்தத்தின் போது
நீதி வேண்டும் நீதி வேண்டும் என
இப்போதும் கதறிக் கொண்டிருக்கிற
என் தந்தையின்
கண்ணீரின் போது
காதலின் பெயரால்
நான் ஏமாற்றிக்
கொல்லப்பட்ட போது
மௌனமாய் இருந்தீர்களா
என்னை வெட்டிச் சாய்த்த ஆயுதம் நீங்கள் கொடுத்ததுதான்
பொதுச் சமூகத்தின் மௌனமே சமூகநீதியைக் கொல்லும் ஆயுதம்
ஆகவே பேசுங்கள்
உங்கள் மனங்களின்
இரத்தக்கறைகளை
என் காதலில் என் உயிரில் கழுவிக் கொள்ளுங்கள்
யார் வருகிறீர்கள்
மனித சமத்துவம் காக்க
யார் வருகிறீர்கள்
மேடைக்கு…
சிவராம் : (தன் கயிற்றை அவிழ்த்துப் போட்டுவிட்டு) நான் வரேன்!
(கனல் வராமல் நிற்கிறார்.)
முத்துராணி : நான் வரேன்
நவீன் : நான் வரேன்
கீர்த்தி, அகிலா, அருள் : நான் வரேன்
அனிதா : நானும் வரேன்
(கனல் பார்த்துக்கொண்டே நிற்க, சிவராம் அருகில் சென்று…)
சிவராம் : வா
(என்று அழைக்கிறார். கனல் கயிற்றை பார்த்து சிவராமை பார்த்து கயிற்றை அவிழ்த்துப் போட்டுவிட்டு)
கனல் : நானும் வரேன்… என்று அனைவருடனும் நிற்க…
அனைவரும் : நாங்க சமத்துவம் காக்க வரோம்… நாங்க வரோம்…
அனைவரும் வணங்குதல்
நாடகம் நிறைவு!

அன்பரசி .
அன்பரசி .

அன்பரசி M.Sc., நடிகர் மற்றும் நாடகச் செயற்பாட்டாளர் ஆவார். முதுகலை கணிதவியல் (M.Sc., Mathematics) பட்டம் பெற்றவர். பள்ளிப் பருவம் முதலே நாடகம் உள்ளிட்ட கலைச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர். சென்னை தியேட்டர் அகாடமியில் நடிப்புப் பயிற்சியை நிறைவு செய்த இவர், ‘சிந்தாமணி செல்வியின் டைரி’, உள்ளுரம் ஆகிய தனிநபர் நாடகங்கள் உட்பட பல்வேறு குழுக்களில் நவீன நாடகங்களிலும் நடித்துள்ளார். மேலும், பாட்டல் ராதா, பராரி, போகுமிடம் வெகு தூரமில்லை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல், மருமகள், பூங்கொடி, விஜய் தொலைக்காட்சியின் தமிழும் சரஸ்வதியும் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நள தமயந்தி ஆகிய தொடர்களிலும் நடித்திருக்கிறார். ‘நடம்’ அமைப்பின் இணை நிறுவனரான இவர், முழு நேர நடிகராக தன் பயணத்தைத் தொடர்கிறார்.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top