துடிப்பு
ஒருவர் குளத்தில் இறங்கினார். தண்ணீரில் முழ்கி மூச்சுவிட்டார்.
அந்த மூச்சுக்காற்று நீர்க்குமிழிகளானது. நீர்க்குமிழிகள் தண்ணீரில் ஏறி மேலே வந்தன.
நீந்துவதற்கு நீர்க்குமிழிகளுக்குத் துடுப்பு இல்லை. ஆனால், துடிப்பு இருக்கிறது.
மூச்சால் மலர்ந்த பூக்கள்
பலூன் ஒன்றை வாங்கினேன். அது பூ போட்ட பலூன்.
பலூனில் இருந்த பூக்கள் வாடிப்போயிருந்தன.
நான் பலூனை ஊதினேன்.
ஊத, ஊத பலூன் பெருத்தது. பலூன் மினுமினுத்தது.
முன்பு வாடிப்போயிருந்த பூக்கள் இப்போது மலர்ந்திருந்தன.
காற்று வரைந்த வட்டம்
நான் ஒரு காற்றாடி வாங்கினேன். அதற்கு இரண்டு இறக்கைகள். அது எனக்கு நான்கு ஆரக்கால்களாகத் தெரிந்தன.
காற்றாடியை உயர்த்திப் பிடித்தேன். காற்றில் காற்றாடி சுழன்றது. காற்றாடி சுழல், சுழல் ஒரு வட்டம் உருவானது.
ஆரக்கால்களை வைத்து நான் ஒரு வட்டம் வரைவேன் என்றது காற்று.
வேலூரில் வசித்துவருகிறார். பிரியாத மழை நினைவு என்கிற கவிதை கவிதை நூலையும்
புலி கிலி, எருமையின் நிழல் ஆகிய சிறார் கதை நூல்களையும், பூதம் தூக்கிட்டுப்போன தங்கச்சி, தங்க மாங்கனி ஆகிய நாட்டுப்புற சிறார் கதை தொகுப்புகளையும், கை வீசி நடக்கும் நிழல், நீலக்குரல் ஆகிய சிறார் பாடல்களையும் எழுதி உள்ளார். சிறார் கதைச் சொல்லியான இவர் சிறார்களுக்காகக் ‘கூட்டாளிகள்’ என்ற கலைக் குழுவைவையும், ‘தமிழ்க் கனவு’ என்ற இலக்கிய அமைப்பை நடத்திவருகிறார்.








Leave a Reply