விழுந்தாலும் வலிக்காது
காலை நேரம். சூரிய ஒளி ஒரு வீட்டின் கதவின் மீது படர்ந்திருந்தது. அந்தக் கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.
வீட்டிற்குள் இருந்த தாத்தா தீடீரெனக் கதவைத் திறந்தார். கதவைத் திறந்ததும் கதவின்மீது படர்ந்திருந்த ஒளி வீட்டிற்குள் விழுந்தது.
வீட்டிற்குள் விழுந்த ஒளி இப்படிச் சொல்லிக்கொண்டது. “மனிதர்களுக்கு உடம்பு இருக்கிறது. விழுந்தால் அவர்களுக்கு அடிபடுகிறது. எனக்கு உடம்பு இல்லை. அதனால் விழுந்தாலும் எனக்கு அடிபடுவதில்லை.”
கூழாங்கல்
ஒரு பெரிய காட்டாறு. சிறுவர் ஒருவர் அந்த ஆற்றில் குழி தோண்டினார். அப்போது ஒரு கூழாங்கல் கிடைத்தது.
அந்தக் கல் ஒரு காலத்தில் காட்டில் இருந்தது. மழை வெள்ளம் அடித்துவந்து ஆற்றில் சேர்த்துவிட்டது.
அது காட்டை விட்டு வந்து பல காலமாகிவிட்டது. இருந்தாலும் காட்டில் நடப்பவை அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தது. அதைப் பார்த்து சிறுவர் வியப்படைந்தார். “எப்படி தெரிந்துகொள்கிறாய்” என்று கேட்டார்.
கூழாங்கல் சொன்னது. “மழைக் காலத்தில் காட்டிலிருந்து வெள்ளம் இறங்கிவரும். அந்த வெள்ளத்திடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன்.”
கோழிக் குடும்பம்
அண்டத்தில் சூரியக் குடும்பம் இருக்கிறது. அதில் மொத்தம் ஒன்பது கோள்கள். சூரியன்தான் அந்தக் குடும்பத்தின் மையம். மற்ற எட்டுக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.
ஒரு கோழிக்குஞ்சியிடம் ஒருவர் கேட்டார். “உங்கள் குடும்பம் எப்படிப்பட்டது”?
கோழிக்குஞ்சு சொன்னது. “எங்கள் குடும்பத்தில் மொத்தம் ஏழு பேர். எங்கள் அம்மாதான் எங்களுக்குச் சூரியன். நாங்கள் அந்தச் சூரியனைச் சுற்றி வருகிறோம்”.
வேலூரில் வசித்துவருகிறார். பிரியாத மழை நினைவு என்கிற கவிதை கவிதை நூலையும்
புலி கிலி, எருமையின் நிழல் ஆகிய சிறார் கதை நூல்களையும், பூதம் தூக்கிட்டுப்போன தங்கச்சி, தங்க மாங்கனி ஆகிய நாட்டுப்புற சிறார் கதை தொகுப்புகளையும், கை வீசி நடக்கும் நிழல், நீலக்குரல் ஆகிய சிறார் பாடல்களையும் எழுதி உள்ளார். சிறார் கதைச் சொல்லியான இவர் சிறார்களுக்காகக் ‘கூட்டாளிகள்’ என்ற கலைக் குழுவைவையும், ‘தமிழ்க் கனவு’ என்ற இலக்கிய அமைப்பை நடத்திவருகிறார்.
Leave a Reply