நான் நாவினி பெலிக்ஸ். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் என்ற ஊரில் வசித்து வருகிறேன். மூன்றாம் வகுப்பு முதல் வீட்டிலிருந்துபடியே படித்து வந்தேன். தற்போது NIOS (National institute of open schooling) மூலம் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறேன். வீட்டுக் கல்வியே எனது வாழ்க்கையை மாற்றியது. இதுவே எனது கலைப் பயணத்தின் தொடக்கமாகவும் அமைந்தது.
வீட்டில் அதிக நேரம் இருந்ததால், என்ன செய்வது என்று தெரியாமல் சுவரில் வரையத் தொடங்கினேன். வரைவது ஒரு பொழுதுபோக்கு போலத் தொடங்கியது. ஆனால் விரைவில் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. காகிதத்தில் வரைவது எனக்குப் பிடிக்கவில்லை. மாறாக, அறைச் சுவரில் வரைவது மிகவும் பிடித்திருந்தது.
கலைக்கான தெளிந்த பார்வை 9ஆம் வகுப்பில் உருவானது. அப்போது ஓர் ஓவிய வகுப்பில் சேர்ந்தேன். அது என் பார்வையை மாற்றியது. ஓவியம் வரைவதையும், வண்ணம் இடுவதையும் அதிக நுட்பத்துடன் கற்றுக்கொண்டிருக்கிறேன். மேலும் இயற்கை வண்ணங்களை எப்படித் தயாரிக்க வேண்டும், அவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும், களிமண் உருவாக்கம் போன்ற புதிய விஷயங்களை அறிந்தேன். இது என் கலை அறிவையும் ஆர்வத்தையும் வளர்த்தது. அப்போதுதான் கலையை என் வாழ்க்கையாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனை உதித்தது.
எனது அடுத்த கனவாக BFA (Bachelor of Fine Arts) படிப்பைத் தொடர விரும்புகிறேன். ஒரு நிபுணராக வளர, என் படைப்புகளை உலகம் முழுவதும் பகிர, இந்தப் பயணம் உறுதுணையாக இருக்கும் என்று நினைக்கிறேன். சுவரில் தொடங்கிய என் கலைப் பயணம், ஓர்நாள் அச்சுவர்கள் வழியே உலக அளவில் நிலைத்திருக்கும் என நம்புகிறேன்.

தேங்காய் ஓட்டை கூட உயிர் கொண்டு பேசும், அதுதான் கலை மந்திரம்
(தேங்காய் ஓடு பெட்டி, acrylic colour painting)

இயற்கையின் அழகு, ஒவ்வொரு இறக்கையிலும்
(இருவாய்ச்சி பறவை சுவர் ஓவியம், acrylic colour painting)

என் கண்ணுக்கு அந்த கல் சிங்கமாக தெரிந்தது
(கல் ஓவியம், acrylic colour painting)

கல்லின் வடிவம் ஒரு புதிய படைப்பை உருவாக்குகிறது.
(கல் ஓவியம், acrylic colour painting)

மலர் போல மெல்லியவள், கலை போல அழகியவள்
(இயற்கை வண்ணங்கள்)

மயிலின் நடனம் போல் கலையின் அசைவுகளும் மனதை மயக்கும்
(Poster colour Painting)

மனித வாழ்வின் வண்ணங்கள்
(கையால் அச்சிடப்பட்ட இயற்கை வண்ண ஓவியம்)

இலைகளால் பிறந்த கொக்குகள்

இடும்பன்
(இயற்கை வண்ணங்கள்)

பன்னீர் மல்லி
(இயற்கை வண்ணங்கள் மற்றும் வண்ண பென்சில்)
ஓவியர் பார்வதி பாலா திருநெல்வேலி மாவட்டம் முனஞ்சிப்பட்டியைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே ஓவியங்கள் வரைதல், களிமண் சிற்பங்கள் செய்தல் ஆகியவற்றில் நாட்டம் கொண்டுள்ளார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுவர்களுக்கு ஓவியப் பயிற்சி அளித்து வரும் இவர், இதன் வாயிலாகக் கலைகளில் தன்னைப் புதுப்பித்துக் கொள்பவராகவும் திகழ்கிறார். இவற்றில் குறிப்பிடத்தகுந்தது ரேகை ஓவியம்.
TNMAI அறக்கட்டளையைச் சேர்ந்த மாதவன் பிள்ளை அவர்களின் முன்னெடுப்பில், 2022 மே மாதம் One Two Art Gallery இல் இயற்கை வண்ண ஓவியங்கள், தேங்காய் ஓடு, விதைகள், சிப்பிகளால் செய்யப்பட்ட அணிகலன்களைக் காட்சிப்படுத்தி உள்ளார்.
ம.செந்தமிழனின் ‘ஊழி’ உட்பட செம்மைப் பதிப்பக நூல்களுக்கு முகப்பு, உள் ஓவியங்கள் வரைந்துள்ளார். 2016 இல் தனது ஓவிய வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து ஓவியக் கண்காட்சி நடத்தியுள்ளார். வானகம், வள்ளுவம், செம்மை, பொதிகைச் சோலை போன்ற அமைப்புகளில் சிறார்களுக்கு ஓவியம் மற்றும் இயற்கை வண்ணப் பயிற்சி அளித்துள்ளார். வழிபாட்டு ஓவியங்கள், கருத்து ஓவியங்கள், ஆடை ஓவியங்கள், திருமணப் பதாகை ஓவியங்கள், புடைப்புச் சிற்பப் பலகைகள் செய்தல், விதைகள் – களிமண் – தேங்காய் ஓடு போன்ற பொருட்களைக் கொண்டு அணிகலன்கள் செய்தல், சுவர் ஓவியங்கள், லோகோ வடிவமைப்பு ஆகிய வெவ்வேறு கலைவடிவங்களில் தொடர்ந்து செயல்பங்காற்றி வருபவர் ஓவியர் பார்வதி பாலா.








Leave a Reply