கோவை மாவட்டத்தில் வசிக்கும் நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். எனது பெயர் கவிஸ்ரீ சாய். மூன்று வயதிலிருந்தே சித்திரம் வரைவதில் எனக்கு இருந்த ஆர்வத்தை உணர்ந்த என் பெற்றோரும் உறவினரும் எனக்கு வரைவதற்கான வண்ண வண்ண வரைகோல்கள் வாங்கிக் கொடுத்து வந்தனர்.
ஒவ்வொரு வயதிலும் எனது ஓவியங்கள் வெவ்வேறு வகைகளில் இருந்தன. பிறந்ததிலிருந்தே வாடகை வீட்டில் குடியிருந்ததால் சுவரில் வரைவதில் இருந்த தடையினை நான் வீட்டுப் பொருட்களான அலமாரி, குளிர் சாதனப் பெட்டி, மேசை போன்றவற்றில் வரைந்து நிறைவேற்றிக் கொண்டேன். ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுத் திரும்பிய என் தந்தை, வீட்டுப் பொருட்களில் நான் வரைவதைத் தடுக்க கேன்வாஸ் வாங்கித் தந்தார்கள்.
எட்டு வயது முதலே என் ஆர்வம் “ஆடை வடிவமைப்பு” துறையைச் சார்ந்தே உள்ளது. துணிக்கடைகளில் எனது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற ஆடைகள் அமையாதது எனக்கு அத்துறையின் மேல் நாட்டம் கொள்ளவைத்தது. பிற்காலத்தில் அனைவராலும் விரும்பத்தக்கச் சிறந்த ஆடைகளை வடிவமைப்பதே எனது நோக்கம்.





















Leave a Reply