திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் திண்டுக்கல் ஞானப்பிரகாசியார் புரத்தைச் சேர்ந்தவர். ஓவியரும், கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். இவரது இயற்பெயர் பூண்டி ஜெயராஜ் ஆகும். ஜெயராஜின் பெற்றோர் தோல்பதனிடும் தொழிற்சலையில் வேலை செய்கின்றனர். இவர் தேவகோட்டையியிலுள்ள தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
புதிய கோடங்கி, ஏர், தலித் முரசு, உயிர் எழுத்து முதலிய இதழ்களில் தன் கவிதைகளை எழுதிவருகிறார். கொஞ்சோண்டு, நாச்சிமுத்து, ஒழுகிய வானத்தை நேற்றுதான் மாற்றினோம், ஒரு கொடந்தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம், உச்சி சூரியனில் முளைக்கும் பனை ஆகிய நூல்களை எழுதி உள்ளார். நவீனச் சிற்றிதழ்களில் அளப்பரிய ஓவியப் பங்களிப்பை இவர் அளித்து வருகிறார். அரசியலும் அழகியலும் முயங்கக் கூடிய அரிதான இடத்தை இவரின் ஓவியங்கள் இட்டு நிரப்புகின்றன. வாழ்வுக்கும் கலைக்கும் சற்றும் இடைவெளியின்றி வாழ்ந்து வரும் திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் ஓவியங்களை தடாரி தன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமைகொள்கிறது.
திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் திண்டுக்கல் ஞானப்பிரகாசியார் புரத்தைச் சேர்ந்தவர். ஓவியரும், கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். இவரது இயற்பெயர் பூண்டி ஜெயராஜ் ஆகும். ஜெயராஜின் பெற்றோர் தோல்பதனிடும் தொழிற்சலையில் வேலை செய்கின்றனர். இவர் தேவகோட்டையியிலுள்ள தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
புதிய கோடங்கி, ஏர், தலித் முரசு, உயிர் எழுத்து முதலிய இதழ்களில் தன் கவிதைகளை எழுதிவருகிறார். கொஞ்சோண்டு, நாச்சிமுத்து, ஒழுகிய வானத்தை நேற்றுதான் மாற்றினோம், ஒரு கொடந்தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம், உச்சி சூரியனில் முளைக்கும் பனை ஆகிய நூல்களை எழுதி உள்ளார்.

Leave a Reply