Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

வசந்ததீபன் .
வசந்ததீபன் .
December 2, 2025
‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

சரண்குமார் லிம்பாலே மராட்டிய தலித் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமை. வைதீக எதிர்ப்பைப் பிரதானமாகக் கொண்டிருந்தாலும் சுய எள்ளலையும் சுய விமர்சனத்தையும் தன் எழுத்துகளில் இழையோட விடுபவர். இவரது எழுத்துக்கள் வானத்தை அண்ணாந்து பார்த்தும், குளுரூட்டப்பட்ட அறைகளுக்குள் நான்கு சுவர்களை வெறித்தும் எழுதப்பட்டவை அல்ல; மாறாக வெட்டுண்ட சமூக மனத்தின் சதைகளையும், ரத்த நாளங்களையும், எலும்புகளையும் பொதிந்து வைத்திருப்பவை. இந்தியச் சமூகம் எதையெல்லாம் விலக்கி வைத்ததோ, எதையெல்லாம் மறைத்து வைத்ததோ, எதையெல்லாம் சொல்வதற்கும் கூசியதோ அவற்றையெல்லாம் துணிவுடன் எழுத்தாக்கிய சரண்குமார் லிம்பாலே இந்திய இலக்கிய முகங்களில் தவிர்க்க முடியாதவர். 

அனார்யா, தலித் பார்ப்பனன், ஓலம், கும்பல் ஆகிய இவரது படைப்புகள் எஸ்.பாலச்சந்திரன், ம.மதிவண்ணன் ஆகியோரின் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளியாகி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. சமத்துவச் சமுதாயத்தைக் கட்டமைக்க இடைவிடாது செயல்பங்காற்றிவரும் சரண்குமார் லிம்பாலேவுடன் ஞான்சந்த் பாகடீயின் உரையாடல் நிகழ்த்தியுள்ளார். இவ்வுரையாடலை தடாரி டிசம்பர் இதழுக்காக தமிழில் மொழிபெயர்த்துள்ளார் வசந்ததீபன். இனி உரையாடலிலிருந்து…

தங்களின் குழந்தைப் பருவம், ஆரம்பக் கல்வியின் போதும் நிகழ்ந்த அனுபவங்களைச் சொல்லுங்கள்.

முதலாவதாக நான் ஏழையாக இருந்தேன் மற்றும் தீண்டத்தகாதவனாக இருந்தேன். இது மட்டுமல்ல நான் ‘அக்கர்மாசி’ (ஒதுக்கப்பட்டவன்) யாகவும் இருந்தேன். தீண்டத்தகாதவனாக இருந்த காரணத்தால் கிராமத்துக்காரர்கள் என்னோடு நல்ல முறையில் பேசுவதில்லை. மேலும் ‘அக்கர்மாசி’ யாக இருந்த காரணத்தால் தலித் மக்களும் என்னோடு நன்றாகப் பேசுவதில்லை. ஏழையாக இருந்ததால் பசி எப்போதும் என்னைப்  பின்தொடர்ந்தது. எனது குழந்தைப்பருவம் பயமுறுத்துவதாக இருந்தது. இந்த வயதில் பயம் என்னுடைய மனதில் ஆட்சி செய்தது. நான் எல்லாவற்றிற்கும் பயந்து கொண்டிருந்தேன். பயப்படுவது எனக்கு வாழ்க்கையாகவும் இருந்தது. இன்றும் இந்தப் பயம் நீங்காது இருக்கிறது. எல்லா வயதிலும் இப்பயத்தை எதிர்த்துக் கொண்டிருக்கிறேன். இது எனக்கு மட்டுமே உரித்தானதில்லை. என்னைப் போல் இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்.

பள்ளிக் கல்வியை நான் செருப்புகளின் அருகில் அமர்ந்து பெற்றிருக்கிறேன். உயர் ஜாதி பிள்ளைகளோடு அமர்வது எனக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. எனக்கு எல்லா உயர் ஜாதி மனிதர்களைக் கண்டு பயம் ஏற்பட்டிருந்தது. ‘நான் தீண்டத்தகாதவனாக இருக்கிறேன்’ என்ற இந்த உணர்வு என்னை எப்போதும் துரத்தியபடியே இருக்கிறது. இன்றும் இந்தப் பயம் என்னை எப்போதும் துன்புறுத்துகிறது. இதை நான் முடித்து விட முடியவில்லை. என்னுடைய முழு வாழ்க்கையும் இந்தப் பயத்தால் எதுவுமில்லாததாக ஆகியிருக்கிறது. இந்தப் பயம் எனக்குள்ளே உள்ள மனிதத்தை எப்போதும் கொல்வதற்கு முயற்சி செய்திருக்கிறது. நான் இந்தப் பயத்தோடு குழந்தைப் பருவத்திலிருந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான் எனது குழந்தைப் பருவத்தை எப்போதும் ஒரு பயங்கரமான விபத்து வடிவமாகவே பார்க்கிறேன். இன்றும் அந்த உணர்வு என்னுடைய சரீரத்தின் மீது ஊர்ந்து வருகின்றது. என்னுடைய கடந்த கால வாழ்வைப் பற்றி யோசித்தால் அது கசப்புணர்வுதான் எனக்கு ஏற்படுகிறது. எந்த மாதிரியான வாழ்வு வாழ்ந்திருக்கிறேன் நான். இதை யோசித்து நான் ஆச்சரியப்படுகிறேன். நான் இதை எப்படி ஜெயித்தேன், சகித்தேன் என்பது தெரியவில்லை. நான் மிகவும் சுயமாக ஜெயித்திருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயமாகியிருக்கிறது.

அநியாயம், கொடுமையினை எதிர்க்கும் சக்தி இல்லாமல் இருந்தது. இந்தச் சமூக அமைப்பு பயங்கரமானதாக இல்லை, அநியாயத்தை மட்டும் வாழ வைக்கிறது. நான் ஆயிரக்கணக்கான அநியாயங்களையும், அவமானத்தையும் ஜெயித்திருக்கிறேன். இதனால் சகித்துக் கொள்ளும் பழக்கமும் ஏற்பட்டிருக்கிறது. எனக்கு நல்ல வீடு கிடைக்கவில்லை. நான் சாலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு நல்ல உணவு கிடைக்கவில்லை. பிச்சை எடுத்து எது கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டிருந்தேன். நல்ல தண்ணீர் குடிப்பதற்குக் கிடைக்கவில்லை. கிராமத்தின் கோவில்களுக்கு எப்போதும் என்னால் போக முடியாது. வாழ்க்கை பயங்கரமானதாக ஒன்றாக இருந்தது. இந்தப் பயத்தில் நல்லது எது, கெட்டது எது என்பதை யோசிக்கவும் முடியாமலிருந்தது.

மராட்டியப் பல்கலைக்கழகத்தின் பெயர் பற்றிய விவாதம் மற்றும் தலித் எழுத்தாளர் என்கிற உணர்வு உங்கள் மீது என்னவிதமான தாக்கத்தை உண்டாக்கின?

மராட்டியப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் பாபா சாகாப் அம்பேத்கர் பெயர் வைப்பதற்காக மராட்டிய தலித்துகள் 15 வருடங்களாகப் போராடினார்கள். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தினை எழுதிய மாமனிதரின் பெயரை ஒரு பல்கலைக்கழகத்திற்கு வைப்பதற்கு 15 வருடங்கள் நாங்கள் போராட வேண்டியிருந்தது. இந்தப் போராட்டத்தின் காரணமாக நான் தலித் எழுத்தாளராக ஆனேன். இந்தப் போராட்டம் நடக்கும் போது, அநேகமாக நான் தலித் எழுத்தாளராகி இருக்கவில்லை. டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் புகைப்படத்தை பார்லிமென்ட்டில் வைப்பதற்கு, பாபா சாகேப்பிற்கு பாரத ரத்னா விருது கிடைக்க வேண்டும் என்பதற்குத் தலித்துகளுக்குப் போராட நேரிட்டது.

போராடாமல் தலித்துகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இந்தப் போராட்டம் எனக்கு எழுதுவதற்கான துணிவைக் கொடுத்தது. தலித் இலக்கியம் எழுதுவதென்பது எளிதான காரியமில்லை. தலித் எழுத்தாளர் அநியாயத்திற்கு எதிராக எழுதுகிறார். இதற்கு முன்பாக தலித் எதிர்க் கலகம் செய்யவில்லை. அநியாயத்தை நாங்கள் எங்களது தலைவிதி என்று புரிந்திருந்தோம். நாங்கள் தலித்தாக இருக்கிறோம். ஆகையால் எங்கள் மீது அநியாயம் செய்யப்படுகிறது என்பது எங்களுக்கு விருப்பமானதாக இருந்தது. எல்லா ஜாதிக்காரர்களுக்கும் அநியாயம் செய்வதற்கு அதிகாரம் இருக்கிறது, இது எனது மனநிலையாக இருந்தது. தலித் பாந்தர் என்ற இளைஞர்களின் கூட்டமைப்பு மராட்டியத்தில் பெயரிடுதல் போராட்டத்தை நடத்தியது. நான் தலித் பாந்தரோடு இணைந்திருந்தேன். பாபா சாகேப் அம்பேத்கரின் கருத்துகளின் காரணமாக எங்களுக்கு அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராட பலம் கிடைத்தது. பாபா சாகேப்தான் எங்களின் தூண்டுதலாக இருக்கிறார். பாபா சாகேப் இல்லையென்றால் நாங்கள் இல்லை. நாடு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறது; ஆனால் பாபா சாகேப் அம்பேத்கரை ஏற்றுக் கொள்ளவில்லை. இது எனது அனுபவமாக இருக்கிறது.

நாட்டில் அநேகப் பல்கலைக்கழகங்களுக்கு மஹான்களின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால் பாபா சாகேப்பினுடைய பெயரில் ஒரு பல்கலைக்கழகமும் இல்லை. இதன் காரணமாக தலித் பாந்தர் மராட்டியப் பல்கலைக் கழகத்திற்கு பாபா சாகேப் அம்பேத்கரின் பெயர் சூட்டுவதற்கான வேண்டுதலை எழுப்பியது. முற்போக்கான சமூகம் இதற்கு ஆதரவளித்தது. இளைஞர் புரட்சிக் கட்சியும் அகில இந்திய மாணவர் பேரவையும் இந்த வேண்டுதலுக்கு ஆதரவளித்தன. மகாராஷ்டிரா அரசு “டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தினை” அறிவித்தது. மறுநாள் இந்த அறிவிப்புக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. தலித்துகளின் வீடுகள் எரிக்கப்பட்டன. பல தலித்துகளின் மீது கொடுமைகள் நடந்தன. யாரோ ஒருவரின் கண்கள் பிடுங்கப்பட்டன, யாரோ ஒரு பெண் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டாள். யாரோ ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டது. எல்லா ஜாதிகளும் பெயர் மாற்றப்பட்டதை எதிர்த்தன. மேலும் மகாராஷ்டிரா தனது அறிவிப்பை வாபஸ் பெற்றது. இதற்கு விரோதமாகத் தலித்துகள் 15 வருடங்களாகப் போராடினார்கள். தலித்துகளின் போராட்டத்தின் காரணமாக மகாராஷ்டிரா அரசுக்கு மராட்டியப் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதற்கான முடிவை எடுக்க நேர்ந்தது.

இன்று நம்முடைய நாட்டில் பாபா சாகேப் அம்பேத்கரின் பெயரில் எல்லாவற்றையும் விட அதிகமாகப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது எமது போராட்டத்தின் விளைவாக இருக்கிறது. பாபா சாகேப் அம்பேத்கரின் பெயருக்காகச் சண்டையிடுவது என்பது எம்மைத்தான் எப்போதும் தூண்டுகிறது. நான் சமூகத்தை மாற்றுவதற்காக எழுதுகிறேன். சமச்சீரற்ற தன்மை மற்றும் அநியாயத்திற்கு எதிராக எழுதுகிறேன். நான் எமது விடுதலைக்காக எழுதுகிறேன். என்னுடைய எழுத்து ஒரு போராட்டம்.

தேசிய மற்றும் உலக இலக்கியங்களைப் படித்துக்கொண்டிருந்த உங்களுக்கு, சொந்த வாழ்வை எழுத வேண்டும் என்பதை எப்போது உணர்ந்தீர்கள்?

நீங்கள் சரியாகக் கேட்டிருக்கிறீர்கள். நான் தேசிய மற்றும் வெளிநாட்டின் இலக்கியங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். ஆங்கில இலக்கியம் படிப்பதற்காக நான் ஆங்கிலப் பாடத்தை எடுத்தேன். நான் படிக்கும் காலத்தில், இலட்சியவாதமும் அழகியல்வாதமும் மேலோங்கியிருந்தன. நான் நன்றாகப் படித்திருக்கிறேன். இதில் எங்கேயும் என்னுடைய வேதனை இல்லாமல் இருந்தது. என்னுடைய சமூகத்தின் துக்கம், வலி இல்லாமல் இருந்தது. இந்த இலக்கியத்தில் எங்களுடைய கேள்விகள் இல்லாமல் இருந்தது. போலி இலக்கியங்களைப் படித்துத்தான் நாங்கள் பட்டங்களைப் பெற்றிருக்கிறோம்.

எனக்கு பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் கற்பிக்கவில்லை. போராட்டம் எனக்குக் கற்பித்திருக்கிறது. போராட்டம் எனது பாடசாலையாக இருக்கிறது. இந்தப் போராட்டத்தின் காரணமாக எனக்குள் எழுதவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. இது என்னுடைய பொறுப்பாக இருக்கிறது. இதை மறுப்பதற்கில்லை. நான் எனது வலியைப் பற்றி எழுதுவதைத் தவிர காதல் கவிதை எழுதுவது என்பது குற்றமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு நாங்கள் கல்வியின் அதிகாரம் பெற்றோம். எழுதுவது மற்றும் பேசுவதின் அதிகாரம் பெற்றோம். எனவே நாம் நமது கேள்விகளை எழுப்ப வேண்டும். மக்களின் மொழிகளில் நான் எப்போது வரை பேசுவேன்? எனக்கு எனது மொழி இருக்கிறது இதை நான் அறிந்திருந்தேன். தேசிய, உலக இலக்கியங்கள் எனக்கு மனக்களிப்பைத் தந்திருந்தன. நேரத்தைக் கழிக்க உதவி செய்தது. நான் கேளிக்கையாளராக இருக்க விரும்பவில்லை. எனக்குச் சமத்துவம் , சுதந்திரம் மற்றும் நியாயத்திற்காகப் போரிட வேண்டியிருந்தது. என்னுடைய எழுத்து எனது யுத்தமாக இருக்கிறதே ஒழிய வேறெதாகவும் இல்லை.

நான் ஒட்டுமொத்தமாக எல்லா தலித் சுயபுராணங்களைப் படித்திருக்கிறேன். ஆனால் அக்கர்மாசி போல என்னை எதுவும் இவ்வளவு தொந்தரவு செய்ததில்லை. இதன் தொடர்ச்சியாக தலித் விமர்சனத்தில் மராட்டிய தலித் இலக்கியத்தின் மீதும் வெளிச்சம் பட்டிருக்குமே?

மராத்தியில் தயாபவாரின் முதல் தலித் சுயபுராணம் ‘அசூத்’ வெளியானது. இது மிகுந்த சர்சைக்குள்ளானது. தயாபவாருக்குப் பிறகு அநேக எழுத்தாளர்களுக்கு சுயபுராணம் எழுதுவதற்கான தூண்டுதல் ஏற்பட்டது. அநேகர் தமது சுயபுராணங்களை எழுதினர். சுயபுராணம் எழுதுவதற்கு மிகவும் எளிதான வகைமையாகத்தான் இருந்தது. மேலும் யாரும் எழுத முடிவதாகவும் இருக்கிறது. மராட்டிய தலித் சுயபுராணங்கள் பற்றிய சர்ச்சை மிகவும் அதிகமாகத்தான் நடந்தது. என்னுடைய சுயபுராணம் ‘அக்கர்மாசி’யும் மிகுந்த சர்சைக்குள்ளாகி இருக்கிறது. என்னுடைய சுயபுராணமும் என்னுடைய வலியும் மற்ற எல்லாருடையதையும் விட தனித்திருந்தது. நான் தலித்துக்குள்ளும் தலித்தாக இருந்தேன்.

அதிகமான எழுத்தாளர்கள் சுயபுராணத்திற்குப் பிறகு புத்தகங்கள் எதுவும் எழுதவில்லை. ஒரே புத்தகத்திற்குள்ளே முடங்கிப் போனார்கள். நான் எழுத்தாளராக இருந்தேன். ‘அக்கர்மாசி’ க்கு முன்பாக என்னுடைய கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதுவும் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி இருந்தது. மராத்தியில் குறைந்தபட்சமாக ஒரு ஆயிரம் சுயபுராணங்கள் வெளியாகித்தான் இருக்கின்றன. இந்த சுயபுராணங்களின் காரணமாக மராத்தி தலித் இலக்கியத்திற்குப் புகழ் கிடைத்திருந்தது. தலித் சுயபுராணம் தலித் வாழ்க்கையின் ஆவணமாக இருக்கிறது.

தலித் சுயபுராணத்தின் மூலம் அனைத்து சாதியினருக்கும் தலித் சமூகத்தின் வாழ்க்கை, அவர்களின் வலி தெரிய வந்தன. சுயபுராணம் எழுதுவதற்கு நம்பகத்தன்மையும் தைரியமும் அவசியமாகிறது. தலித் சுயபுராணங்கள் வெளியான பிறகு எழுத்தாளர்களுக்கு மரியாதை கிடைத்தது மட்டுமல்லாது அதே அளவுக்கு ஆபத்துக்களையும் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. 

மராத்தியில் தலித் விமர்சனம்தான் மிகுந்த வரவேற்புக்குள்ளாகி இருக்கிறது. மராத்திய தலித் எழுத்தாளர்கள் எல்லா வகைமைகளிலும் படைப்புகளை எழுதியிருக்கிறார்கள். இந்த மாதிரியான படைப்புகள் மற்ற மொழிகளில் காணக் கிடைப்பதில்லை. எழுத்தாளர்களிடம் திறமை இருக்க வேண்டும், இது இல்லாமல் எழுத்தாளராக இருக்க முடியாது. மராத்திய தலித் எழுத்தாளர்கள் திறமையானவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் அனுபவமும் நம்பகத்தன்மையும் இருந்தன. இக்காரணங்களால் மராத்திய தலித் விமர்சனத்தின் தனித்த அடையாளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

‘அக்கர்மாசி’ க்குப் பிறகு தலித் இலக்கியத்தின் விமர்சன நூலான ‘செளந்தர்ய சாஸ்த்ரா’,  சிறுகதைத் தொகுப்பான தலித் பார்ப்பனன், ‘பஹுஜன்’ நாவல், ‘யல்ஹார்’ கவிதைகள் மற்றும் ‘சனாதன்’ நாவல் தங்களுடைய படைப்புகளில் மகத்துவமானவைகளாக இருக்கின்றன. இந்தப் பயணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

நான் குழந்தைப் பருவத்திலிருந்தே எழுத்தாளராக முடிவு செய்திருந்தேன். எப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேனோ அப்போதிலிருந்து நான் எழுத ஆரம்பித்தேன். பள்ளியிலிருந்து கல்லூரிப் படிப்பு வரை நான் எதை எழுதினேனோ அது மையவாத இலக்கியத்தைப் பின்பற்றியதாக இருந்தது. நான் கற்பனையாக எழுதி இருந்தேன். இது எழுதுவதற்கான பயிற்சியாக இருந்தது. வீட்டு வேலையாக இருந்தது. எழுத்தாளர் எப்படி எழுதுகிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காக நான் கல்லூரி வாழ்க்கையில் மராத்திய விமர்சனங்களின் எல்லா நூல்களையும் படித்திருந்தேன். நான் எழுதுவதற்காக எப்போதும் உழைத்திருக்கிறேன். கடினமான உழைப்பு என்னால் செய்யப்பட்டிருக்கிறது.

தலித் இலக்கியத்தின் இந்த ஆரம்பம் முன்னேற்றமானதாக இருந்தது. எதையும் எழுதுகிற ஒரு தலித் எழுத்தாளர் ஒரே புத்தகத்தில் பெரிய எழுத்தாளராக ஆகிப் போகிறார். அவருடைய புத்தகத்தின் மீது வாக்குவாதம் ஏற்படுகிறது. கற்பனையாக எழுதும் எழுத்தாளருக்கு தலா 20 – 20 புத்தகங்கள் எழுதியும் மனதிற்கு மதிக்கத்தகுந்தது கிடைக்கவில்லை மற்றும் தலித் எழுத்தாளருக்கு ஒரே புத்தகத்தில் மதிப்பு கிடைத்திருந்தது. மராத்தியில் தலித் இலக்கியம் மிகுந்த வரவேற்பு பெற்றது. தலித் இலக்கியத்தின் காரணமாக மக்கள் இலக்கியத்திற்குப் பலம் கிடைத்தது. கலைவாத இலக்கியம் பின் தள்ளப்பட்டது.

எனக்கு முன்பாக என்னுடைய சீனியர் தலித் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மிகப் பெரிய பெயர் இருந்தது. எனக்குப் போராட்டம் எவ்வளவு ஈர்த்ததோ அவ்வளவு மிகச் சிறந்த எழுத்தாளர்களும்தான் ஈர்த்தார்கள். எனக்கும் பெரிய எழுத்தாளராக ஆவதற்கான உணர்வு ஏற்பட்டிருந்தது, அதற்கான முயற்சியும் செய்தேன். மராத்தியில் எனது புத்தகங்கள் 44 வெளியாகி உள்ளன. என்னுடைய புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பாகி இருக்கின்றன. ஆக மொத்தம் இப்போது வரை 73 புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன. மராத்தி, இந்தி, ஆங்கிலம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, உருது, வங்காளம் போன்ற மொழிகளில் புத்தகங்கள் மொழிபெயர்ப்பாகி வெளியாகி இருக்கின்றன. எல்லா வகைமைகளிலும் நான் படைப்புகள் எழுதியிருக்கிறேன். நான்தான் இந்திய நாட்டில் சரஸ்வதி சம்மான் பெற்ற முதல் தலித் எழுத்தாளர்.

தலித் இலக்கியத்தின் துயரத்தை, பெண் தலித் கதாபாத்திரங்கள் மூலம் சிறப்பாக விளக்க முடியும். தங்களுடைய படைப்புகளின் மகத்துவமான பெண் பாத்திரங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

நான் ஆண் எழுத்தாளராக இருக்கிறேன் என்ற உணர்வு எப்போதும் எனக்கு இருக்கிறது. நான் பெண் பற்றிய விமர்சனத்தினைப் படித்திருக்கிறேன். இருந்தும் நான் பெண்ணின் மனதைத் திறம்பட வெளிப்படுத்துவதில் தோற்றுக் கொண்டிருக்கிறேன். நான் எதை எழுதியிருக்கிறேனோ அதில் பெண் பாத்திரங்கள் வந்திருக்கின்றன. பெண் அல்லது ஆண் பாத்திரம் இவை கதையைச் சுமக்கும் கூலி போல இருக்கின்றன. ‘சனாதன்’ இந்த நாவலில் மற்றும் ‘கர்வத்தோடு சொல்’ இந்த நாவலில் பெண் பாத்திரங்களின் புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கும் நிகழ்வுகள் எழுதப்பட்டிருக்கின்றன. கதையின் வளர்ச்சியின் தொடர்ச்சியில் பாத்திரங்களின் வளர்ச்சி இருக்க வேண்டும். அப்போது கதை சிறப்பானதாக இருக்கும். நாம் கதையை வாசகர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். கதை எவ்வளவு வலுவாக இருக்கிறதோ, அவ்வளவு கதாபாத்திரங்களைக் கண்டுபிடிப்பது அதன் நல்ல விளைவை ஏற்படுத்தும். கதை, பாத்திரங்கள், நடை இதன் மீது திறமையுள்ள எழுத்தாளரின் ஆதிக்கம் இருக்கிறது. என்னுடைய பெண் அல்லது ஆண் பாத்திரங்களிலிருந்து என்னுடைய கருத்து மகத்துவத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறது என்று நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இலக்கிய உலகில் தங்களுடைய படைப்புகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தங்களுக்கும், பிற தலித் எழுத்தாளர்களுக்கும் கிடைத்த பரிசுகளைப் பற்றி மலினமான மொழியில் எழுந்த விமர்சனங்களுக்கு உங்களின் எதிர்வினை என்ன?

தலித் எழுத்தாளர்கள் புகழப்படுகிறார்கள். ஆனால் விருதுகள் கிடைப்பதில்லை. பத்ம விருதுகள் மிகவும் குறைவாக தலித் எழுத்தாளர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. சாகித்ய அகாடமி விருதும் கிடைக்கவில்லை. ஞானபீட விருது 50 வருடங்களில் எந்தவொரு தலித் எழுத்தாளருக்கும் கிடைத்திருக்கவில்லை. இலக்கியத்திலும் குறுக்குவழிகள் இருக்கின்றன. அரசியல் இருக்கிறது. ஓரளவுக்கு அது வேலை செய்கிறது.

மாநிலப் பரிசு மற்றும் தேசியப் பரிசில் இப்படி எதுவுமில்லை. விருது தேர்வுக்குழு இருக்கிறது. பரிசு கொடுப்பதற்கான விதிகள் இருக்கின்றன. விருது வழங்கும்போது ஒரு எழுத்தாளரைக் கருத்தில் கொள்வதில்லை. சில பெயர்களிலிருந்து ஒரு பெயர் தேர்ந்தெடுக்கப்படுகிறது. எப்போது ஏதாவதொரு தலித் எழுத்தாளருக்கு மரியாதை கிடைக்கிறதோ அப்போது அவருடைய தகுதி சர்ச்சை செய்யப்படுவதில்லை. அவரின் ஜாதி சர்ச்சை செய்யப்படுகிறது. இவர் தலித் ஆகையால் இதைப் பெற்றார். இது ஜாதியவாதியின் மனநிலையாக இருக்கிறது. எழுத்தாளரும் ஜாதியவாதியாகிறார். தலித் எழுத்தாளரைப் புறக்கணிக்கிறார்கள். இந்த அனுபவம் எனக்கு இருக்கிறது. எவர் திறமைசாலி எழுத்தாளராக இருக்கிறரோ அவரை நீண்ட காலம் வரை புறக்கணிக்க முடியாது.

தங்களுடைய படைப்புகளில் நீங்கள் தொடர்ச்சியாக உடைப்புகளைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். எப்போதும் கொஞ்சம் புதிதாக எழுதுவதற்கு முயற்சி செய்கிறீர்கள். இருப்பினும், ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. இவை ஏதாவதொரு வகையில் அழுத்தத்தை உணரச் செய்கின்றனவா?

ஏராளமான குற்றச்சாட்டுகள் தலித் இலக்கியத்தின் மீது இருந்து கொண்டிருக்கின்றன. எல்லா எழுத்தாளர்களுக்கும் எழுதுவதற்கான தமது களத்தைத் தேர்ந்தெடுக்க நேர்கிறது. குழந்தை இலக்கிய எழுத்தாளர்கள் குழந்தையின் உலகத்தினைப் பற்றி எழுதுவார்கள். விஞ்ஞான எழுத்தாளர்கள் அல்லது காதல் கவிதைகள் எழுதுபவர்கள் தமது களத்தைக் குறித்து உறுதி செய்து கொண்டு வாழ்கிறார்கள். காதல் பற்றி எவ்வளவு காலம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. ராமாயணக் காலத்திலிருந்து இன்று வரை பிரபு ராமச்சந்திரனைப் பற்றி எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் எதுவும் ஒரே மாதிரியாகக் காணப்படுவதில்லை.

தலித் விமர்சனம், பெண் விமர்சனம் மற்றும் ஆதிவாசிகள் விமர்சனத்தின் எழுத்தாளர்கள் அர்ப்பணிப்போடு எழுதுகிறார்கள். எழுத்தாளருக்குப் பற்றில்லாமை இருக்க வேண்டும் என்பது நம்பப்படுகிறது. இது கலைவாதிகள் யோசிக்கிற விஷயம். நான் ஒரு செயலாற்றும் எழுத்தாளராக இருக்கிறேன். நான் தலித் பற்றி எழுத முடிவு செய்து இருக்கிறேன். என்ன எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் மற்றும் ஏன் எழுத வேண்டும் என்பதை ஒவ்வொரு எழுத்தாளரும் முடிவு செய்து கொள்கிறார்கள். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு வயது இருக்கிறது. தமது வரையறுக்கப்பட்ட நேரத்தில் என்ன எழுதுவது என்ன படிப்பது என்பதைக் கம்பீரமாக முடிவு செய்து கொள்கிறார்கள். நான் என்னுடைய களத்தை முடிவு செய்திருக்கிறேன். இதில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.

நான் இலக்கியத்தில் புதிய அனுபவங்களைக் கொண்டு வருகிறேன். புதிய நாயகனைக் கொண்டு வருகிறேன். புதிய மொழியையும் புதிய கருத்துகளையும் கொண்டு வருகிறேன். நான் அர்ப்பணிப்போடு எழுதுகிறேன். நான் எழுதுவதற்கான நோக்கம் தெளிவாக உள்ளது. என்னுடைய ஒவ்வொரு புத்தகத்தின் விஷயங்கள் தனித்துவமாக இருக்கின்றன. எழுத்தாளரைப் படிக்க வேண்டும், நிராகரிப்பது தவறு. தலித் இலக்கியத்தைப் படிப்பதற்கு ஜாதி அமைப்பின் ஆழ்ந்த ஞானம் இருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. ஜாதி அமைப்பைப் புரிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது. தலித் இலக்கியத்தை விமர்சிக்க முடியாது. விவாதம் செய்வது தனிப்பட்ட விஷயமாக இருக்கிறது. தலித் இலக்கியத்தைத் தீவிரமாகப் படித்து எவ்வளவு விமர்சனங்கள் எழுதப்பட்டுள்ளன? தலித் இலக்கியத்தின் விமர்சனம் நிகழவில்லை. விளக்க உரைகள், குறிப்புரைகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விளக்க உரைகள், குறிப்புரைகள் தெரிவிப்பவர்கள் என்ன காரணத்திற்கு இருக்கிறார்கள்? இதுவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

மராத்திய தலித் இலக்கியத்தினை ஒப்பிடுவதில் இந்தி இலக்கியத்தில் ஆக்கிரமிப்பு போன்ற கோபப் பார்வை இல்லை. மராத்தி தவிர மற்றும் எந்த மொழிகளின் தலித் இலக்கியத்தில் தங்களுக்கு ஈடுபாடு இருக்கிறது?

இந்தி தலித் இலக்கியத்தினை ஒப்பிடுகையில் மராத்தி தலித் இலக்கியத்தின் கோபப் பார்வை அதிகமாக ஆக்ரோஷமான ஈடுபாட்டுடன் அதிகாரம் செய்கிறது. மகாத்மா பூலே மற்றும் பாபா சாகேப் அம்பேத்கரின் கருத்தோட்டங்கள் இதற்குக் காரணம். மஹாராஷ்டிரா தலித் பாந்தரின் போராட்டச் செயல்பாடு இருந்தது. அதனுடைய தாக்கம் தலித் இலக்கியத்தில் இருந்து கொண்டிருக்கிறது. மராத்தி தலித் இலக்கிய எழுத்தாளர்கள் போராட்டத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தி தலித் எழுத்தாளர்கள் யாரும் செயல்பாட்டாளர்களாக இல்லை. அவர்கள் அலுவலகப் பணியாளர்கள். அரசாங்க ஊழியம் செய்பவர்களாக இருக்கிறார்கள். மராத்திய தலித் எழுத்தாளர்களும் ஊழியர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் போராட்டத்தோடு இணைக்கப்பட்டவர்கள். இதன் விளைவு அவர்களது படைப்புகளில் ஏற்பட்டிருக்கிறது.

எல்லா மொழிகளிலும் தலித் இலக்கியம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தி மொழிக் களம் பெரியதாக இருப்பதின் காரணத்தால் இங்கேயுள்ள தலித் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா இங்கேயுள்ள தலித்துகள் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்துவர்களாக இருந்த போதிலும் இவர்களுடைய ஜாதியின் காரணமாகத் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்கள் சமத்துவத்திற்காகப் போராடுகிறார்கள். கேரளம் மற்றும் மேற்கு வங்காளத்தில் இடதுசாரி முன்னணி செல்வாக்கு இருந்தது. இங்கே ஜாதியின் கருத்துக்கள் இல்லாமல் இருந்தது. தலித் போராட்டத்தின் காரணமாக இங்கேயுள்ள தலித்துகளின் அமைப்பு இருந்துகொண்டிருக்கிறது. மேற்கு வங்காளத்தின் தலித் எழுத்தாளர்கள் தமது ஜாதி மற்றும் இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் காரணமாக வேதனைகளைச் சகித்துக்கொண்டு அதை வெளிப்படைத்தன்மையோடு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

மகாத்மா காந்திஜியின் காரியங்கள், கருத்துக்களின் தாக்கம் குஜராத் தலித்துகள்மீது இருந்து கொண்டிருக்கின்றன. இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டம், தலித் பாந்தரின் போராட்டத்தின் காரணமாக குஜராத்திலும் தலித் இலக்கியம் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது அம்பேத்கரின் கருத்துக்களின் தாக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. கர்நாடக சாது பருனேஷ்வரின் காரியங்கள், கருத்துக்களின் தாக்கம் இருந்து கொண்டிருக்கிறது. கன்னடத்திலும் தலித் இலக்கியம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. பஞ்சாப்பில் தலித்துகளின் மக்கள்தொகை அதிகமாக இருக்கிறது. இருந்தும் இங்கே தலித் இலக்கியத்தின் தாக்கம் குறைவாகவே காணக் கிடைக்கிறது. ஆதிவாசிகள் அதிகமுள்ள மாநிலங்களில் தலித் இலக்கியத்தின் வளர்ச்சி நடக்கவில்லை. ராஜஸ்தான் தலித் இலக்கியத்தின் ஆரம்பம் முடிந்து போயிருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் தலித் இலக்கியம் காணப்படவில்லை. மராத்தி, இந்தி, குஜராத்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் பஞ்சாப்பில் தலித் இலக்கியத்தின் நீரோட்டம் பலமுள்ளதாக இருக்கிறது.

அம்பேத்கர் குறித்து தாங்கள் நிறைய காரியங்கள் செய்திருக்கிறீர்கள். அவரை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டிருக்கிறீர்கள்?

20 ஆம் நூற்றாண்டின் இரண்டு மகா நாயகர்கள் இருக்கிறார்கள். ஒருவர் மகாத்மா காந்தி மற்றொருவர் பாபா சாகேப் அம்பேத்கர். மகாத்மா காந்திஜி ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினார், தேசத்திற்கு விடுதலை கிடைத்தது. தேசம் இன்றும் சமூக அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடையவில்லை. பாபா சாகேப் சமூகச் சமத்துவமின்மைக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருந்தார். அவரின் போர் இன்றும் முடிவடையாமல் இருக்கிறது. பாபா சாகேப்பை மதிப்பீடு செய்யும் நேரம் அவருடைய கருத்துக்களை யாரும் கருத்தில் கொள்வதில்லை. அவரின் ஜாதி சுட்டிக் காட்டப்படுகிறது.

தேசத்தின் மறுசீரமைப்பு சமத்துவம், நியாயம், சுதந்திரம் மற்றும் சகோதர மனப்பான்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். தேசம் சந்திரனுக்குச் சென்று விட்டது. ஆனால் இன்றும் தலித் கிராமங்களின் கோவில்களுக்குள் நுழைய முடியாது. இந்த தேசத்தை அழகாகவும் மிகச் சிறந்ததாகவும் ஆக்குவதற்கான எண்ணம் பாபா சாகேப்பினுடையதாக இருக்கிறது. தேசத்தின் ஜனநாயகம் பலமுள்ளதாகவும் மிகச்சிறந்தாகவும் இருக்க வேண்டுமென்பது பாபா சாகேப்பின் கனவாக இருந்தது.

தலித்துகளின் அடிமைத்தனம் என்பது தலித்துகளின் வலியாக இல்லை, இது தேசத்தின் வலியாக இருக்கிறது. தலித்துகள் மட்டும்தான் தலித்துகளின் வலியை ஏந்திக் கொண்டு போராடுகிறார்கள். இது புதிய ஜாதியவாதமாக இருக்கிறது. பாபா சாகேப் அம்பேத்கரின் கருத்துக்களை மறுத்துவிட்டு நாம் தேசியவாதத்தைக் கருத்தில் கொள்ள முடியாது, எனது நம்பிக்கை இப்படியாக இருக்கிறது.

தற்சமயம் எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் அம்பேத்கர் குழுக்கள் தெளிவாகக் காணப்படுகின்றன. இந்த விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும். துரதிருஷ்டவசமாக இந்தக் குழுக்களும் பார்ப்பனர்களைப் போல வெறுப்பைத்தான் தமது அதிகாரமாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் எல்லோரும் வெறுப்பைத்தான் உங்களது அதிகாரமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் படிக்கிறீர்கள், கேட்கிறீர்கள், இந்த விஷயத்தில் அவர்களிடம் தாங்கள் என்ன சொல்ல இருக்கிறீர்கள்?

இது ஆரம்பம். ஆரம்பம் ஆக்ரோசமாக இருக்கிறது. எப்போது சங்கமநிலை வருமோ இதில் மாற்றம் ஏற்படும். அப்போது ஜாதியவாதத்தை ஜாதியவாதத்தால் நிவர்த்தி செய்வதின் ஒரு நிலை விசித்திரமான நிலையாக உருவாக்கப்பட்டிருக்கிறது, இப்படி மத்தியதரத்தின் எண்ணமாக இருக்கிறது, இப்படி இல்லை. எல்லா தலித்துகளுடைய அமைப்பை ஏற்படுத்துவதற்காக தலித் விழிப்படைவது அவசியமாக இருக்கிறது.

தலித் பார்ப்பனர்களின் விரோதி இல்லை. அவர்கள் பார்ப்பனீய மனநிலைக்கு விரோதியாக இருக்கிறார்கள். நடக்கிறது, பல இடங்களில் சிலர் வன்ம வேடத்தைப் போட்டிருக்கிறார்கள். இது தவறு. இதை நான் எதிர்க்கிறேன். தலித்துகளிலும் தவறு நடக்கிறது. போராட்டத்தில் எல்லாப் பக்கங்களிலும் வேலை செய்யப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் புதிய தலைமுறை செழித்துக் கொண்டிருக்கிறது. அதைத் தனி மாதிரியாக யோசிக்க முடியும். புதிய தரநிலைகளையும் புதிய உத்திகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது நிச்சயமாக முயற்சிக்கப்பட வேண்டும். எல்லோருடைய சமத்துவம் மற்றும் நியாயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

‘ஒவ்வொரு நகரமும் ஜாதியவாதம். ஒவ்வொரு கிராமமும் ஜாதியவாதம். எங்கேயும் மனிதம் இல்லை என ஜாதி இங்கேயுள்ள மக்களைத் துண்டாடியிருக்கிறது’ என்று தங்களுடைய கவிதைகளில்தான் இருக்கிறது. ஏதாவது கொஞ்சம் மாற்றங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?

தேசம் மாறிக் கொண்டிருக்கிறது. உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. சமூகம் மாறிக் கொண்டிருக்கிறது. நான் மாறுதலை நிச்சயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த மாறுதல் ஒப்புக்கொள்ள வேண்டியதாகத்தான் இருக்கிறது. ஆனால் முழு அமைப்பும் மாறவில்லை. சமூக மாற்றம் மெதுமெதுவாக நடக்கின்றது. சமூகத் தாராளவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுவும் உண்மையாக இருக்கிறது, சமூகத்தில் பதற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வளர்ச்சியில் சமத்துவமின்மை அதிகரிக்கிறது. சமூகம் மாறுகிறது, மனநிலை மாறவில்லை. ஜாதியவாத மனநிலை மாற வேண்டும். தலித்துகள் மாறிக் கொண்டிருக்கிறார்கள் மற்றும் எல்லா ஜாதிச் சமூகமும் மாறிக்கொண்டிருக்கிறது. போராட்டத்தின் காரணமாக விழிப்புணர்வு வந்திருக்கிறது. ஞானம் மற்றும் விஞ்ஞானத்தின் காரணமாக, கல்வி மற்றும் ஜனநாயகத்தின் காரணமாக, சட்டம் மற்றும் முற்போக்குச் சமூகத்தின் காரணமாக சமூகம் மாறிக்கொண்டிருக்கிறது.

தலித்துகளின் மனிதாபிமானமற்ற வாழ்க்கையும் அவர்களின் துயரமும் ஓரளவுக்கு மக்களைச் சென்றடைந்துள்ளன. இப்போது இதை மேற்கொண்டு அதிகரிக்கச் செய்து சமூகத்திற்கு உண்மை வழியைக் காட்டுங்கள் என்பது ஒரு எழுத்தாளரின் கடமையாக இருக்கிறது. இந்த விஷயத்தில் தலித் எழுத்தாளர்களிடம் சொல்வதற்குத் தங்களுக்கு என்ன இருக்கிறது?

தலித் இலக்கியத்தின் வளர்ச்சியில் ஒரு முன்னேற்றக் காலம் இருந்தது. தலித் இலக்கியம் நீர்ப் பெருக்கு போலப் பரவிக் கொண்டிருந்தது. எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். தலித் பாந்தரின் போராட்டம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. இருந்தும் தலித்துகளின் மீது அநியாயம் நடந்துகொண்டிருந்தது. எங்கேயாவது தலித் பெண் மீது பலாத்காரம் நடந்துகொண்டிருந்தது. எங்கேயாவது தலித் சமூகத்தின் மீது புறக்கணிப்பு நடந்து கொண்டிருந்தது. எங்கேயாவது தலித் இளைஞனின் கொலை நடந்துகொண்டிருந்தது. இப்படிப்பட்ட நிலையில் எப்போது தலித் இலக்கிய சம்மேளனத்தின் ஏற்பாடுகள் நடந்திருந்ததோ தலித் எழுத்தாளர்களின் விழா நடந்திருந்தோ அப்போது இந்த வார்த்தைகள் மட்டும் நிச்சயம் எழுந்திருந்தன “இப்போது பேனாவை விட்டுவிடு, துப்பாக்கிகளை உயர்த்து” எழுதுவதைவிட எதுவும் நடக்கவில்லை. இப்படியும் எதிர்வினை வந்திருந்தன.” தலித்துகள் தம்மைக் காத்துக்கொள்வதற்காக அரசாங்கம் துப்பாக்கிகள் கொடுக்க வேண்டும்.”

இது வலியாக இருந்தது. இப்போது புத்தகங்களால் எதுவும் நடக்காது. நாடகத்தில் நாயகனுக்கு ஒரு வேடம் இருக்கிறது, நாயகிக்கு ஒரு வேடம் இருக்கிறது மற்றும் வில்லனுக்குத் தனியான ஒரு வேடம் இருக்கிறது. நாடக இயக்குநருக்கு ஒரு தனியான வேடம் இருக்கிறது. எல்லோரும் தமது வேடத்தைச் சரியாகச் செய்ய வேண்டிருக்கிறது. போராட்டத்தில் செயல்பாட்டாளரின் வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறது மற்றும் எழுத்தாளர்களுக்குப் போராட்டத்திற்காகக் கருத்துத் தெரிவிக்க வேண்டியதாயிருக்கிறது. கருத்துகளால் புரட்சி ஏற்படுகிறது. புத்தகங்கள் உலகை மாற்ற முடிகிறது. எழுத்தாளருக்கு எழுதுவதின் வேடம்தான் செய்ய வேண்டும். நான் பல முறை சொல்லியிருக்கிறேன்,” என்னுடைய வார்த்தைகள் வார்த்தைகளில்லை, அவை ஆயுதங்களாக இருக்கின்றன.”

எழுத்தாளர் அனுபவம் பெறுவதற்காகச் சமூகத்தில் மற்றும் போராட்டத்தில் இணைந்திட வேண்டும். இது மட்டுமல்ல எல்லா ஜாதியையும் புரிந்து கொள்ள வேண்டும். எழுத்தாளருக்கு எப்போதும் விழிப்புடன் வாழ்வது அவசியமாக இருக்கிறது. பழையவர்கள் என்ன எழுதிக் கொண்டிருந்தார்கள். இன்று என்ன இலக்கியம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த எழுத்தாளரைப் பற்றி விவாதிக்கப்படுகிறது. எந்த மாதிரியான இலக்கியத்தை வாசகர்கள் விரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். தமது படைப்புகளில் ஒரு போதும் தலையிடாதீர்கள். படைப்புகளை நம்பகத்தன்மையோடும் பயமற்றும் படைக்க வேண்டும். ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாது எழுத வேண்டும். விலை கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். சமத்துவம் மற்றும் நியாயத்திற்காகப் பேனாவைத் தூக்க வேண்டும். இப்படிப்பட்ட உணர்வு எனக்கு இருக்கிறது.

தங்களுடைய படைப்புகள் ஆரம்பத்திலிருந்தே புகழப்பட்டிருந்தாலும் விமர்சனத்தின் நோக்கத்தில் மிகுந்த நச்சுத்தன்மையுள்ள கேள்விகளும் கேட்கப்பட்டன. இப்போதோ தண்ணீர் பாய்ந்து முடிந்தது, கடந்த வருடம் சரஸ்வதி சம்மான் மற்றும் அதற்குப் பிறகு தொடர்ச்சியாகத் தங்களை ஏற்றுக் கொண்டும் மரியாதை கிடைத்துக் கொண்டும் இருக்கிறது, அந்த அனுபவங்களைப் பகிருங்கள்?

நான் 40 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய முதலாவது கவிதைத் தொகுப்பு ‘உத்பாத்’ 1924ம் வருடம் வெளியாகி இருந்தது. ‘துமாரி ஜாதி க்யா ஹை?’ கவிதைத் தொகுப்பு 2024 ம் வருடம் வெளியாகி உள்ளது. இது ஒரு நீண்ட பயணம். இன்று தேசம் முழுவதும் பல மூலைகளுக்கு நான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். பல்வேறு மொழிகளிலிருந்து எனக்கு வரவேற்பு இருக்கிறது. இதற்கு முன்பாக நான் தலித்துகளுக்கு நடுவில் பேசியிருந்தேன். இன்று நான் எல்லாச் சமூகங்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும் சென்று கொண்டிருக்கிறேன்.

எமது கேள்விகளை இந்துக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். எல்லா இந்து ஜாதியவாதிகளும் வில்லன்களும் இல்லாமல் இல்லை. நாம் முற்போக்கான இந்துக்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். நமது நண்பர்களை அதிகரிக்க வேண்டும். எல்லா இந்துக்களும் சமூகத்தை மரக்கூண்டுக்குள் நிறுத்த முடியாது. யார் நம்மோடு நிற்கிறார்களோ அவர்களை மறுக்க முடியாது. எப்போதும் மறுப்பும் வெறுப்பும் வேடம் கொண்டிருந்தால் தனித்து இருக்க நேர்ந்து விடும். எந்த ஒரு ஜாதியும் இந்த நாட்டை ஆண்டுவிட முடியாது. நாம் இணைந்து சமத்துவமின்மைக்கு எதிராகப் போராட வேண்டும். நமது தேசத்தை அழகாக்குவதற்காக மற்றும் மனிதனை மகாத்மா ஆக்குவதற்காக நாம் எல்லோரும் இணைந்து வாழ வேண்டும் மற்றும் செயல்பட வேண்டும்.


Art : negizhan

வசந்ததீபன் .
வசந்ததீபன் .
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள், கதைகள் எழுதி வருகிறார். 2021ல் திருப்பூர் பொன்னுலகம் புத்தக நிலையம் மூலம் “கண்ணீர் படராத ஓர் அங்குல மண்” எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. எதிர் வெளியீடு மூலமாக சென்னை 2025 புத்தகக் கண்காட்சியில் ” சம்பூகனின் வெட்டப்பட்ட தலை ” எனும் மொழிபெயர்ப்புக் கவிதை நூல் (இந்தியக் கவிதைகள் ) வெளியானது. இவர் அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025
  • வண்ணார் : வரலாறும் வலிகளும்

    வண்ணார் : வரலாறும் வலிகளும்

    December 2, 2025
  • பொலி எருமை

    பொலி எருமை

    December 2, 2025

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (67)
  • கட்டுரை (1)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)

Archives

  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (67)
  • கட்டுரை (1)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top