Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

அதிகாரத்தின் ‘கருணை’

ஸ்டாலின் ராஜாங்கம்
ஸ்டாலின் ராஜாங்கம்
August 15, 2025
அதிகாரத்தின் ‘கருணை’

10 நாட்களுக்கும் மேலாக நடந்த தூய்மைப் பணியாளர் போராட்டத்தை வழமையான அரசுகள் எவ்வாறு ‘முடிவு’க்குக் கொண்டுவருமோ அத்தகைய தந்திரத்தோடு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது திமுக அரசு. போராட்டத்தால் வந்த அவப்பெயரைச் சரி செய்வதற்காக இன்னுமின்னும் தந்திரங்களோடு பிரதான கோரிக்கைகளை விடுத்து, திராவிடக் கட்சிகளுக்கேயுரிய சலுகை அரசியலை முன்னெடுத்து அதனை விளம்பரப்படுத்தி வருகிறது. (இந்த அளவிலான சலுகைகள் கூட அப்பணியாளர்கள் இத்தனை நாள் போராடியதால் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது)

அப்பணியாளர்களுடன் முன்பு முதல்வர் டீ குடித்தார் என்று மேயர் சொன்னதில் தொடங்கி இன்றைக்குச் சோறு போடுவது, நன்றி சொல்ல வைப்பது, ஊர்வலம் போல நடத்தி வருவது போன்ற படங்கள் வெளியிடப்படுகின்றன.

அம்மக்கள் காட்சிப்படுத்தப்படும் விதம், குறிப்பாக அவர்கள் பெறுபவர்களாக – நிற்பவர்களாக – வியப்பவர்களாக – கைக்கூப்புபவர்களாகக் காட்டப்படும் படங்கள், அவற்றின் மூலம் அரசுத் தரப்புச் சொல்லவரும் செய்தி ஆகியவை அருவருப்பாக இருக்கின்றன. இவற்றிலிருக்கும் பிழை இவர்களுக்குப் புரியவில்லை. இன்னும் எத்தனை காலத்திற்கு இதையே செய்வார்கள் என்றும் தெரியவில்லை.

இப்போக்கு இவர்கள் செய்வதாகக் காட்டிக்கொள்ளும் நன்மைகளை விட அவர்களை இழிவுபடுத்துகிறது. அம்மக்களைப் பெறுபவர்களாகப் பிம்பப்படுத்திக் கொண்டேயிருப்பதில் மேல் -கீழ் என்னும் சட்டகமே இயங்குகிறது. இதற்குள்ளிருப்பது நுட்பமான அதிகாரம். இது கருணை அல்ல; மாறாகத் தங்களை மேலே இருந்திக்கொள்ளும் அதிகாரத்தின் கருணை. இம்மக்களைப் பெறுபவர்களாகக் காட்சிப்படுத்துவது மூலம் தங்களை ரட்சகர்களாகத் தக்கவைத்துக் கொள்ளும் தந்திரம்.

பொதுவாக திராவிட இயக்கத்தின் சாதி மறுப்பு என்பது ‘புறமெய்’ அளவிலானது. சாதியானது சமூக அடுக்கில் உள்ளார்ந்து இயங்குவது என்ற புரிதலை அந்த இயக்கம் பெறவில்லை. சாதி வெளிப்படையானது மட்டுமல்ல பண்பாட்டு வடிவங்கள் சார்ந்தும் நுட்பமாக இயங்கக் கூடியது. அந்தப் புரிதல் இல்லாததால்தான் அது சாதி மறுப்பை பிராமணர் எதிர்ப்பைத் தாண்டிப் பார்க்கவில்லை.

இந்த வகையில் சாதி தொடர்பான அதன் செயற்பாடுகளையும் சொல்லாடல்களையும் கட்டுடைத்தால் அதன் வரையறைகளை மட்டுமல்ல போதாமைகளையும் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு பார்க்கும் போதுதான் அது எதை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்கிறதோ, அதையே வேறு பெயரில் காப்பாற்றுவதாக இருப்பதையும் பார்க்கிறோம். அவர்கள் விளிம்பு நிலை மக்கள் பிரச்சினைகளை இன்றுவரை அணுகி வரும் போக்கே இதற்கான உதாரணம்.

சிக்கல்களை விரிவாக அணுகாமல் அரசியல் சரித்தன்மை என்கிற அளவில் சரி செய்து கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள். பாகுபாட்டைச் சுட்டும் அடையாளங்களின் பெயர்களை திராவிட அரசாங்கங்கள் மாற்றி வந்திருக்கிறார்கள். இது பாராட்டிற்குரியது. ஆனால் பாகுபாடு பெயரில் மட்டும் இருப்பதில்லை. உள்ளார்ந்து மாண்பு கெட்டிருப்பதன் விளைவுதான் அது என்பதை அவர்கள் யோசிப்பதில்லை. இது பிரச்சினையை மேலோட்டமாக அணுகுவதாக நிறுத்திவிடுவதோடு, அதையே தொடர்ந்து சாதனையாகச் சொல்லிக் கொண்டிருப்பதற்குத் தவிர வேறெதற்கும் பயன்படுவதில்லை. எனவே, மாற்றத்தை விரும்புகிறவர்கள் பெயர் மாற்றங்களை மட்டுமே பாராட்டிக் கொண்டிருக்க முடியாது.

அதிகாரத்தின் கருணையிலிருக்கும் இத்தகைய சிக்கல்கள் குறித்த புரிதலைப் பல்வேறு விமர்சனக் கோட்பாடுகளின் துணையோடு 1990 களின் தலித் வாசிப்புதான் முன்வைத்தது. ‘மேலிருந்து வழங்கப்படும் மீட்சி’யின் அரசியலை ராஜ்கெளதமனும் பிறரும் விரிவாக விவாதித்திருக்கின்றனர். தலித் விமர்சனங்களிலிருந்து மட்டுமல்ல, தலித் வரலாற்றியல் ஏற்படுத்தியிருக்கும் விழிப்புணர்விலிருந்தும் இவர்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை.

பல்வேறு கேள்விகளோடு 1990 களில் வீறுகொண்டெழுந்த தலித் கட்சிகளும், ‘கருணையின் அதிகாரம்’ பற்றிக் கட்டுடைப்புச் செய்து கவனம் ஈர்த்தவர்களும் கூட விரிந்த அளவில் அணுக வேண்டிய விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகளை உடனடித் தேர்தல் கணக்கு என்கிற எல்லைக்குள் இருந்துவிட்டு விமர்சன அரசியலை முற்றிலுமாகக் கைவிட்டிருக்கிறார்கள்.

நிலவும் கேடான சூழலின் அங்கமாகவும் மாறி வருகிறார்கள் என்பதுதான் இதிலிருக்கும் பெரிய துயரம்.


ஸ்டாலின் ராஜாங்கம்
ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம் திருவண்ணாமலை மாவட்டம் முன்னூர் மங்கலம் என்னும் கிராமத்தில் பிறந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தலித் வரலாறு, தலித் இலக்கியம், அயோத்திதாசரியம் ஆகிய துறைகளில் ஆய்வுகளைச் செய்து வருபவர். அயோத்திதாசர் வாழும் பௌத்தம், ஆணவக் கொலைகளின் காலம், எண்பதுகளின் தமிழ் சினிமா, தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம், சாதியம் கைகூடாத நீதி உட்பட பல்வேறு நூல்களை எழுதி உள்ளார்.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top