பசியில் அழுவும்
பச்சப்பிள்ளயப் போல
புரண்டுகொண்டிருந்த தாத்தாவைப்
பசியமத்த எங்க வயக்காட்டு மண்ணை
ஒரு கைக்குத்து குடுத்து வாயில் போடச் சொன்னார்கள்
எதையும் தின்று செரிக்காத நிலம்
மெல்ல மெல்ல விழுங்கியது..
இன்னொருக்கா
மண்ணெடுக்கப் போவயில்
துணைக்கு தாத்தாவின்
கால் தடத்தைப் பிடித்து நடந்தேன்…
பசியாறக் கிடந்தது
கையாற கைக்குத்தளவு மண்ணிடுவதற்கு
கொஞ்சூண்டு கூட அந்த
நிலத்திற்கு எங்கள் நினைவேயில்லை!
Art : stockcake.com








Leave a Reply