Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

குன்றின் மேல் ஒரு குடில் (1985)

எழில் சின்னதம்பி
எழில் சின்னதம்பி
March 1, 2026
குன்றின் மேல் ஒரு குடில் (1985)
சீன மூலம்: கான் சூயே 
ஆங்கில மொழிபெயர்ப்பு: மைக்கேல் எஸ். டியூக்
தமிழில்: எழில் சின்னதம்பி

என் வீட்டிற்குப் பின்னால் உள்ள அந்தப் பாழ்குன்றின் மேல், மரப்பலகைகளால் ஆன ஒரு குடில் இருக்கிறது.

வீட்டில் ஒவ்வொரு நாளும் என் மேசை இழுப்பறையைச் சுத்தம் செய்துகொண்டே இருப்பேன். அப்படிச் செய்யாத நேரங்களில், ஒரு பெரிய சாய்வு நாற்காலியில் அமர்ந்து, கைகளை முழங்கால்கள் மேல் வைத்துக்கொண்டு, சீறல் ஒலிகளைக் கவனிப்பேன்: அந்தக் குடிலின் ஊசிப்பனைமரத்தால் செய்த பலகைக்கூரையின் மீது காற்று பலமாக மோதும் சத்தம், பள்ளத்தாக்கில் ஓநாய்கள் ஊளையிடும் எதிரொலி.

“நீ உன் இழுப்பறையைச் சுத்தம் செய்து ஒருபோதும் முடிக்கப்போவதில்லை” என்று என் அம்மா ஒரு போலிச் சிரிப்புடன் என்னைப் பார்த்துச் சொல்கிறார்.

“எல்லோருடைய செவித்திறனும் கெட்டுப்போய்விட்டது” என்று என் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு தொடர்ந்தேன்: “நிலவொளியில் நம் வீட்டைச் சுற்றி எத்தனை திருடர்கள் நடமாடுகிறார்கள் தெரியுமா? நான் விளக்கை ஏற்றிப் பார்த்தபோது, யாரோ சன்னலில் எண்ணற்ற துளைகளைப் போட்டிருப்பதைப் பார்த்தேன். அடுத்த அறையில் உங்களது குறட்டைச் சத்தமும் அப்பாவின் குறட்டைச் சத்தம் வழக்கத்திற்கு மாறாகச் சத்தமாக இருந்தது; அது நிலையடுக்கில் இருந்த பாட்டில்களையும் சாடிகளையும் குதிக்க வைத்தது. நான் என் கால்களைக் கட்டிலின் சட்டத்தில் அழுத்தி, வீங்கிய என் தலையைப் பக்கவாட்டில் சாய்த்துக் கவனித்தேன்; குன்றின் மீதுள்ள அந்த மரக்குடிலுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் நபர், மரக்கதவை ஆவேசமாகத் தட்டுவதைக் கேட்டேன்; விடியும் வரை அந்தச் சத்தம் நீடித்தது.”

“ஏதாவது ஒன்றைத் தேடிக்கொண்டு நீ என் அறைக்குள் வரும்போதெல்லாம் நான் பயத்தில் நடுங்குகிறேன்” என்று என்னை எச்சரிக்கையுடன் பார்த்தவாறு கதவை நோக்கிப் பின்வாங்குகிறார் அம்மா. பயத்தினால் அவளுடைய முகத்தின் ஒரு பக்கம் கேலிக்குரிய வகையில் துடிப்பதை நான் கவனிக்கிறேன்.

ஒரு நாள், அந்தக் குன்றின் மேல் ஏறி உண்மையில் அங்கே என்னதான் இருக்கிறது என்று பார்க்க முடிவு செய்தேன். காற்றின் வேகம் நின்றவுடன் நான் புறப்பட்டேன். நீண்ட நேரம் ஏறினேன்; சூரிய வெப்பம் என் தலையில் அடிக்க, மயக்கம் வந்து பார்வை மங்கியது; ஒவ்வொரு கூழாங்கல்லும் சிறிய வெள்ளைப்பொறிகளுடன் மின்னியது. இருமிக்கொண்டே குன்றின் மேல் தள்ளாடினேன். என் புருவங்களில் இருந்த உப்புக் கரிக்கும் வியர்வைக் கண்களுக்குள் சொட்டியது. எனக்கு எதுவும் தென்படவில்லை. எனக்கு எதுவும் கேட்கவில்லை. நான் வீட்டிற்கு வந்தபோது, என் அறைக்கு வெளியே சிறிது நேரம் நின்றேன். அப்போது கண்ணாடியில் தெரிந்த நபர், முழுவதுமாகச் சேறு படிந்த காலணிகளை அணிந்திருப்பதையும், அவளுடைய கண்கள் இரண்டு கரு வளையங்களால் சூழப்பட்டிருப்பதையும் கண்டேன்.

“இது ஒரு வகையான வியாதி” என்று ஏதோ ஒரு இருட்டு மூலையில் என் குடும்பத்தினர் ரகசியமாகச் சிரிப்பதை நான் கேட்கிறேன்.

அறையின் இருட்டிற்கு என் கண்கள் பழகும் முன், அவர்கள் எங்கோ ஒளிந்துகொள்கிறார்கள்; மறைந்து போகும்போது சிரித்துக்கொண்டே செல்கிறார்கள். நான் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்கள் என் மேசை இழுப்பறையைத் தலைகீழாகக் கவிழ்த்து, அதை அசிங்கப்படுத்தியிருப்பதை நான் கண்டறிகிறேன்; தரையில் பல செத்த அந்துப்பூச்சிகளையும் தும்பிகளையும் கொட்டியிருக்கிறார்கள். அவை எனக்கு மிகவும் பிடித்தமானவை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

“நீ இங்கே இல்லாதபோது உன் இழுப்பறையைச் சுத்தம் செய்ய அவர்கள் உனக்கு உதவினார்கள்” என்று என் தங்கை எவ்வித உணர்ச்சியுமற்ற பார்வையுடன் என்னிடம் சொல்கிறாள்; அப்போது அவளுடைய இடது கண் பச்சை நிறமாக மாறுகிறது.

“ஓநாய்கள் ஊளையிடுவதை நான் கேட்கிறேன்” என்று வேண்டுமென்றே அவளைப் பயமுறுத்துவதற்காகச் சொல்கிறேன்: “ஒரு கூட்டமே வீட்டைச் சுற்றி முன்னும் பின்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. அவற்றில் சில கதவிடுக்கின் வழியாகத் தங்கள் தலைகளை உள்ளே நுழைக்கக்கூட முடியும். இவை இருட்டோடு சேர்ந்து வருபவை.”

“இந்த வீட்டில் அவர்கள் தூங்கும்போது, ​​அனைவரது கால்களிலும் குளிர்ந்த வியர்வை வழிகிறது. இதோ, போர்வைகள் எவ்வளவு ஈரமாக இருக்கின்றன என்று பார்.”

என் மேசை இழுப்பறையில் இருந்த சில பொருட்கள் காணாமல் போனதால் என் மனம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. அம்மா தன் கண்களைத் தாழ்த்திக்கொண்டு, இதைப் பற்றித் தனக்கு எதுவுமே தெரியாது என்பது போல் பாசாங்கு செய்கிறார்; ஆனால் என் தலையின் பின்னால் அவருடைய விரோதமான பார்வையை என்னால் உணர முடிகிறது. அவர் எப்போதெல்லாம் என் தலையின் பின்பகுதியைப் பார்க்கிறாரோ, அப்போதெல்லாம் அவர் பார்க்கும் மண்டை ஓட்டின் அந்தப் பகுதி ஜில்லிட்டு வீங்குகிறது. பின்புறம் உள்ள கிணற்றுக்கு அருகில் அவர்கள் என் விளையாட்டுக் காய்கள் அடங்கிய பெட்டியைப் புதைத்து வைத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்; இதற்கு முன்பும் அவர்கள் எண்ணற்ற முறை இப்படிச் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நள்ளிரவில் நான் அதைத் தோண்டி எடுப்பேன். நான் தோண்டிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் எப்போதும் விளக்கை ஏற்றிச் சன்னல் வழியாகத் தலையை நீட்டிப் பார்ப்பார்கள்; என் எதிர்ப்பைக் கண்டும் அவர்கள் அசையவே மாட்டார்கள்.

இரவு உணவின் போது நான் அவர்களிடம் சொல்கிறேன்: “மலையின் உச்சியில் ஒரு சிறிய குடில் இருக்கிறது.”

அவர்கள் அனைவரும் தலைகுனிந்து சத்தமாக சூப் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை நான் சொல்வதில் ஒரு வார்த்தை கூட அவர்கள் காதில் விழவில்லை போலும்.

“காற்றில் ஒரு பெரும் எலிக் கூட்டம் வெறித்தனமாக ஓடிக்கொண்டிருந்தது” என்று நான் என் குரலை உயர்த்தி, உணவை எடுத்து உண்ணப் பயன்படுத்தும் தந்த இணைக்குச்சிகளைக் கீழே வைத்தேன். “மலையிலிருந்து சரிந்து வந்த கற்கள் நம் வீட்டிற்குப் பின்னால் உள்ள சுவரில் மோதிச் சிதறின. அதைக் கேட்டதும் நீங்கள் அனைவரும் பயந்துபோய், உங்கள் கால்களில் குளிர்ந்த வியர்வை வழிந்தது. உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்கள் போர்வைகளை எடுத்துப் பாருங்கள். சூரியன் வந்தவுடன், நீங்கள் அவற்றை உலர வைக்கத் தொங்கவிடுகிறீர்கள்; துணி துவைக்கும் கயிறுகள் எப்போதும் உங்கள் போர்வைகளின் எடையால் தொங்கிக்கொண்டிருக்கின்றன.”

என் தந்தை திடீரென்று ஒரு கண்ணால் என்னை முறைத்துப் பார்க்கிறார்; அது மிகவும் பழக்கப்பட்ட ஒரு ஓநாயின் கண். எனக்குள் ஒரு உண்மை திடீரெனத் தோன்றுகிறது: ஒவ்வொரு இரவும் என் தந்தை அந்த ஓநாய்களில் ஒன்றாக மாறி, எங்கள் வீட்டைச் சுற்றித் துக்கத்துடன் ஊளையிடுகிறார்.

“கண் கூசும் வெண்மை ஒளி எங்கும் இருக்கிறது” என்று நான் அம்மாவின் தோள்களைப் பிடித்து உலுக்குகிறேன். “அது மிகவும் பிரகாசமாக இருப்பதால் என் கண்களில் நீர் வழிகிறது; உங்களால் எதையுமே பார்க்க முடியாது. ஆனால் நான் என் அறைக்குத் திரும்பி, அந்தப் பெரிய சாய்வு நாற்காலியில் அமர்ந்து, கைகளை என் முழங்கால்களின் மேல் வைத்தவுடன், அந்தப் பனைமரக் கூரையை என்னால் மிகத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அந்தப் பிம்பம் மிக அருகில் இருக்கிறது, நீங்களும் அதைப் பார்த்திருக்க வேண்டும். உண்மையில், குடும்பத்தில் உள்ள அனைவரும் அதைப் பார்த்திருக்கிறார்கள். அங்கே யாரோ ஒருவன் பதுங்கியிருக்கிறான்; இரவு முழுவதும் விழித்திருந்ததால் அவனுடைய கண்களுக்குக் கீழ் இரண்டு பெரிய ஊதா நிறத் தழும்புகள் இருக்கின்றன.”

“கிணற்றின் ஓரத்தில் இருக்கும் அந்தக் கருங்கல்லை நீ தோண்டும்போது ஏற்படும் அந்தச் சத்தம் கேட்கும் போதெல்லாம், உன் அம்மாவும் நானும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறோம்; நாங்கள் நடுங்குகிறோம், எங்கள் வெறும் கால்களால் நிலத்தைத் தொட முயற்சிக்கிறோம், ஆனால் எங்களால் தரையைத் தொட முடிவதே இல்லை” என்றார் என் அப்பா. என் பார்வையைத் தவிர்க்க சன்னல் பக்கம் முகத்தைத் திருப்புகிறார். சன்னல் கண்ணாடி ஈக்களின் எச்சங்களால் புள்ளிகளாகத் தெரிகிறது.

“கிணற்றின் அடியில் நான் தவறவிட்ட ஒரு கத்தரிக்கோல் இருக்கிறது. அதை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று என் கனவுகளில் நான் ரகசியமாகத் தீர்மானிக்கிறேன். ஆனால் நான் விழிக்கும்போது, நான் ஒரு தவறு செய்துவிட்டேன் என்பதையும், நான் உண்மையில் கத்தரிக்கோலைத் தவறவிடவில்லை என்பதையும் உணர்கிறேன்; உன் அம்மாவும் நான் தவறு செய்வதாகவே சத்தியம் செய்கிறாள்; ஆனால் அந்தக் கத்தரிக்கோலை என் மனதிலிருந்து நீக்க முடிவதில்லை; அடுத்த முறை மீண்டும் அது எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் படுத்திருக்கும்போது, அந்தக் கத்தரிக்கோல் கிணற்றின் அடியில் துருப்பிடித்துக் கொண்டிருப்பதை நினைத்துத் திடீரென வருத்தப்படுவேன்; நான் ஏன் அதை மீட்கக் கூடாது? பல தசாப்தங்களாக நான் இதைப் பற்றி கவலைப்பட்டு வருகிறேன். என் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் கத்தி வெட்டுகளைப் போல இருப்பதை நீயே பார்க்கலாம். ஒருமுறை நான் கிணற்றுக்குள் வாளியை இறக்க முயன்றேன், ஆனால் கயிறு கனமாகவும் வழுக்கக்கூடியதாகவும் இருந்தது, என் கைகள் தளர்ந்தன, வாளி பயங்கர சத்தத்துடன் கிணற்றுக்குள் விழுந்தது. நான் வீட்டிற்குள் ஓடிவந்து, கண்ணாடியில் என்னைப் பார்த்தபோது, என் இடது பக்கத்து நெற்றிமுடி முற்றிலும் நரைத்திருப்பதைக் கண்டேன்” என்கிறார் அப்பா.

“வடக்குக் காற்று மிகக் கடுமையாக வீசுகிறது.” நான் என் தோள்களைக் குறுக்கிக்கொள்கிறேன், என் முகம் கறுப்பு மற்றும் நீல நிறத் தழும்புகளாக மாறுகிறது. “என் வயிற்றுக்குள் சிறிய பனிக்கட்டித் துண்டுகள் உருவாகியுள்ளன. நான் அந்தப் பெரிய சாய்வு நாற்காலியில் அமரும்போது, அவை உள்ளே ஒன்றுடன் ஒன்று மோதித் தட்டும் சத்தத்தை என்னால் கேட்க முடிகிறது.”

நான் எப்போதும் என் இழுப்பறையைச் சரியாகச் சுத்தம் செய்ய விரும்புகிறேன், ஆனால் அம்மா எப்போதும் அதற்கு ரகசிய எதிரியாக இருக்கிறார். அடுத்த அறையில் அவர் முன்னும் பின்னும் நடக்கும் காலடிச் சத்தம் எனக்குப் பலவிதமான விசித்திரமான எண்ணங்களை ஏற்படுத்துகிறது. அந்தச் சத்தத்தை மறப்பதற்காக, நான் ஒரு சீட்டுக்கட்டை எடுத்து எண்ணத் தொடங்குகிறேன்: “ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து…” ஆனால், திடீரென்று அந்த நடை நிறுத்தப்படுகிறது; அம்மா தனது சிறிய கருப்பு-பச்சை கலந்த முகத்தை அறைக்குள் நீட்டி, ஒரு தாழ்ந்த குரலில் கூறுகிறார்: “நான் ஒரு மிக அநாகரிகமான கனவு கண்டேன்; அதன் பயத்தில் என் முதுகு இன்னும் குளிர்ந்த வியர்வையில் நனைந்திருக்கிறது.”

“அதோடு உங்கள் உள்ளங்கால்களும்” என்று நான் சேர்த்துச் சொன்னேன். “எல்லோருடைய உள்ளங்கால்களும் குளிர்ந்த வியர்வையால் மூடப்பட்டிருக்கின்றன. நீங்கள் நேற்றுதான் போர்வைகளை உலர வைக்கத் தொங்கவிட்டீர்கள். இது மிகவும் சாதாரணமான ஒன்றுதான்.”

அம்மா எப்போதுமே என் கைகளை உடைக்க விரும்புகிறார் என்று ரகசியமாக உள்ளே வந்து தங்கை என்னிடம் சொல்கிறாள்; ஏனெனில் நான் மேசை இழுப்பறையைத் திறக்கும்போதும் மூடும்போதும் ஏற்படும் சத்தம் அவருக்குப் பைத்தியம் பிடிக்க வைக்கிறது. அந்தச் சத்தம் அவரை எவ்வளவு காயப்படுத்துகிறது என்றால், அவர் தன் தலையைக் குளிர்ந்த நீருக்குள் நுழைத்துக் கொள்கிறார்; அவருக்குக் கடுமையான ஜலதோஷம் பிடிக்கும் வரை அவர் தலையை நீரிலேயே ஊறவைக்கிறார்.

“இது ஒன்றும் தற்செயலானது அல்ல.” தங்கையின் பார்வை எப்போதும் ஒருவித வெறுமையாகவே இருக்கிறது; அது என்னைத் துளைத்துச் செல்கிறது; என் கழுத்தின் பின்புறத்தில் சிறிய சிவப்புத் தடிப்புகளை உண்டாக்குகிறது. “உதாரணத்திற்கு அப்பாவை எடுத்துக்கொள்; அவர் அந்தப் பழைய கத்தரிக்கோலைப் பற்றி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசிக்கொண்டிருக்கிறார். எல்லாவற்றிற்கும் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.”

நான் என் இழுப்பறையின் பக்கவாட்டுப் பகுதிகளில் எண்ணெய் தேய்த்தேன்; அது சத்தமே வராத வரை மிக மெதுவாக அதைத் திறந்து மூடினேன். பல நாட்களாக நான் இதை முயற்சி செய்தேன்; அடுத்த அறையில் முன்னும் பின்னும் நடக்கும் சத்தம் நின்றது. நான் அவளை ஏமாற்றிவிட்டேன். நீங்கள் கொஞ்சம் கவனமாக இருந்தால், பல விசயங்களில் வஞ்சகமாகவே காலத்தைக் கடத்திவிட முடியும் என்று தோன்றுகிறது. நான் மிகுந்த உற்சாகமடைந்து இரவு முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கினேன்; என் இழுப்பறை முழுமையாகச் சுத்தம் செய்யப்படப்போகும் தருவாயில், திடீரென்று மின்விளக்கு அணைந்தது. அடுத்த அறையில் அம்மா கிண்டலாகச் சிரித்தார்.

“உன் அறையிலிருந்து வரும் வெளிச்சம் எனக்கு எரிச்சலைத் தருகிறது, என் நரம்புகள் மேளம் போல அடிக்கின்றன. இங்கே பார்” என்று அவர் தன் நெற்றிப் பொட்டைக் காட்டினார்; அங்கே ஒரு பருமனான உருண்டைப் புழு படுத்துக்கொண்டிருந்தது. “எனக்கு அரிப்பு நோய் வந்திருக்கலாம். எனக்குள் எப்போதும் ஏதோ மேளம் ஒன்று அடித்துக் கொண்டே இருக்கிறது, எல்லா இடங்களிலும் சத்தம் எழுப்புகிறது; உனக்கு ஒருபோதும் அத்தகைய உணர்வு ஏற்பட்டிருக்காது. உன் தந்தை கூட இது போன்ற நோயின் காரணமாகத் தற்கொலை செய்துகொள்ள எண்ணினார்.” அவர் தன் பருமனான கையை நீட்டி என் தோள் மீது வைத்தார்; அவரது கை உறைந்து போனது போலவும், அதிலிருந்து இடைவிடாது நீர் சொட்டுவது போலவும் இருந்தது.

கிணற்றுக்கு அருகில் யாரோ கெட்ட எண்ணத்துடன் இருக்கிறார்கள். அவர் வாளியை மீண்டும் மீண்டும் உள்ளே இறக்குவதை என்னால் கேட்க முடிகிறது; அது கிணற்றின் சுவர்களில் மோதும்போது உரத்த சத்தத்தை உண்டாக்குகிறது. விடியற்காலையில், அவர் வாளியைக் கீழே போட்டுவிட்டு ஓடிவிடுகிறார். நான் அடுத்த அறையின் கதவைத் திறந்து பார்த்தபோது, அப்பா ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டேன்; கருமையான நரம்புகள் புடைத்திருந்த அவரது கைகளில் ஒன்று, படுக்கையின் விளிம்பை வலியுடன் பற்றியிருந்தது. கனவில் அவர் பரிதாபமாக முனகிக் கொண்டிருந்தார். கலைந்த தலைமுடியுடன் அம்மா எந்திரத்தனமாகத் தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தார். விடியற்காலையில் ஒரு பெரிய வண்டுக் கூட்டம் சன்னல் வழியாக உள்ளே பறந்து வந்து, சுவரில் மோதித் தரை முழுவதும் விழுந்ததாக அவர் என்னிடம் கூறினார். அவற்றைச் சுத்தம் செய்ய அவர் படுக்கையிலிருந்து எழுந்தார், ஆனால் அவர் தனது செருப்புகளைப் போடும்போது, செருப்புக்குள் ஒளிந்திருந்த ஒரு வண்டு அவரைக் கடித்துவிட்டது; இப்போது அவருடைய கால் முழுவதும் ஒரு ஈயத் தூண் போல வீங்கியிருந்தது.

“அவர்” என்று ஆழ்ந்து உறங்கும் தந்தையைச் சுட்டிக்காட்டி அம்மா சொன்னார், “தன்னைத்தான் வண்டு கடித்ததாகக் கனவு கண்டார்.”

“மலையில் உள்ள அந்தக் குடிலிலும் இப்போது யாரோ முனகிக் கொண்டிருக்கிறார்கள். கருத்த காற்று சில காட்டுத் திராட்சை இலைகளை அங்கும் இங்கும் வீசிக்கொண்டிருக்கிறது.”

“அதைக் கேட்டாயா?” அந்த மங்கலான வெளிச்சத்தில் அம்மா தன் முழுக் கவனத்தையும் ஒருமுகப்படுத்தி, தரையில் காதை வைத்தார். “இந்த உயிரினங்கள் தரையில் மோதியபோது மயக்கமடைந்து விழுந்தன. விடியற்காலையில்தான் இவை உள்ளே புகுந்தன.”

அன்று நான் உண்மையில் மீண்டும் மலையின் மேல் ஏறினேன். அது எனக்கு மிகத் தெளிவாக நினைவிருக்கிறது. முதலில் நான் பிரம்பு நாற்காலியில் கைகளை முழங்கால்கள் மேல் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன், பிறகு கதவைத் திறந்து அந்த வெள்ளை ஒளிக்குள் நடந்தேன். நான் மலையில் ஏறியபோது, என்னால் அந்த வெள்ளைக் கூழாங்கற்களிலிருந்து வெளிப்பட்ட பொறிகளை மட்டுமே பார்க்க முடிந்தது; அங்கே காட்டுத் திராட்சைகள் இல்லை; அங்கே அந்தக் குடிலும் இல்லை.


கான் சூயே

கான் சூயே என்பது ‘டெங் சியாவோஹுவா’வின் (Deng Xiaohua) புனைப்பெயராகும். 1953 – ஆம் ஆண்டு ஹுனான் மாகாணத்திலுள்ள சாங்ஷாவில் பிறந்த இவர், 1983-இல் எழுதத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவரது படைப்பு முதன்முதலில் வெளியானது. இவருடைய முதல் கதையான “சேற்றுத் தெரு” (Mud Street), இவரது அனைத்துப் படைப்புகளிலும் இழையோடும் அடிப்படைக் கருப்பொருளை நிறுவுகிறது — ஒரு தனிமைப்படுத்தப்பட்ட உலகம் மற்றும் அந்த உலகின் பிடிவாதமான மனிதர்கள் தங்கள் நிலையைப் பற்றி முற்றிலும் அறியாமல் இருப்பதே அக்கருப்பொருளாகும். கான் சூயே தனது தொலைநோக்குப் பார்வையை ஒற்றை இலக்குடன் பின்தொடர்கிறார்; இது ஒரு நோயியல் சார்ந்த (pathological), உள்நோக்கி வளர்ந்த, எவ்வித நிம்மதியுமற்ற உலகத்தை வெளிப்படுத்துகிறது.

“குன்றின் மேல் ஒரு குடில்” (The Hut on the Hill) என்பது “சேற்றுத் தெரு” கதைக்குத் பிறகு 1984-இல் தொடங்கப்பட்ட சிறுகதைத் தொடரின் ஒரு பகுதியாகும். இந்தத் தொடரில் குறிப்பிடத்தக்க மற்ற கதைகள்: “தி ஸ்கைலைட்” (The Skylight), “தி ஆக்ஸ்” (The Ox) மற்றும் “டயலாக்ஸ் இன் ஹெவன்” (Dialogues in Heaven). இந்தக் கதைகள், கதைக்கள வளர்ச்சியின் பாசாங்குகள் ஏதுமின்றி, ஒரு இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் ஆசிரியரின் நோயியல் பார்வையை வெளிப்படுத்துகின்றன; மேலும் இவை “சேற்றுத் தெரு” கதையை விட அதிக ஆற்றலையும் படைப்பாற்றலையும் கொண்டுள்ளன.

“குன்றின் மேல் ஒரு குடில்” எனும் இச்சிறுகதை, சீன இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ‘அதீத எதார்த்தப் (Surrealist) படைப்பாகக் கருதப்படுகிறது.

எதார்த்தத்தின் சிதைவு: இந்தக் கதையில் எது உண்மை, எது கற்பனை என்ற எல்லைக் கோடு மிக மெல்லியது. கதையின் தொடக்கத்தில் விவரிக்கப்படும் அந்த ‘மரக்குடில்’, இறுதியில் இல்லாமல் போவது நம்மை ஒருவித அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. இது புற உலகத்தை விட, ஒரு தனிமனிதனின் அக உலகம் எவ்வளவு சிதைந்து போயிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

குடும்ப உறவுகளும் அந்நியமாதலும்: வழக்கமான கதைகளில் குடும்பம் என்பது பாதுகாப்பான இடமாகச் சித்தரிக்கப்படும். ஆனால் இக்கதையில் அம்மா மற்றும் அப்பா தங்கள் மகளை வேவு பார்ப்பவர்களாகவும், அவளது பொருட்களின் மீது தாக்குதல் நடத்துபவர்களாகவும் உள்ளனர். அப்பா ஓநாயாக மாறுவது –  தந்தையின் மீதான பயம் அல்லது வெறுப்பு அவரை ஒரு மிருகமாகக் காண வைக்கிறது. தொடர்ச்சியான கண்காணிப்பு: குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையொருவர் சந்தேகக் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்கள். இது சமூகத்தில் நிலவும் ‘அவநம்பிக்கையை’ (Paranoia) பிரதிபலிக்கிறது.

குறியீடுகள் நிறைந்த கதையிது.

மேஜை இழுப்பறை: இது கதாநாயகியின் ரகசியங்கள், நினைவுகள் மற்றும் அவளது தனிப்பட்ட அடையாளத்தைக் குறிக்கிறது. அதை அவள் சுத்தம் செய்ய நினைப்பது, தன் சிதறிய வாழ்க்கையைச் சீரமைக்க எடுக்கும் முயற்சியாகும்.

குளிர் வியர்வை:  குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பயத்தில் வாழ்கிறார்கள் என்பதையும், அந்தப் பயம் ஒரு தொற்று நோய் போல அனைவரையும் பற்றியிருப்பதையும் இது குறிக்கிறது.

கிணற்றில் விழுந்த கத்தரிக்கோல்: இது கடந்த காலத்தின் தீர்க்கப்படாத சிக்கல்கள் அல்லது குற்றவுணர்வைக் குறிக்கும் ஒரு படிமம்.

விமரிசகர்கள் இக்கதையை ஒரு ‘நோயுற்ற மனநிலை’யின் வெளிப்பாடாகப் பார்க்கிறார்கள். கதாநாயகிக்குத் தெரியும் ஒலிகள் (பாட்டில்கள் குதிப்பது, வண்டுகள் கடிப்பது) மற்றவர்களுக்குத் தெரிவதில்லை. குடும்ப உறுப்பினர்களின் உடல் மாற்றங்கள் (முகம் பச்சை நிறமாவது, நரம்புகள் புடைப்பது) ஒருவிதமான அருவருப்பையும் பயத்தையும் உருவாக்குகின்றன.

அரசியல் மற்றும் சமூகப் பின்னணி: கான் சூயே இந்தப் படைப்பை எழுதிய காலகட்டத்தில் (1980-களின் தொடக்கம்), சீனா தனது கலாச்சாரப் புரட்சியின் பாதிப்பிலிருந்து மீண்டு கொண்டிருந்தது.

கண்காணிப்பு கலாச்சாரம்: ஒருவரை ஒருவர் வேவு பார்ப்பது, ரகசியமாகச் சிரிப்பது போன்றவை அக்கால அரசியல் சூழலில் நிலவிய பாதுகாப்பின்மையின் குறியீடுகளாகப் பார்க்கப்படுகின்றன.

தனிமை: கூட்டமாக வாழ்ந்தாலும் ஒரு மனிதன் தன் எண்ணங்களுடன் எவ்வளவு தனிமைப்படுத்தப்படுகிறான் என்பதை இது காட்டுகிறது.


எழில் சின்னதம்பி
எழில் சின்னதம்பி
பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி.
சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு – தரப்பகுப்பாய்வு இயக்குனராகப் பணிப்பொறுப்பு.

மொழிபெயர்ப்புக் கதைகளும், கலை இலக்கியக் கட்டுரைகளும் கல்குதிரை, சிறுகதை, தினவு, தடாரி, காலச்சுவடு, சிறுவர்களுக்கான ‘இயல்’ போன்ற இதழ்களில்  வெளியாகியிருக்கின்றன. மாய எதார்த்தக் கதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு ‘கடைசி வருகை’ முதல் புத்தகம், மார்ச் 2022-ல்வெளியானது. ‘லத்தீன் அமெரிக்கப் பெண்ணெழுத்து’ எனும் இரண்டாவது மொழிபெயர்ப்புத் தொகுப்பான ‘கடலோடியின் மனைவி’ 2024 டிசம்பரில் வெளியானது. ‘இயல்திரிபுப் புனைகதைகளின்’ மொழிபெயர்ப்புத்தொகுப்பான ‘சிலந்தி’ டிசம்பர் 2025ல் வெளியாகியிருக்கிறது.
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top