காத்திருந்த பறவை
மரத்தடியில் இரண்டு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பறவை வந்து அந்த மரத்தில் உட்கார்ந்தது.
இரண்டு சிறுமிகளும் அதைப் பார்த்தார்கள்.
“இந்தப் பறவை மரத்தைவிட்டு எப்போது பறந்து போகும்”? என்று ஒரு சிறுமி கேட்டார்.
“ஒன்று முதல் பத்து வரை சொல்வதற்குள் அந்தப் பறவை பறந்து போய்விடும்” என்று இன்னொரு சிறுமி சொன்னார்.
இருவரும் இப்படி விளையாடுவது வழக்கம். இப்போது இருவரும் சேர்ந்து “ஒன்று, இரண்டு, மூன்று….. என்று நிறுத்தி நிதானமாகச் சொல்லத் தொடங்கினார்கள்.
பத்துவரைச் சொல்லி முடித்துவிட்டார்கள். அதன் பிறகும் அந்தப் பறவை பறந்து செல்லவில்லை.
தாங்கள் ஏமாந்து விட்டதாக இருவரும் நினைத்தனர்.
இப்போது அந்தப் பறவை சொன்னது, “நீங்க பத்து என்று சொல்லி முடிப்பதற்குள் நான் பறந்து போயிருப்பேன். ஆனால் போகவில்லை. நீங்க பத்துவரை எண்ணுவதைக் கேட்டுவிட்டுப் போகலாம் என்றுதான் காத்திருந்தேன்”.
இப்படிச் சொல்லிவிட்டு அந்தப் பறவை பறந்து போனது.
என்ன காரணம்
நறுமுகையின் வீட்டருகே ஒரு மாமரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு ஊஞ்சல் இருந்தது.
நேரம் கிடைக்கும்போது நறுமுகை அந்த ஊஞ்சலில் ஏறி ஆடுவார்.
நாம் ஊஞ்சல் ஆடிவிட்டு இறங்கிய பிறகும் ஊஞ்சல் தனியாக ஆடிக்கொண்டிருக்கும். அது இயற்கை விதி.
ஆனால், நீ ஏன் தனியாக ஆடிக்கொண்டிருக்கின்றாய் என்று அந்த ஊஞ்சலிடம் கேட்டேன்.
“நறுமுகையின் தோழிக்கு இன்று பிறந்த நாள், என்னை விட்டுவிட்டு அவள் மட்டும் பிறந்த நாள் கொண்டாடப் போய்விட்டாள். அந்த ஏக்கத்தில் ஆடிக்கொண்டிருக்கிறேன்” என்றது.
Art : Bea Cogollos
வேலூரில் வசித்துவருகிறார். பிரியாத மழை நினைவு என்கிற கவிதை கவிதை நூலையும்
புலி கிலி, எருமையின் நிழல் ஆகிய சிறார் கதை நூல்களையும், பூதம் தூக்கிட்டுப்போன தங்கச்சி, தங்க மாங்கனி ஆகிய நாட்டுப்புற சிறார் கதை தொகுப்புகளையும், கை வீசி நடக்கும் நிழல், நீலக்குரல் ஆகிய சிறார் பாடல்களையும் எழுதி உள்ளார். சிறார் கதைச் சொல்லியான இவர் சிறார்களுக்காகக் ‘கூட்டாளிகள்’ என்ற கலைக் குழுவைவையும், ‘தமிழ்க் கனவு’ என்ற இலக்கிய அமைப்பை நடத்திவருகிறார்.
Leave a Reply