Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

கார்த்திக் திலகன் கவிதைகள்

கார்த்திக் திலகன்
கார்த்திக் திலகன்
March 1, 2026
கார்த்திக் திலகன் கவிதைகள்

நல்லொளியின் மழை

மஞ்சள் நிலவொளியால் மெழுகிய
மென் தரையில் மௌனமாக நிற்கின்றன படகுகள்
கடிகார முள்ளின் கூரிய நிழல்
என்னை வதைக்கிறது
அடிவயிற்றில் முளைத்து வளர்ந்த
ஒரு முட்செடி இதயத்தை நோக்கிக்
கிளைக்கிறது
தன்னுடலைத் தானே சுமந்து செல்லும் புராதன வேதனை
என்னைச் சூழ்கிறது
என்னுடைய தனிமையை யாருக்கும் கையளிக்க முடியாத துயரை இரவின் மீது
விடிய விடிய தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்
துளித்துளியாக
பொழியத் தொடங்கி விட்டது
நல்லொளியின் மழை


காளிபூஜை

எழுத்துக்குள்
வெகு ஆழமாகச் சென்று விட்டேன்
நடக்க நடக்கக் கால்கள்
மகிழ்ச்சி அடையும் ஒரு பயணமது
எனக்கு அங்காரும் துணையில்லை
பலவித தனிமைகளிலிது விசேஷமானது
எழுத்துக்குள் ஏதோவொன்று நடக்கிறது
எழுத்தின் ரீங்காரம் படியும் மனதில் காளி குடியேறுவாள்
தூமைக்கோடு வழிய வழிய
அங்கே காளி நடமிடுவாள்
கண்ணாடி ஜாடி போல் மனம் தரையில் விழுந்து சில்லு சில்லாக இறகு முளைத்து பறக்கிறது
மூளைக்குள்
எழுத்துகளின் தூபம் புகைய
கபாலத்துக்குள் நடக்கிறது
காளி பூஜை


சீட்டுக்கட்டுகள்

மனிதர்களின் நீள் வரிசை
முன் நின்றவனைத் தள்ளி விட்டேன்
வரிசையாக ஒருவர் மீது ஒருவர் மந்திரித்து விட்ட சீட்டுக்கட்டு போல் சரிந்தனர்

பலே பாண்டியா என்று காற்று என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டது

பலே பாண்டியா என்று காற்று என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டது
சொற்களின் தனிமைக்குத் துணை இருந்தேன்
அவை சொன்னதை எழுதினேன் வேறென்ன செய்து விட்டேன்
எதற்கு எனக்கிந்த பாராட்டு

வேறென்ன செய்து விட்டேன்
எதற்கு எனக்கிந்த பாராட்டு
கருவறையில் வளர்ந்தவளை மணவறைக்குக் கூட்டி வந்து மனைவியாக்கிக்
கருப்பைக்குள் இளங்காளியை
வளரச் செய்தேன்
முத்தத்தாலவள் மணி வயிற்றில் உபதேசம் செய்ததற்குக்
கை மேல் பலன் கிடைத்தது

உபதேசம் செய்ததற்குக்
கை மேல் பலன் கிடைத்து
காய்ச்சல் போல இன்பம் பரவி
சுருண்டு கிடந்தவள் எழுந்து அமர்ந்தாள்
வரிசையாக நின்றிருந்த
நினைவுகளைத் தள்ளி விட்டாள்
ஒன்றின் மீது ஒன்று சரிந்தன நினைவுகள்


எழுத்துப்பசி

கவிதை எழுத அமர்ந்தேன்
எதுவும் தோன்றவில்லை
மனக் காகிதத்தைப் புள்ளிகளால் நிரப்பினேன்
புள்ளிகளின் உயிர்த்தலத்தில்
நொதித்துக் கிடந்தன
எழுத்துப்பசி கொண்ட நுண்ணுயிரிகள்
வார்த்தைகளை உரித்துக் கை நிறைய சுளைகளை எடுத்துக்கொண்டு
உள் நுழைந்தான் தூமகேது
பசித்த நுண்ணியிரிகள்
கைகளை நீட்டிக் கெஞ்சின
எல்லா நுண்ணுயிர்களின் கைகளையும் வாளால் கொய்து
தூளியை நிரப்பிக் கொண்டு
கண்களின் ஜன்னல் வழியே
குதித்து வெளியேறினான் தூமகேது


உதிரிப்பூக்கள்

அ) மூக்குத்தி போலொரு சொல்
ஜிமிக்கி போலொரு சொல்
வைர அட்டிகை போலொரு சொல்
ஒட்டியானம் போலொரு சொல்
கொலுசு போலவுமொரு சொல்
உனக்காகத்தான் எல்லாம்
எடுத்து அணிந்து கொள்
உனதழகில்
கண்கள் பனிக்கின்றன தாயே
உன் தகப்பன்தான் எத்தனை செல்வந்தன்

ஆ) யாருடைய மனதையும்
புண்படுத்த விரும்பாத நான்
என் மனதையே பலமுறை புண்படுத்தி இருக்கிறேன்
அதற்குப் பிராயச்சித்தமாகவே மனதை ஆகாயத்தில் பொருத்தி மேகங்களாக மிதக்க விடுகிறேன்
மலை உச்சியில் வைத்து மனதைத் தாலாட்டுகிறது காற்று

இ) எதையும் தெரியாது
என்று சொல்ல முடியாது
எல்லாமும் ஏதோ ஒரு வகையில் பழக்கப்பட்ட துக்கங்கள்
அடரிருளில் நான் சந்தித்த முகமறியாத் துக்கமொன்று
என் கைகளைப் பற்றிக் கொண்டு என்னை நினைவில்லையா என்றது
முகம் நினைவில்லா விட்டாலென்ன உன் தழுவல் நினைவில்லாமலா என்றேன்

ஈ) தட்டில் இருக்கும் மாமிசத் துண்டுகளுக்கு உயிர் இருக்கிறது என்று நம்புபவரைப் போல
முள் கரண்டியாலதைக்
குத்திச் சாப்பிட்டார்
காட்டுப்பன்றியை
ஈட்டியால் குத்தி மலர்த்தி
அதன் இருதயப்பூவை வாய்க்குழிக்குள் நிரப்பும் வேட்டைமுகத் தும்பனின்
சாயலவருக்கு


மௌனத்தின் விறுவிறுப்பு

நன்றாக உறங்கி விட்டேன்
ஒலி வடிவில்
என்னைத் தேடிவந்த நண்பன்
கதவு தட்டிய ஓசை
காதில் விழவில்லை
விழித்துக் கொண்ட கதவு
அவனிடம் பேசி இருக்கிறது
பேசிப் பேசி
சொல்லாக உறைந்து விட்ட கதவை
காலையில் திறந்ததும்
என்னைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தது காற்று
வழக்கமாக அமரும் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து
நண்பா ஒரு கப் காப்பி என்றது
காற்றுக்குக் கரகரப்பான அவனது அதே குரல்
காபிக்குள் கலந்திருந்த சொற்களை நாவால்
துழாவி துழாவி சுவைத்த படி
மௌனமாக அமர்ந்திருந்தோம்
மௌனத்தின் விறுவிறுப்பு சுர்ரென்று மூளைக்கு ஏறியது

( லா.சா.ராவுக்கு )


art : Babebeeblue

கார்த்திக் திலகன்
கார்த்திக் திலகன்
Share :

2 responses to “கார்த்திக் திலகன் கவிதைகள்”

  1. Mohamed Batcha
    March 29, 2026

    மிகவும் அருமையான கவிதைகள்

    Reply
  2. கலியபெருமாள் (கலித்தேவன்)
    April 16, 2026

    எழுத்துக்களின் தூபம் புகைய கபாலத்திற்குள் நடக்குது காளியின்பூசை
    எழுத்தின் வலிமையயும் , வேதனையும் ஒருங்கே சுட்டியது சிறப்பு

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (4)
  • கட்டுரை (100)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (4)
  • கட்டுரை (100)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top