மராத்தியில் : சரண்குமார் லிம்பாலே
ஹிந்தியில் : பத்மஜா க்கோர்படே
தமிழில் : வசந்ததீபன்
நானும் எனது வார்த்தைகளும்
பயங்கரமான போராட்டத்தால் நான் முன்னோக்கி வருகிறேன்
லட்சக்கணக்கான கோடிக்கணக்கான துப்பாக்கிகளின் கோலாகலம் போல
நான் இரத்தத்தில் பரவுகிறேன்
மற்றும் கற்றுக் கொடுக்கிறேன் வார்த்தைகளை ஜேப்படிக்காரனின் திறமை
கழுத்தை வெட்டுவதின் தந்திரங்கள்
திருடிமறைத்து வைப்பதின் கலை!
நான்
வார்த்தைகளைச் சித்திரவதை செய்கிறேன்
நான் தலைகீழாகத் தொங்கி விட்டு எரிக்கிறேன் அவற்றை
பூடஸ்களால் நசுக்குகிறேன்
அவற்றின் முகங்களில் மூத்திரத்தைப் பெய்கிறேன்
பிறகும் இந்த வார்த்தைகள்
எனக்கு முன்பாக நின்றிருக்கின்றன
நாகரிக ஆடைகளில் மோசமான தலைவர்களைப் போல
நான்
வார்த்தைகளுக்கு உணவு ஊட்டுகிறேன்
பூரி காய்கறிகள், பிரியாணி
அவைகளோடு அன்பு பாராட்டுகிறேன்
மற்றும் வெளியே போகிறேன் வார்த்தைகளைக் கூட்டிக் கொண்டு
வேலைக்குப் போவது போல
நானும் வார்த்தைகளும்
அலுவலகத்தில் சுற்றி அலைகிறோம் நாங்கள்
மேஜை மேஜையாக அதட்டியபடி
மேஜைகள் தலைகுனிந்து ஸலாம் செய்தன
நாற்காலிகள் மேஜை ஃபைல்கள்
இவற்றிலிருந்து நானோ தேசத்தின் வளர்ச்சி இருக்கிறது!!
இழிசெயலிலிருந்து அனைத்துத் திட்டங்கள்
ஸுஜலாம் ஸுப்பலாம் இருக்கின்றன
நானும் என்னுடைய வார்த்தைகளும்
வேலைவாய்ப்பு எழுத்தர் போல
வருகைப் பதிவை நிரப்பும் போது, போலிப் பெயர்கள் சுற்றி அலைந்தபடி இருக்கின்றன
இந்தப் போலிப் பெயர்கள் யாருடையவை?
இந்த தேசத்தினுடைய அனைத்து மந்திரிகளுடையதாகவேதான் இருக்கின்றன.
(ஸுஜலாம் – நல்ல தண்ணீர் உடையவள்,
ஸுப்பலாம் – நல்ல பழங்கள் உடையவள்)
பாரம்பரியம்
என்னுடைய தாத்தாக்களும் கொள்ளு தாத்தாக்களும் எப்படி நம்பிக்கை வைத்தார்கள்
இந்த மிகப் பழைய புத்தகங்கள் கடிதங்கள் புராணங்களின் மீது?
ஏன் செய்யவில்லை எப்போதும் கலகம்?
இந்த அற்பமான பாரம்பரியத்தின் எதிர்ப்பு?
எப்படி சகித்தோம் நாம்
முதுகின் மீது சவுக்கால் எழுதிய இந்த அடிமைத்தனத்தின் அனுமதிச் சீட்டுகளை?
உயிரைக் கைப்பிடியில் பிடித்துக் காடுகளில் மறைத்த குடியிருப்புகள்
வியர்வையில் முற்றும் நனைந்த இந்தத் தரிசு நிலம்
கண்ணீரில் நனைந்த இந்தக் காடுகள் புதர்கள்
ஆகாயம்தான் கிழிந்து போய் இருக்கிறது … அதை எங்கே எங்கே தைப்பது?
என்ன வித்தியாசம் இருக்கிறது உனக்குள்ளும் எனக்குள்ளும்?
தொழுநோய் போல பரவிய இந்த வறுமையைத் தவிர?
யார் உருவாக்கியது இந்தத் தீண்டாமையை?
யார் பரவ வைத்தது இந்த ஜாதியக் கலவரத்தை?
யார் கொண்டு வந்தது இந்த ஜாதி மதத்தை?
இந்த தேசத்தின் பிரிவினைத் தத்துவத்தை யார் எழுதியது?
இந்த தேசத்திலே தேசத்தின் எதிரிகளை யார் உருவாக்கியது?
யார் பொறுப்பாளி தேசத்தின் இந்த உடைவுக்கு?
என்னுடைய அப்பா தாத்தா கொள்ளுத் தாத்தா எப்படி இதை நம்பினார்கள்?
இந்தப் பைத்தியக்காரப் புத்தகங்கள் கடிதங்கள் புராணங்களை?
ஏன் செய்யவில்லை அவர்கள் கலகம் எப்போதும்
இந்த அற்பமான பாரம்பரியத்திற்கு எதிராக?
உன்னுடைய கூந்தலில்
உக்கிரமான வெள்ளத்தை எடுத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறேன்
உதடுகளில் சூறாவளியின் சுழற்காற்றை எடுத்துக் கொண்டு
என்னுடைய சுவாசத்தால் பொசுங்கிக் கருகிக் கொண்டிருக்கின்றன பூங்காவின் ரோஜாக்கள்
மற்றும் ஒரு பார்வையால் இடிபாடு உண்டாகிக் கொண்டிருக்கிறது திடமான கோட்டைகள்
தமது கால்தடங்களைத் தான் வரலாற்றிலிருந்து அழித்து விட்டு
இந்தப் பயங்கரமான அரசாட்சிக்கு விரோதத்தில் நான் திடமாய் நின்றிருக்கிறேன் ஜெயிக்க முடியாமல்
என்னுடைய பயங்கரமான அழைப்புகளால்
பூகம்பம் வந்து இருக்கிறது நாலாப்புறமும்
தாஜ்மஹாலினைக் கட்டியபோது அனுபவித்துச் சகித்துக் கொண்டு
என்னுடைய பிரியமானவளின் இந்த நினைவுகள்
கருத்த மேகங்களைப் போல வரைந்து கொண்டிருக்கின்றன
மனம் ஆகாயத்தின் மீது!
நான் அந்த ரம்மியமான நினைவுகளின் ஓட்டத்தில்
சந்திரனை ஒரு அடையாளமாக வைத்திருக்கிறேன்
மற்றும் அவளுடைய கூந்தலில் தாழம்பூ என அறிந்து
சூரியனைச் செருகி வைத்தேன்.
குற்றவாளி
என்னுடைய வீடு
பாதை போய்ச் சேருகிறது
திருட்டுத்தனத்தினைத் தேடி எடுத்துக் கொண்டு
மற்றும் கழுதையின் முதுகின் மீது குடும்பத்தை ஏற்றி
நான் கிராமத்திற்கும் போய்ச் சேருகிறேன்
பசி போக்கும் வழியைத் தேடுகிறேன்
கூடாரத்தைத் தானாக அமைக்கிறேன்
மூன்று கற்கள் அடுப்புக்காகவும் என்னிடத்தில் இல்லை
ஊமைக் கழுதை போல ஊமை வேதனை
மனிதனை விட அதிகமாகக் கழுதை உதவி
மற்றும் போலீஸின் அடி
குற்றவாளியினுடைய ரூபமாக நாளின் வருகை!
குற்றம் கைது குற்றம்
இக்கட்டான நிலையின் சுழற்சி மற்றும் அரசாங்கத்தின் தோல்வி
வீடில்லை கிராமம் இல்லை
கால்களின் கீழுள்ள நிலம் என்னுடையது இல்லை
என்னுடைய அம்மாவின் கருப்பையில் பிறந்தேன்
இது என்னுடைய குற்றம்
இது என்னுடைய அம்மா எப்படி?
இது என்னுடைய அப்பா எப்படி?
இது என்னுடைய தேசம் எப்படி?
நானோ பிறப்பிலிருந்தேதான் குற்றவாளி.
ஜாதி
யார் சொல்கிறது நான் மனிதனாக இருக்கிறேன் என்று?
எல்லாவற்றிற்கும் முதலாவதாக நான் ஒரு ஜாதியாக இருக்கிறேன்!
அம்மாவின் கர்ப்பத்தில் செழித்து
வாழ்வாதாரம் செய்து (பிழைத்து)
மற்றும் நான்கு மனிதர்களின் தோள்களில் மீது ஏறிப்போகையில்
ஜாதி கூடவே வாழ்கிறது ஒட்டிக் கொண்டு
தேசியத்தைப் போல!
எனக்குக் கர்வம் இருக்கிறது எனது ஜாதி மீது!
பொருள் நிறைந்த, விதவிதமானதாக அலங்கரிக்கப்பட்ட பரம்பரையின்
நான் வாரிசாக இருக்கிறேன்
நான் ஜாதி சகோதரர்களுக்கு மரியாதை கொடுத்து வாழ்வேன்
குலம் கோத்திரத்தின் கட்டளையைப் பின்பற்றுவேன்
நான் கூட்டத்திலும் இதை இழுத்துச் செல்கிறேன்
எனக்குப் பிடித்திருக்கிறது என்னுடைய ஜாதி
பாதுகாத்து வாழ்கிறது என்னுடையதாக!
யார் சொல்கிறது நான் மனிதனாக இருக்கிறேன் என்று?
இல்லை!
எல்லாவற்றிற்கும் முதலாவதாக நான் ஒரு ஜாதியாக இருக்கிறேன்!
நாம் எல்லோரும் ஜாதி சகோதரர்களாக இருக்கிறோம்!
மற்றும் இந்த தேசமும் ஒரு ஜாதியாக இருக்கிறது
இப்போது ஜாதிக்காகத் தரையை நக்கத்தான் வேண்டியிருக்கும் இல்லையா!
நமது குழந்தைகளை ஆபத்திலிருந்து தப்ப வைப்பது மீதியாக இருக்கிறது இப்போதும்!
மற்றும் நாமுமோ தோள்களின் மீது போக இருக்கிறது
எல்லாவற்றையும் விட்டு விட்டு எப்படி நடக்கும்?
வீட்டில் இரண்டு வயதானவர்களும் இருக்கிறார்கள்!
அவர்களின் மனம் எப்படித் துக்கமாகும் நல்லது?
அப்படி எங்களின் ஜாதி மிகுந்த வழிகாட்டியாக இருக்கிறது
இப்போது முன்பு போல சிறியதாகத்தான் இருக்கிறதா?
இப்போதோ எங்கள் வீட்டில் வேலைக்காரி இருக்கிறாள் மஹார் பெண்
நாங்கள் அவளுக்குக் கொடுக்கிறோம் மிச்ச மீதிகளை!
பண்டிகைகளில் மகிழ்ச்சி பரிசு கொடுக்கிறோம்
ஆபத்து கஷ்டங்களில் உதவி செய்கிறோம் அவளுக்கு!
மனிதன் மனிதனுக்கு உதவவில்லையென்றால் யார் வருவார்?
ஆயிரக்கணக்கான வருடங்களாக தீண்டாதவர்களாக இருந்தோம்
இப்போது மேலும் கொஞ்சம் பொறுமையாக இரு
அடுத்த நூறு வருடங்களில் மாறும் எல்லாம்!
எனக்கோ மறுபிறவியில் நம்பிக்கை இருக்கிறது!
அப்போது காந்திஜி தோட்டியாகி பிறப்பார்!
நாமும் ஹரிஜனின் வடிவத்தில் வரவேற்போம்
அடுத்த ஜென்மத்தில்
நீங்கள் எங்களுடைய ஜென்மமாக வாழ்வீர்கள்!
இந்த ஜென்மத்தில் நீங்கள் புகார் சொல்லாதீர்கள்
அடுத்த ஜென்மத்தில் நாங்கள் சொல்ல மாட்டோம் புகார்.
Art : Sunil Abhiman Awachar








Leave a Reply