Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

டியூக்கு பைக்

அ.பிரகாஷ் .
அ.பிரகாஷ் .
December 1, 2025
டியூக்கு பைக்

வீட்டுல சோத்தத் தின்னுட்டு அவெ ப்ரண்டு கூடப் பேச வெளில வேகமா ஓடி வந்தான். எதுக்குனா அதுக்குள்ள அவெ அம்ம கூப்டுருவானு. இவெ வீட்ட விட்டு வெளில போனது அம்மைக்குத் தெரியாது. வீட்டப் பாத்தா ஓட்டு வீடுதா. பகல் நேரத்துல வீட்டுக்குள்ள வெக்க அப்பிடி அடிக்கும். ராத்திரி தூங்கும்போதும் வெக்க சன்னம்மா அடிக்கும். இத தாங்க மாட்டாமெ இவெ அம்ம வெளில தெருவுலதா படுப்பாள். தெருவுல ராத்திரி நெறையாப் பேரு படுப்பாங்க. வீட்டுக்குள்ள கட்டுலுனு எதும் இல்ல. ஒத்த டேபிளு அதுல ரெண்டு மூணு சின்ன சட்டிக இருக்கு. காலையில இவெ குடிச்ச டீ கிளாசு அது மேலதா இருக்கு. ஒரு கேஸ் அடுப்பு இருக்கு. மூணு தண்ணிக் கொடம் இருக்கு. ஒத்த பீரோல் அந்த வீட்டுக்குள்ள தன்னந்தனியா நிக்குது. அதுக்குள்ள இவெ அம்ம துணிகக் கொஞ்சம் இருக்கு. துணிக் கொடில அஞ்சாறு துணிக கெடக்குது. இங்க இவெ அம்ம சோத்த காச்சிகிட்டு இருந்தாள். மஞ்சள் பச்சை கலர்ல சேல கட்டிருந்தாள். லைட் பச்சையில சட்டப் போட்டுருந்தாள். தல முடிய கொண்ட போட்டிருந்தாள். சோறு சட்டில வெந்தாலும் இவா மனசுக்குள்ள ஒன்னு வெந்துகிட்டுதா இருக்கு. புருசன் இல்லாதவளுக்கு என்ன நெனப்பு ஓடிக்கிட்டு இருக்கும். அது என்னைக்கு வேகாம இருக்குமோ தெரியல. ஆனா வயசான வெந்து தான ஆகணும். அது வெந்தா என்ன வேகாமப் போனா என்ன? எனக்கு பிள்ள இருக்கானு பிள்ளைக்கு வேண்டியத அமுட்டையும் எதுக்குனு ஒத்த கேள்வி கேக்காமக் கூடச் செய்வாள்.

இவா மனசுக்குள்ள இன்னொன்னு ஓடிக்கிட்டு இருக்கு. பெய பன்னண்டு முடிச்சுட்டான் அது இவளுக்கு சந்தோசம்தா. பெறகு ஒத்தப் பெய இந்தக் காலத்துல பன்னண்டு வரைக்கும் படிச்சதே பெருசு. மத்த பெயக கூடச் சேராம எங்கிட்டும் சுத்தாம பன்னண்டு பாஸ் பண்ணிட்டான். இது ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும் அவென காலேஜ்ல வேற சேக்கணும். அதுக்குத் துட்டு வேற வேணும். இப்ப பூரா காலேஜ்ல துட்டப் புடுங்கத்தா அம்புட்டுப் பேரும் இருக்கானுங்க. சும்மா எவெ படிக்க எடம் குடுப்பானு நெனச்சுக்கிட்டே இருந்துட்டு, சோத்த வச்சா. அப்ப இவெ உள்ள வந்ததும் “எம்மா ஏ ப்ரண்டு கஷ்ணா காலேஜ்ல சேரப் போறா”னு சிரிச்சுக்கிட்டே சொன்னான். இதக் கேட்டவா மகெ சிரிக்கானு இவளும் சிரிக்க வாயத் தொறந்தாள். ஆனா, மனசத் தொறக்கல. மனசத் தொறந்தாத்தானே சிரிப்பு வாயில வரும். பெறகு, இவெ என்னெலாம் சொல்லப் போறானு நெனச்சுக்கிட்டே இருந்தாள். இவா நெனச்சதுக்குக் கெணக்கா அவெனும் சொன்னான். “ஏம்மா நானு அங்கதா படிக்கப் போறே. அவெ ஏ ஸ்கூல் ப்ரண்டு. அவெ கூடவே படிச்சுகிறே”னு சோறத் திங்க தட்ட எடுத்துட்டுச் சோத்துச் சட்டிய பாத்தா சோறு இருக்கு. மூடிருந்த தட்ட எடுக்கவும் சட்டிக்குள்ளருந்த ஆவி வெளில வந்தது. வந்துட்டு எங்கிட்டோ போயிருச்சு. இவெ ஆவி என்னாகப் போதுனு தெரியல. “ஏலே கொழம்பு வைக்கலடா”னு சொன்னதும் அவெ இவளத் திரும்பிப் பாத்துட்டு தட்ட அங்னையே வைச்சுட்டு “சரி”னு சொல்லிட்டுத் திரும்ப வீட்ட விட்டு வெளில ஓடிட்டான். இனிமே இவெ ஓட்டமும் நடையுமாத்தா இருப்பான். சரியான வளத்தி. செவப்புத் தோலு. இவெ அய்ய கெணக்காட்டா. வெடலப் பெய சும்மாவே இருக்கமாட்டான். புளுப் புளுனு ஆஞ்சுகிட்டு இருப்பான். இவெ ப்ரண்டு வைச்சிருக்கிற பல்சர் பைக்க எப்பையும் இவெந்தா ஓட்டிக்கிட்டே இருப்பான். அந்த வண்டிய ஒட்டுறதுக்குனே இவெ கூடவே கெடையா கெடப்பான். இவெ ப்ரண்டு ஜிம் கிம்முக்குனு எங்கையும் போனதுகூட இல்ல. தெருவுல கிரவுண்டுல வெளாண்டுகிட்டே ஒடம்பச் சிக்குனு வைச்சிருக்கான்.

அவெ அப்பா காந்திபுரத்துல இன்ஸ்பெக்டரா இருக்காரு. அதுனால அவெ பிள்ளைய எங்னனாலும் சேப்பாரு. எம்புட்டு துட்டுக் குடுத்துனாலும் படிக்க வைப்பாரு. அந்தப் பெயந்தா இவென்ட சொல்லிருப்பா ஏலே நா கஷ்ணா காலேஜ்ல படிக்கப் போறோனு. இப்ப அவெ படிக்கிற காலேஜ்ல சேத்துவிடுனு சொல்லுறான். பெறகு அவென மாதிரி பைக்கு எடுத்துக் குடுணு வருவான். நானே மூணு வீட்டுல பாத்தரம் கழிவு என்னத்தையோ வண்டிய ஓட்டிக்கிட்டு இருக்கே இதுல எங்னக்குள்ளகூடி அந்த காலேஜ்ல இவென சேக்கணும்னு பொலம்பிக்கிட்டே கொழம்ப வைக்கிறாள். கொழம்ப வச்சுட்டாள். அத எப்பிடி வச்சு முடிக்கப் போறோளோ.

அவெ வருவா வருவானு பாத்தாள். வரல பெறகு சோறத் திங்காம வெளில வந்து திண்ணையில படுத்துட்டாள். ரொம்ப நேரம் கழிச்ச வீட்டுக்கு வந்தெவ “ஏம்மா ஏம்மா”னு கூப்டு வீட்டுக்குள்ள போனான். இவாளும் தூக்கச் சடவுல எந்திருச்சுட்டு சேல முந்தானையப் புடிச்சுகிட்டு வீட்டுக்குள்ள போனதும் அவெனுக்குச் சோறப் போட்டுக் குடுத்தாள். அத வாங்குனவெ எந்த நெனப்பு இல்லாம தின்னு முடிச்சா. ஏனா, அவெ மனசுக்குள்ள வேற நெனப்பு ஒண்ணு ஓடிகிட்டு இருக்கு. இவாளும் சோறத் தின்னுட்டு படுத்துட்டாள். ஒடம்பு படுத்திருச்சு. மனசு ஓடிக்கிட்டு இருக்க.

  அஞ்சுநா கழிச்சு பள்ளிக்கொடத்துக்குப் போயி மார்க்சீட்டு டீசிய வாங்கிட்டு வந்தான். வரும்போது இவனும் அவெ ப்ரண்டு பிரதேஸ் ஒன்னாவே வந்தானுக. இவெ வீடு தொண்டாமுத்தூர்ல இருக்கு. அவெ வீடு நரசிபுரத்துல இருக்கு. பிரதேஸ் வண்டிலதா வந்தானுக. ஹெல்மெட் ஏதும் போடாமத்தா வண்டிய ஓடிக்கிட்டு இருக்கானுக. வண்டிய ரோட்டு ஓரத்துல நிறுத்திட்டு ஒரு பேக்கிரிக்குள்ள போனானுங்க. ரெண்டு பேரும் ஒரே வளத்தியாத்தா இருக்கானுங்க. என்ன பிரதேஷ் கொஞ்சம் ஒடம்பு வைச்சிருக்கான். செல்போனும் வைச்சிருக்கான். அவெ செல்போன பிரணாப்புதா வைச்சுக்கிட்டுப் பாத்துக்கிட்டுமா வந்தான். அவெ பாத்தது ஒன்னுமில்ல டியூக்கு வண்டியப் பத்துன ரீல்ஸ்தா. பேக்கிரிக்குள்ள இவெனுக போயி ஒக்காந்ததும் ஒருத்தர் வந்து “என்ன வேணும் பா”னு கேட்டு நின்னாரு. “ரெண்டு காளான் கொண்டு வாங்க”னு பிரதேஷ் சொன்னான். அப்பையும் பிரணாப்பு செல்லையேதா பாத்துக்கிட்டு இருந்தான். பெறகு, அவெக்கூட சேந்து இவெனும் செல்லப் பாத்துக்கிட்டே இருந்தான். கொஞ்ச நேரத்துல ரெண்டு சின்னத் தட்டுல காளான கொண்டாந்து அவரு குடுத்துட்டுப் போயிட்டாரு. ரெண்டு பேரும் செல்லப் பாத்துக்கிட்டே தின்னுட்டு பிரதேசும் காளான் தின்னதுக்குப் பில்ல கட்டிட்டு வெளில வந்தான். பிரணாப்புக்கு நெனப்பு பூரா டியூக்கு வண்டி மேலதா. அந்த வண்டிய ஓட்டுற ஆர்வத்துல இந்த பல்சர் வண்டிய ஓட்ட எடுத்தான். பிரதேசும் பின்னாடி ஒக்காந்துகிட்டான். வண்டி நேரா பிரதேஷ் வீட்டு முன்னாடி நின்னுச்சு. பிரணாப்பு வண்டிய விட்டு எறங்குனதும் “பாய்டா”னு சொல்லிட்டு வீட்டுக்குப் போகாம பக்கத்துலருந்த கிரவுண்டுல போய் கிரிக்கெட் வெளாண்டா. பெறகு கிரிக்கெட் வெளாண்டுட்டு வீட்டுக்குப் போனான். ஒடம்பெல்லாம் வேர்வ. பனியன் பாதி நனஞ்சிருக்கு.

வீட்டுக்குள்ள போனதும் பனியன கழட்டி தூக்கிப் போட்டான். அது போய் ஒரு எடத்துல விழுகவும் பெய வந்துட்டானு “ஏலே ஒரு எடத்துல வைய்டா”னு அதட்டுனாள். அத இவெ கேட்ட பாடு இல்ல.

“ஏலே அந்த காலேஜ் வேணா”னு சும்மா கேட்டுப் பாக்குறதா இவா கேட்டாள். அவெ சொம்புல தண்ணிய மோந்து குடிச்சுட்டு “எதுக்கு”னு மெதுவா கேட்டான். இதா சமயமுனு “இல்லடா அந்த காலேஜ்ல துட்டு அதிகம். பேசாம தொண்டாம்புத்தூர் கவெர்மெண்டு காலேஜ்ல படியா”னு அரமத்தா கேட்டாள்.

“என்னால முடியாது”

“யாருயா நமக்குத் துட்டுத் தருவா”

“நா அங்கெதா படிப்பே”

“நா ஒருத்தி வேல செஞ்சு ஒன்ன படிக்க வைக்கணும். வீட்டுக்குச் சோறப் பாக்கணும். அந்தச் செலவும் இந்தச் செலவுனு இருக்குல.”

“முடியாது”

“கொஞ்சம் யோசிச்சுப் பாருயா”னு இவா கேக்கவும் ஏதும் சொல்லாம அவெ இருந்தான். சரி பிள்ள நம்ம சொன்னதக் கேட்டானு இவா நெனச்சுகிட்டு இருக்காள்.

அவெ ஏதுமே சொல்லாம சோறத் தின்னுட்டுப் படுத்துட்டான். படுத்தவெ நல்லா தூங்கிட்டான். பிள்ள தூங்கிருச்சு. காலையில் என்ன சொல்லப் போறானோ. நம்ம சொன்னதக் கேப்பானா மாட்டானா. கேட்டா சந்தோசம். இந்தக் காலத்துல பெத்தவங்க சொல்லுறத கேக்குற பிள்ளைகளால இருக்கு. ஏ பிள்ள இருப்பானு முழுசா நம்புறாள். அதே நெனப்போடத் தூங்கிட்டாள்.

காலையில எந்திருச்சதும் தண்ணிய குடிச்சிட்டு வெளில போனான். பெறகு பத்து மணிக்கு வந்து சோறத் தின்னுட்டுத் திரும்ப வெளில போனான்.

இவா வேலைக்குப் போயிட்டு சாய்ந்தரம் வீட்டுக்கு வரும்போது பிள்ள என்ன சொல்லப் போறா, ஏதும் சொல்லப் போறாகிற நெனப்புலையே வந்தா.

வீட்டுல வந்து பாத்தா, வீட்டுல பெயல காணும். சரி வெளாடப் போயிருப்பா. வீட்டுக்கு வந்ததும் என்ன நெனச்சிருக்கானு கேக்கணும்னு இருந்தாள். வெயிலு மறையப் போகுது. பாத்திரத்தக் கழுவிட்டு, வீட்டக் கூட்டி, துணிகள தொவச்சு, சோறு காச்சும்போது வீட்டுக்கு வந்தான். வந்ததும் பாய எடுத்து விருச்சிப் படுத்துட்டான். என்ன வந்ததும் படுத்துட்டானு “ஏலே சோறு திங்கலையா”னு கேட்டாள். “ சோறு இருக்கா”னு கேட்டான். “இரு செத்த நேரத்துல தாரே”னு சொல்லிட்டு அரிசிய அழசி அடுப்புலப் போட்டாள். “பெறகு எதுக்குக் கேட்ட”னு படுத்துக்கிட்டே கேட்டான். இவா ஏதும் சொல்லல.

சரி, காலேஜ்ல சேர்றதப் பத்தி என்ன சொல்லுறானு கேப்போம்னு அரிசியப் போட்டதும் இவெகிட்ட வந்து ஒக்காந்ததும் “ஏலே”னு கூப்டாள். சத்தத்த கேட்டதும் “ஏம்மா நாளைக்கு அந்த காலேஜ்க்கு அட்மிசன் போடப் போணும். நீயும் ஏ கூட வா”னு படுத்துகிட்டே சொன்னான்.

“எந்த காலேஜுக்கு கவெர்மெண்டு காலேஜுக்கா. சரி வாரே அப்பிடியே அட்மிசன் போட்டதும் அங்கிட்டு அந்த வீட்டுக்குப் பாத்தரம் கழுவப் போயிருவே. அது அந்தப் பக்கம் தா”னு சொன்னாள்.

“ஏம்மா கஷ்ணா காலேஜுக்குமா”னு சொல்லிட்டுப் பெறகு ஏதும் பேசல அவெ.

 சரி இவெ நெனச்சத சாதிப்பா. என்ன செய்ய கடனயாவது வாங்கி அந்த காலேஜ்ல சேக்கணும்னு இருந்தாள்.

மறுநா காலையில ரெண்டு பேரும் காலேஜுக்குப் போனாங்க. காலேஜ்ல பாத்தினா காரும் பைக்குமா வந்துட்டுப் போகுதுங்க. காலேஜுக்கு வெளில நின்ன இவெ, இவெ அம்ம அதப் பாத்துகிட்டுதா இருக்காங்க. இவா வயசு பொம்பளைக சீன்ஜ் பேண்டு, பனியனு போட்டுருக்காளுக. தலமுடி முடிச்சில்லாம இருக்கு. கையில ஒரு பேக்கு புடிச்சுகிட்டு இருக்காங்க. கால்ல ஷூ போட்டுருந்தாங்க. இவா கால்ல சேருப்புதா இருக்கு. காலேஜப் பாத்தீங்கனா அப்பிடி கட்டி வச்சிருக்கானுக. காலேஜ் கிரவுண்டு பாக்க அழகா இருக்கு. கட்டடங்க பாக்க அப்பிடி இருக்கு. இவா போனதும் ஒரு சோபால ஒக்காந்தாள். அதுவே இவளுக்கு சந்தோசம். அங்க இங்க கடன வாங்கி அறுவதாயிரத்த கொண்டுகிட்டு வந்திருக்க. இவெ அங்க இங்க ஓடி ஓடி B.SC-AI படிக்க அட்மிசன் வாங்கிட்டான். ஒரு செமஸ்டருக்கு அம்பத்தி அஞ்சாயிரம். பீசு என்னவோ இருவத்தி அஞ்சாயிரம்தா. ஆனா, டொனேசன் மட்டும் வருசத்துக்கு இந்த சப்ஜெக்ட்டுக்கு மட்டும். மத்த சப்ஜெக்ட்டுக்குத் தனி. அது வேற கத.

எப்பிடியோ ஒரு வழியா அவென காலேஜ்ல சேத்துவிட்டோம்னு நிம்மதில இருந்தாள்.

இருவது நாளும் இவெ காலேஜுக்கு. பஸ்சுலதா வந்தான். அதப் பாத்த இவெ ப்ரண்டுக சிரிக்கவும் ஹாலைக்கவுமா இருந்தானுக. காலேஜ்ல பெயக பிள்ளைக ஒன்னா பைக்குல ஒக்காந்துகிட்டு வெளில ஊர் சுத்துறதப் பாத்து இவெனுக்கு ஆச வந்துச்சு. கூடவே காதலும் வந்திருச்சு.

இவென ஒருத்தி பத்து நாளா பாத்துகிட்டே இருந்திருக்காள். பேசக்கூடச் செய்யல. ஆனா பாத்துகிட்டே இருந்திருக்காள். பெறகு அடுத்தநா மத்தியானம் இவெ கேண்டினுக்குத் தனியா சாப்பிடப் போகும்போது “பிரணாப்பு”னு இவா கூப்டாள். இவெ காதுல விழுந்திருக்கு. அவளத் திரும்பிப் பாத்ததும் அவளத் தூக்கி இவெ மனசுக்குள்ள போட்டுகிட்டான். “என்ன”னு கேட்டான். கேட்டு அவளையே பாத்துகிட்டு இருக்கான். ஏன்னா இவெ முன்னாடி நிக்கிறது ஏஞ்சலா இல்ல வேற ஒன்னூனு. எதுக்குனா வெள்ளக் கலருல ட்ரஸ், வெள்ளக் கலர்ல ஷு. வெள்ளக் கலர்ல வாட்சிக் கட்டிருக்கா. அவளோட உருவமே வெள்ளக் கலர்ல இருக்கு. மத்தியான வெயில்ல ஒரு மேகம் தன்னந்தனியா இருக்கும்போது வெள்ளேர்னு இருக்கும் அதுக் கெணக்காட்டா நிக்குறாள்.

“சாப்டப் போறையா”னு நின்னுகிட்டே கேட்டாள்.

“ஆமா”னு சொல்லிட்டு நடந்தான்.

“நானு வாரே”னு பின்னாடியே வந்தாள்.

ரெண்டு பேரும் கேண்டின்ல ஒக்காந்தாங்க. சாப்பாடு வாங்க இவெ போகும்போது “சாப்பாடு என்ட இருக்கு. வா சாப்டலாம்”னு கேட்டாள். அவெனும் ஒன்னு சொல்லல. ரெண்டு பேரும் ஒரு சோறத் தின்னாங்க. ஒன்னா காலேஜ்ல சுத்துனாங்க.

பத்து நாளைக்குப் பெறகு வண்டி வாங்கனுமம்னு நெனப்புல இருந்தான். அதுவும் ட்யூக்கு வண்டியத்தா வாங்கணும்னு இருந்தான். இவெ அம்மைட்ட சொல்லிப் பாத்தான். முடியவே முடியாதுனா. எனக்கு வேணும்னு சொல்லி அழுதுப் பொழம்பி, சோறத் திங்காம வீட்டுக்கு வராம இருந்து சாதிச்சுட்டான்.

வட்டிக்கு ஒரு லட்சம் கட்டி செவப்பு கலர்ல ட்யூக்கு வண்டிய வாங்கிக் குடுத்தாள். எப்பிடியாச்சும் இத வச்சுகிட்டு காலேஜ் போனாப் போதும்னு. அந்தக் கடன அடைக்க ரெண்டு மூணு வீட்டுல பாத்தரம் கழுவுனவா ராத்திரிக்கு ஹோட்டல்ல பாத்தரம் கழுவுற வேலைக்குப் போனாள். அதுல வாரத்துக்கு நாலாயிரம் கெடச்சது. அத வாங்குனதும் வண்டிக் கடனக் குடுத்திருவாள்.

ஒருநா மத்தியானம் அந்தப் பிள்ளையக் கூட்டிக்கிட்டு ஊர் சுத்த வண்டிய எடுத்துட்டு வெளில வந்தான். அப்பிடி வெளிய வரும்போது காலேஜ்ல எந்த எடத்துலலா மத்த பெயக வண்டில போனதப் பாத்தானோ அந்த எடத்துல இன்னொரு பெய ஒக்காந்திருந்து இவுங்களப் பாத்தான். இவனுக்கு கால்ல செருப்பு இருக்கு. சாதாரணச் சட்டை போட்டிருந்தான். பேன்டும் அதேதான். தலை முடியில என்னைய தேச்சு வலிச்சிருந்தான்.

மத்தியானத்துலருந்து சாய்ந்தரம் முழுக்கா ஊரச் சுத்திட்டு அவள அவுங்க வீட்டுக்கிட்ட எறக்கிவிட்டு பிரனேஷ் பாக்க வடவள்ளிக்குப் போனான். பிரனேஷ் வடவள்ளில பஸ்டாப்புல ஒக்காந்திருந்தான். இவெ வந்ததும் ரெண்டு பேரும் ஒரு ஹோட்டல்ல போயி புரோட்டா தின்னானுங்க. பெறகு ஒரு பெட்டிக் கடையில நின்னு சிகரெட்டு குடிச்சானுங்க. பெறகு ரொம்ப நேரமா இவெ ஊரச் சுத்துனது, வண்டியப் பத்தி, காதலப் பத்திப் பேசிக்கிட்ட இருந்தானுக. பெறகு பத்து மணியாகவும் பிரணாப்பு வண்டிய எடுத்துட்டு வந்துட்டான். வந்தவெ டாஸ்மாக் கட இருக்கிற கட வழியா வேகமா ஓட்டிக்கிட்டு வந்தான். தெரு வெளக்கு எறிஞ்சுகிட்டுதா இருக்கு. வண்டிக வந்துகிட்டுதா இருக்கு. இவெ எந்த வேகத்தால வந்தானோ அதே வேகத்துலதா காருகல கடந்து ஓட்டிக்கிட்டு வரும்போது ஒரு பைக்கார டாஸ்மாக் கடையிலருந்து அவெ வண்டிய இங்கிட்டுத் திரும்பும்போது வண்டி வெளிச்சம் பிரணாப்பு மொகத்துல விழுகவும் வண்டிய எங்கிட்டு திரும்பனும்னு தெரியாம அதே வேகத்துல தெருவுல நின்னுகிட்டுருந்த போஸ்ட் கம்பில போயி மோதுனா வண்டிக்கு ஒன்னும் இல்ல. இவெனுக்கு நெஞ்சுல அடி. கால்ல சரியான அடி. நடக்க முடியல. தலையிலையும் அடி விழுந்திருக்கு. பெய விழுந்து எந்திரிக்கவே இல்ல. பெறகு ஆம்புலன்ஸ் வரவும் அவெனத் தூக்கிவிடு பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனாங்க. இந்த சங்கதி ராத்திரி இவெ அம்மைக்குத் தெரியவும் அழுதுகிட்டே ஆஸ்பத்திரிக்கு ஓடுனாள். இவளுக்கு என்ன சங்கதி வந்திருக்குனா ஒங்க மகெ ஆஸ்பத்திரில இருக்கான். உயிருக்கு ஒன்னு இல்லனு.

பெறகு பத்து பதினஞ்சு நாளா ஆஸ்பத்திரில வச்சுப் பாத்திருக்காங்க. ஒடம்பு முன்னேறுனாதா தெரியல. டாக்டரே “வீட்டுக்கு எடுத்துட்டுப் போங்க”னு சொல்லிட்டாரு. அழுது அழுது ஒடம்புல இருந்த ரத்தம் கண்ணீரா வந்ததுதா மிச்சம்.

இவா மகெனப் பாத்து ஒரே அழுக. சோறு தண்ணி உள்ள இறங்கல. மனசு பூரா மகெ இருக்கான். இவன விட்டா எனக்கு யாரும் இல்ல. புருசன் போனதுக்குப் பெறகு பிள்ளையும் போச்சே. தனியாத்தான் இந்த வாழ்க்கை ஓட்டணுமா. இல்ல இவெ கூடவே நானும் செத்துப் போகவா. மனசுல வர்ற அழுத்தத்த கையில கொண்டு வந்து மகெ காலப் புடிச்சுகிட்டு அமுக்குறாள். மகனுக்கு ஒத்த சொரணை இல்ல.

பிள்ள அடிபட்டு கெடக்கானு வீட்டுக்கு வந்திருக்கான்னு சொந்தக்காரங்க வந்து பாத்தாங்க. கையில இருந்த துட்ட குடத்தாங்க. ரெண்டு வார்த்த சொன்னாங்க. யாரும் நீ எங்க வீட்டுக்கு வந்து இருன்னு சொல்லல. இந்தக் காலத்துல அது யாரு சொல்லுவா. கையில வாங்கின துட்ட எல்லாம் வீட்டுக்குள்ள எறிஞ்சிட்டாள். துட்ட வச்சி இந்த மாளிகையை நா கட்டவா போறேன். ஏ பிள்ளை இப்படிக் குத்துயிரும் கொலயுருமா கெடக்கான். அப்படி நெனச்சு நெனச்சு மனசு வெடிக்கிற அளவுக்கு அழுகிறாள்.

தரையில படுத்துக் கெடக்கான். கண்ணு தெரந்திருக்கு. வீட்டு மொகடு தெரிகிறது. நெனப்பு ஒண்ணும் இல்ல. வலியும் வேதனையும் மனசுக்குள்ளேயே இருக்கு. தலவலி உசுரு போகிற அளவுக்கு இருக்கு. வெளியில சொல்ல முடியல. தண்ணி சோற உள்ள இழுக்க முடியல. மனசு வெறுமனே இருக்கு. கண்ண மூடணும் போல இருக்கு.

இப்படியே வீட்டுல நாலு அஞ்சுனா இருந்தான். பெறகு அம்புட்டுதா.


Art : Russell Murchie

அ.பிரகாஷ் .
அ.பிரகாஷ் .
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (4)
  • கதை (10)
  • கவிதை (14)
  • கவிதை (80)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (4)
  • கதை (10)
  • கவிதை (14)
  • கவிதை (80)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top