நான் கும்பகோணம் Fine Art கல்லூரியில் visual communication design துறையில் பயின்ற மாணவன். தற்பொழுது 2d animator ஆகப் பணிபுரிந்து வருகிறேன். சிந்தனையைத் துண்டும் ஓவியங்களைப் பார்ப்பதும் படைப்பதும் மிகவும் பிடித்தவையாகும். எனக்கு சிறுவயதில் இருந்தே ஓவியங்கள் மீது அளவில்லா ஆர்வம், அந்த ஆர்வத்தில் நான் வரைந்த ஓவியங்களில் சிந்தனையைப் புகுத்துவது எப்படி என்று நான் அறிந்து கொள்ள உதவியதில் பெரும் பங்கு எனது மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் ஐயா பூண்டி ஜெயராஜ் அவர்களையே சேரும். பள்ளிக்காலத்தில் இருந்தே நான் கவிதை, கதைப் புத்தகங்களுக்கு அட்டை மற்றும் கருத்து ஓவியங்கள் வரைந்து உள்ளேன். தமிழக முதல்வரிடம் பரிசு பெற்றுள்ளேன். மேலும் எழுத்தாளர்களிடம் விருதுகளும் பாராட்டுகளும் பெற்றுள்ளேன். எனது வாழ்நாள் லட்சியம் இந்தியாவில் animation film industry-யை உருவாக்க வேண்டும், அதை நோக்கி இப்பொழுது ஓடிக்கொண்டுள்ளேன்.




















Leave a Reply