Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

பூவிதழ் உமேஷ்
பூவிதழ் உமேஷ்
September 1, 2025
பூவிதழ் உமேஷ் கவிதைகள்

தலைமுறைகள்

கி.மு 30000
அம்புக் குறியை வரைந்து
அதன் மீது புள்ளி வைத்து
எனது படம் என்று திளைக்கும் வேட்டைக் குடி நான்
யார் கை படாமலும் கட்டப்பட்ட என் வீடு
சில பாறைகளால் ஆனது.

கி.மு 1500
பூமி என்றாலும் வானம் என்றாலும்
தாகம் தணிக்கிற எதையும்
நீர் என்று பெயரிடுகிற குடி நான்
என்னிடம் வந்த ஒரு சூனியக்காரி
வார்த்தைகளை விஷயங்களுடன்
உண்மையில் இணைப்பது எது என்று கேட்டாள்
பயம் என்று சொன்னேன்
பாதி சமாதானம் அடைந்தவளாகச் சென்றாள்.

கி.மு 600
குடிக்கும் போது
தண்ணீர் சிந்திவிட்டால்
எனது தோளின் மீது
ஒன்றிரண்டு இலைகளைத் தூவிக் கொள்ளும்
உழுகுடி நான்
நேற்றிரவு நிலவுக்கு அடியில்
என் விதைத் தானியங்களோடு
பேசிக் கொண்டிருந்தேன்.
காணாமல் போன
எருமைக் கன்றுக்காக
தொம்பையில் இருந்த பனி வரகு மிகவும் வருந்தியது.

கி.பி 1800
முதுமையில் நெற்றிக் கோடு விழுவது போல
வரலாற்றில் கோடு விழுந்து விடுகிறது
காலத்தில் அந்தக் கோடு பிளவானது
பிணம் எரிக்கும் வெளிச்சத்தில் தெரியும்
கிழக்கில் எனது வீடு உள்ளது
இங்கு மான்கொம்புக்கு நிகராக மாட்டுக் கொம்பு இருக்கிறது.

கி.பி 1975
புத்தகங்களைக் கண்ணில் ஒத்திக்கொண்டு கற்கும்
முதல் குடி நான்
நடந்ததால் தொட்டதால் பார்த்ததால் தீட்டெனப்
பெற்ற சவுக்கடித் தழும்புகளே
வரலாறெனப் படிக்கிறேன்
ஒதுக்கமான தெருவில்
என் வீட்டில் ஒற்றைக் காகிதமும் புத்தகம்தான்

கி.பி 2002
தாமஸ் மன்றோ தந்த
வெங்கலக் கிண்ணியில் நெருப்பைக் கொட்டி
அண்ணன் தான் சட்டைச் சுருக்கம் போகத் தேய்த்துத் தந்தான்
அப்பாதான் எனது ஷூவைப் பளபளக்கச் செய்தார்
அலுவலகத்தில் என் முகத்தைப் பார்த்தால்
உடனே பேச்சை மாற்றுகிறார்கள்
கூடியவர்கள் களைந்து விடுகிறார்கள்

கி.பி 2020
பெரிய வீட்டுப் பெண்
ரொம்ப ஆசைப்பட்டாள்
என் குரலும் பாட்டும் மட்டும் திருமணத்திற்குப் போதாது என்றேன்
செங்கல் கருங்கல் ஆனது போல காத்திருந்தாள்
கேம்பிரிட்ஜ் வளாகத்தில் எங்கள் வீட்டுத் தொட்டிச் செடிக்குத்
தினமும் தண்ணீர் ஊற்றுகிறாள்
அவளது பெற்றோரை விமானம் ஏற்றிவிட்டுத் திரும்புகிறேன்

கி.பி 2025
ஒரு கையில் புத்தகத்தோடு
சுட்டு விரல் வானத்தைக் தொடும் சிலை
விஜயவாடாவில் உயர்ந்து நிற்கிறது
“இளம் காதலர்களை வெட்டிப் படுகொலை” என்று
தொலைக்காட்சியில் செய்தி ஓடுகிறது.


நவலையின் கோடைக்காலம்

என் வாழ்விலிருந்து எருமைகளையும்
கோழிகளையும் கழித்து விட்டால்
மணலில் தன்னைத் தேய்த்துக் கொண்டிருக்கும்
ஒரு கற்றாழை போன்று இருக்கும் என் உடல்
அடர்த்தியான சேறு போன்ற
என் இரத்தத்தில்
ஒரு குட்டையான எருமை சிக்கிக் கொண்டுள்ளது
அது முனகிக் கொண்டிருக்கிறது
புரண்டு உருள
கலங்கிய எட்டிக் குட்டை ஏரியைத் தேடும்
அதன் துன்பத்தைப் பார்த்து வருந்துகிறேன்.

என் நெற்றியில்
சிறகு கொண்ட ஒரு சேவல் வாழ்கிறது
புருவங்களுக்கு இடையில்
நாள் முழுவதும் கொத்துகிறது
அதற்கு எப்படி இரை போடுவது என்றும் தெரியவில்லை
அதனோடு எப்படிச் சண்டை போடுவது என்றும் தெரியவில்லை
இந்த வெட்டாப்பில்
எருமையும் சேவலும் அடிக்கடி பார்த்துக் கொள்கின்றன
எனக்கு டிராக்டரோ
பண்ணையோ வேண்டாம்
எவ்வளவு இருளாக இருந்தாலும்
பதற்றமடையாத விளக்கு போல இருப்பதற்கு
எனக்கு
எருமையைப் பிடித்துக் கட்ட ஒரு கயிறும்
சேவலை ஓட்டி அடைக்க ஒரு கூடையும் போதும்.


உயிர் கொளுத்திகள்

மகாபாரதத்தில் யாரும்
புகைபிடித்ததாகத் தெரியவில்லை
எதிரே நிற்கும் யாசகனிடம் பேசுவதற்கு முன்பு
கர்ணன் தனது காதுக்குப் பின்னால் இருந்து
ஒரு சுருட்டை எடுத்துப்
பற்றவைப்பதைக் கற்பனை செய்கிறேன்
அர்ஜுனன் விரலிடுக்கில் உள்ள
சுருட்டுச் சாம்பலைத் தட்டியபடி
புகை வளையங்கள் ஊதுவதைக்
கற்பனை செய்கிறேன்
நான் இயல்புக்குத் திரும்பியதும்
மகாபாரத கதாபாத்திரப் பெயர்களில் உள்ளவர்கள்
தொலைக்காட்சியிலும் பொதுவிலும்
நாள் முழுவதும்
புகைக்க நெருப்பெட்டி தேடுவதைப் பார்க்கிறேன்
புகைக்கக் கொளுத்துவது
அவ்வளவு நல்ல செயலில்லை என்று
வியாசர் மகாபாரதத்தில் தடைவிதித்தார்
நான் திருட்டு சிகரெட் கூடப் புகைத்ததில்லை
புகைக்க விரும்பியதும் இல்லை
ஆனால் அதை உறுதியாகத் தொடர முடியவில்லை
காதலித்ததால் மகளையே கொளுத்திய
வெறியர்கள் தெருவில் திரியும் போது
அவர்களை எரிக்க முடியாத இயலாமையில்
நாலைந்து சுருட்டுகளை ஒன்றாகப் பற்ற வைத்து ஊதுகிறேன்.


குரங்கு வாலில் எரியும் தீயின் நிறம்

எனக்குப் பேசத் தெரியாது
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
அச்சிடப்பட்ட ஓலைக் காகிதத்தால் செய்யப்பட்டது எனது வாய்
அதில் இருக்கும் சொற்களைப் படிக்கிறேன் அல்லது
இதயப் பூர்வமாக ஒப்பிக்கிறேன்
ஒரு முப்பரிமாண இலையான
என் இதயத்தின் நிறமியை
நீங்கள் அன்பு என்று புரிந்து கொள்வதால்
ஒப்பிக்கும் எனது செயல்
உங்களுக்குப் பேசுவதாகத் தோன்றுகிறது
வாலில் தீயுள்ள குரங்கு மனிதர்கள்
உதட்டை அலங்காரம் செய்வதாகச் சொல்லி
காவி நிறத்தைக்
கட்டாயப்படுத்தி வாயில் பூச முயல்கிறார்கள்
மறைமுகமாக
அச்சிட்ட பழைய ஓலைக் காகிதத்தை அழிக்க வருகிறார்கள்
நான் அதைப் படிப்பதைக் கெடுக்க வருகிறார்கள்
கமுக்கமாக வரலாற்றை அழிக்கும்
அது யாரும் விரும்பாத காவி நிற உதட்டுச்சாயம்
அது முதலில் நான் பழகிய சொற்களை
எனது பழங்காலச் சொற்களை அழிக்கும்
குரலை அழிக்கும் இறுதியில்
தொண்டையை இறுக்கும்.


Art : saatchiart.com

பூவிதழ் உமேஷ்
பூவிதழ் உமேஷ்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நவலை என்னும் சிற்றூரில் பிறந்த இவர் அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். சொற்களால் பொம்மை செய்பவன் என்று கூறிக்கொள்ளும் இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதை எழுதுகிறார், தற்போது மொழிப்பெயர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

வெயில் ஒளிந்துகொள்ளும் அழகி, சதுரமான மூக்கு, துரிஞ்சி, தண்ணீரின் சிரிப்பு, மற்ற விலங்குகள் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் எழுத்தெனப்படுவது என்ற புதிய நோக்கில் இலக்கண நூலும் “a piece of moonshine at dinner” (Writersgram publication) என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளன.

சிறார் இலக்கியத்தில் தங்கக் குருவி, காடனும் வேடனும், ஊசி எலியும் ஆணி எலியும், லிமொ ஆகிய நான்கு நாவல்கள் உட்பட பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

Share :

4 responses to “பூவிதழ் உமேஷ் கவிதைகள்”

  1. கார்த்திக் திலகன்
    கார்த்திக் திலகன்
    September 2, 2025

    இரண்டாவது கவிதை பிடிச்சிருக்கு சகா

    Reply
  2. Selvam kumar
    September 2, 2025

    அருமை அருமை,,,

    Reply
  3. பாரத் தமிழ்
    பாரத் தமிழ்
    September 3, 2025

    கவிதைகள் மிக அருமை.

    Reply
  4. செந்தில் ராஜ்
    September 3, 2025

    பொறுக்கு தட்டி ஆரிய ரணங்களை மீண்டும் குத்தி கிளறி ரணமாக்கும் வரிகள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • நீதிமணி கதைகள்

    நீதிமணி கதைகள்

    May 1, 2026
  • கே. கணேஷ்ராம் கவிதைகள்

    கே. கணேஷ்ராம் கவிதைகள்

    May 1, 2026
  • முட்டுக்கட்டை

    முட்டுக்கட்டை

    May 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    May 1, 2026
  • வன்புணர்வு எனும் பேரின்பம்

    வன்புணர்வு எனும் பேரின்பம்

    May 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (19)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (106)
  • கட்டுரை (5)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (84)
  • கவிதை (19)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (15)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (47)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (46)
  • வாழ்வியல் (2)

Archives

  • May 2026 (19)
  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • நீதிமணி கதைகள்

    நீதிமணி கதைகள்

    May 1, 2026
  • கே. கணேஷ்ராம் கவிதைகள்

    கே. கணேஷ்ராம் கவிதைகள்

    May 1, 2026
  • முட்டுக்கட்டை

    முட்டுக்கட்டை

    May 1, 2026

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (19)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (106)
  • கட்டுரை (5)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (84)
  • கவிதை (19)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (15)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (47)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (46)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top