என் பெயர் இரா.புவிநதி, மதுரையில் வசித்து வருகிறேன். சிறுவயதில் இருந்தே எனக்கு ஓவியம் வரையப் பிடிக்கும். விடுமுறைகளில் நான் ‘ஒரு மாத ஓவிய வகுப்பு’ சென்று வரையப் பழகுவதுண்டு. அடுத்த கட்டமாக 6-ஆம் வகுப்புப் படிக்கும் போது முதன்முதலில் பார்வதி அத்தையின் ‘ஆடலி ஓவிய வகுப்பு ‘ சென்றேன். படிப்படியாக ஓவியம் வரைய அத்தை சொல்லிக் கொடுத்தார்.
ஒன்றரை ஆண்டு பயிற்சிக்குப் பிறகு முதன்முதலில் தூரிகையைப் பிடித்து வரையச் சொல்லிக் கொடுத்தார். அதுவே என் ஓவிய ஆர்வத்தைத் தூண்ட ஆரம்பித்தது. மிகவும் பிரியப்பட்டு வரையத் தொடங்கினேன்.
கொரோனா காலக்கட்டத்தில் ஓவியப் பயிற்சி தடைபட்டது. ஊர் விட்டு ஊர் வந்ததால் அத்தையிடம் நேரடி வகுப்பு செல்ல முடியாமல் இணைய வகுப்புகளில் பயணத்தைத் தொடர்ந்தேன். 10, 11 ஆம் வகுப்பு நான் NIOS-இல் (National Institute of Open Schooling) வீட்டில் இருந்தே படித்ததால், ஓவியத்தில் ஈடுபாடு அதிகமாகத் தொடங்கியது. ஓவியத்தில் மிக நன்றாகத் தேர்ச்சி பெற்றேன். தாள் ஓவியங்கள், களிமண் சிலைகள், நேர்காணல் ஓவியங்கள், ஓலைச்சுவடி ஓவியங்கள், சுவர் ஓவியங்கள், கொட்டாங்குச்சி கலைகள், ஆபரணங்கள் செய்தல், மர ஓவியங்கள், இயற்கை வண்ண ஓவியங்கள் என மேலும் பலவற்றைக் கற்றேன். இதில் இயற்கை வண்ண ஓவியத்தின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. அதில் மேலும் பயணித்துத் தாவரங்கள், பூக்களிலிருந்து இயற்கைச் சாயங்கள் தயாரித்தல், சுவரில் இயற்கை வண்ண ஓவியம் வரைதல் போன்ற பல முயற்சிகளைச் செய்தேன்.
ஓவியத்தின் மீதிருந்த ஆர்வமே மரபு கட்டடக் கலையின் மீதும் ஆர்வம் வரத் தொடங்கியது. எங்கள் தோட்டத்தில் கட்டிய சுண்ணாம்புக் கட்டுமானத்தில் ஈடுபட்டு அதிலும் கற்றுக் கொண்டேன். தற்போது 12-ஆம் வகுப்பு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறேன். எனது அடுத்த கட்ட கனவாக ஓவியம் சார்ந்த பயணமாக அமைய விருப்பம் உள்ளது. எனது ஓவியக் கலையின் ஆர்வத்தைத் தூண்டிய பார்வதி அத்தைக்கும், அதை மேலும் சிறப்படையச் செய்த இறைக்கும் உளமார்ந்த நன்றி. இதில் மேலும் பயணிக்க வழிவகுத்துத் தருமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இயற்கைப் பொருள்களைக் கொண்டு மரப்பலகையில் உருவாக்கிய நதிவனம்.
(கோலமாவு, சிப்பி, சோவி, சங்கு, கற்கள், கொட்டாங்குச்சி, பனையோலை, குன்றிமணி முத்து)

தன் அழகை வியந்து பார்க்கும் பறவை! (Watercolour Painting)

வர்ண மலர்களில் பூத்திருக்கும் வண்ணத்துப்பூச்சி..( சுவர் ஓவியம்)

துள்ளும் முயலின் துல்லிய ஓவியம்..( pencil Drawing)

அழகும், இசையும். ஒன்றிய தமிழ் திருமகள்..( Colour pencil Painting)

அரிதான ஓலைச் சுவடி ஓவியத்தில் மீட்டுயிர் பெற்ற அன்னப்பறவை!!

இனிய குரலில் உறவாடும் சிட்டுக் குருவிகள்…(இயற்கை. வண்ண ஓவியம்)

வியக்கத்தக்க தமிழர்கள் சிற்பக்கலை!!! ( Gel Pen Drawing )

சுவர் ஓவியத்தில் வார்லி ஆர்ட்

மரபு வேளாண்மை (விதைப்பு முதல் அறுவடை வரை)

விருப்பம் நிறைவேறக் காத்திருக்கும் அடைக் கோழி..! (கொட்டாங்குச்சி சிற்பம்)

துள்ளிக் குதிக்கும் மீன் இயற்கை வண்ணத்தில்..!

களிமண் பூந்தொட்டியில் பூத்திருக்கும் பழுப்பு ரோஜா..
ஓவியர் பார்வதி பாலா திருநெல்வேலி மாவட்டம் முனஞ்சிப்பட்டியைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே ஓவியங்கள் வரைதல், களிமண் சிற்பங்கள் செய்தல் ஆகியவற்றில் நாட்டம் கொண்டுள்ளார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுவர்களுக்கு ஓவியப் பயிற்சி அளித்து வரும் இவர், இதன் வாயிலாகக் கலைகளில் தன்னைப் புதுப்பித்துக் கொள்பவராகவும் திகழ்கிறார். இவற்றில் குறிப்பிடத்தகுந்தது ரேகை ஓவியம்.
TNMAI அறக்கட்டளையைச் சேர்ந்த மாதவன் பிள்ளை அவர்களின் முன்னெடுப்பில், 2022 மே மாதம் One Two Art Gallery இல் இயற்கை வண்ண ஓவியங்கள், தேங்காய் ஓடு, விதைகள், சிப்பிகளால் செய்யப்பட்ட அணிகலன்களைக் காட்சிப்படுத்தி உள்ளார்.
ம.செந்தமிழனின் ‘ஊழி’ உட்பட செம்மைப் பதிப்பக நூல்களுக்கு முகப்பு, உள் ஓவியங்கள் வரைந்துள்ளார். 2016 இல் தனது ஓவிய வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து ஓவியக் கண்காட்சி நடத்தியுள்ளார். வானகம், வள்ளுவம், செம்மை, பொதிகைச் சோலை போன்ற அமைப்புகளில் சிறார்களுக்கு ஓவியம் மற்றும் இயற்கை வண்ணப் பயிற்சி அளித்துள்ளார். வழிபாட்டு ஓவியங்கள், கருத்து ஓவியங்கள், ஆடை ஓவியங்கள், திருமணப் பதாகை ஓவியங்கள், புடைப்புச் சிற்பப் பலகைகள் செய்தல், விதைகள் – களிமண் – தேங்காய் ஓடு போன்ற பொருட்களைக் கொண்டு அணிகலன்கள் செய்தல், சுவர் ஓவியங்கள், லோகோ வடிவமைப்பு ஆகிய வெவ்வேறு கலைவடிவங்களில் தொடர்ந்து செயல்பங்காற்றி வருபவர் ஓவியர் பார்வதி பாலா.








Leave a Reply