Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

ஆன் செக்ஸ்டன் கவிதைகள் – 06

சமயவேல் .
சமயவேல் .
March 1, 2026
ஆன் செக்ஸ்டன் கவிதைகள் – 06

தமிழில்: சமயவேல்


45 மெர்சி தெரு

என் கனவில்,
என் எலும்பின் மொத்த
மஜ்ஜைக்குள் துளைத்துக் கொண்டு,
என் அசல் கனவில்,
நான் பீக்கன் ஹில்லில்
ஒரு தெருவின் பெயர்ப் பலகையைத் தேடி
மேலும் கீழும் நடக்கிறேன் –
அதன் பெயர் மெர்சி தெரு.
அங்கே இல்லை.

நான் பாஸ்டனில் விரிகுடாவின் பின் பகுதியில் தேடுகிறேன்.
அங்கே இல்லை.
அங்கேயும் இல்லை.
இருந்தும், அந்த எண் எனக்குத் தெரியும்.
45 மெர்சி தெரு.
அந்த முகப்பு அறையின்
வண்ணக்கண்ணாடி ஜன்னல் எனக்குத் தெரியும்,
வீட்டின் மூன்று மாடிகள்
அதன் மரப்பலகை பதித்த தளங்கள்,
அந்த மரச்சாமான்கள்,
அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி,
வேலைக்காரர்கள்
எனக்குத் தெரியும்
ஸ்போட் பாத்திரங்கள் வைக்கப்பட்ட அலமாரிகள்,
பனிக்கட்டிப் படகு, வெள்ளிக் கட்டிகள்,
அங்கு வெண்ணெய் சிறிய சதுரங்களாக
விசித்திரமான ராட்சதப் பற்களைப் போல
பெரிய மகோகனி மேஜை மீது உட்கார்ந்திருக்கிறது.
அது எனக்கு நன்றாகத் தெரியும்.
அங்கே இல்லை.

நீ எங்கே போனாய்?
45 மெர்சி தெரு,
கொள்ளுப்பாட்டியுடன்
அவள் இறுக்கமான திமிங்கில
எலும்பு மார்புக்கச்சையுடன் மண்டியிட்டு,
மென்மையாகவும் அதே சமயம் தீவிரமாகவும்
பிரார்த்தனை செய்கிறாள்
வாஷ் பேசினுக்குப் போகிறாள்,
காலை ஐந்து மணிக்கு,
மதியத்தில்
விக் அணிந்து தன் ஆடும் நாற்காலியில் தூங்குகிறாள்,
தாத்தா பண்டகசாலையில் சிறிய பகல் தூக்கத்தில் இருக்கிறார்,
பாட்டி, மணியை அடிக்கிறாள்
கீழே இருக்கும் வேலைக்காரிக்காக,
நானா அம்மாவைத் தாலாட்டுகிறார்
அவளது நெற்றியில் சுருளும் முடியை மூட
ஒரு பெரிய பூவை வைத்து,
அவள் நல்லவளாக இருந்தபோது, அவள்…
அவள் எங்கே பிறந்தாளோ அங்கே
அடுத்த தலைமுறையில்
மூன்றாவதாக அவள் பெற்றெடுப்பாள்
என்னை,
அந்நியனின் விதை
பயங்கரம் எனப்படும் பூவாகப் பூக்கிறது

நானொரு மஞ்சள் ஆடையை அணிந்து நடக்கிறேன்,
ஒரு வெள்ளைக் கைப்பை,
அதில் திணிக்கப்பட்டுள்ளது குறிப்பேடு,
சிகரெட்டுகள்,
போதுமான மாத்திரைகள், என் வாலெட், என் சாவிகள்
நான் இருப்பது இருபத்தெட்டிலா அல்லது நாற்பத்தைந்தா?
நான் நடக்கிறேன். நடக்கிறேன்.
தெருவின் அடையாளப் பலகைகளை நெருங்கி
தீக்குச்சியைப் பற்றவைக்கிறேன்
ஏனென்றால் இருட்டாக இருக்கிறது,
அடர் தோல் மரண இருட்டு,
என் பச்சை நிற ஃபோர்டு காரைத் தொலைத்துவிட்டேன்,
புறநகரில் என் வீடு,
இரண்டு குட்டிக் குழந்தைகள்
தேனீ மகரந்தத்தை உறிஞ்சுவது போல என் உட்புறம்
உறிஞ்சப்பட்டுவிட்டது
மேலும் ஒரு கணவர்
அவர் கண்களைத் துடைத்துக் கொண்டார்
என் அகத்தை முழுவதுமாகப் பார்க்காமலிருக்க.
நான் நடக்கிறேன், தேடுகிறேன்
இது கனவில்லை
வெறுமனே எண்ணை பிசுபிசுக்கும் என் வாழ்க்கை
அங்கே மனிதர்கள் நடிக நடிகைகள்
ஒரு வாழ்நாள் முழுமைக்கும்
கண்டுபிடிக்க முடியாதது தெரு.

திரைகளை இழுத்துவிடுங்கள்
எனக்குக் கவலையில்லை!
கதவைப் பூட்டுங்கள், கருணை காட்டுங்கள்,
எண்ணை அழித்துவிடுங்கள்,
தெருப் பெயரைக் கிழித்துப் போடுங்கள்,
அதனால் என்ன ஆகப் போகிறது,
அதனால் இந்த சராசரிக்கு என்ன ஆகப் போகிறது?
கடந்த காலத்தைச் சொந்தமாக்க யார் விரும்புவார்?
அது ஒரு செத்த கப்பலில் ஏறிப் போனது
என்னைக் காகிதங்களுடன் மட்டும் விட்டுவிட்டு.

அங்கே இல்லை.

எல்லாப் பெண்களும் செய்வது போல
நான் என் குறிப்புப் புத்தகத்தைத் திறக்கிறேன்,
மீன்கள் முன்னும் பின்னும் நீந்துகின்றன
டாலர்களுக்கும் உதட்டுச்சாயத்திற்கும் இடையில்
நான் அவற்றை ஒவ்வொன்றாக
வெளியே எடுக்கிறேன்,
அவற்றை தெருவின் பெயர்ப்பலகை மீது வீசி எறிகிறேன்.
என் குறிப்பேட்டை சார்லஸ் ஆற்றில் வீசுகிறேன்.
அடுத்ததாக,
கண்ட கனவை வெளியே இழுத்து,
சிமெண்ட் சுவரில் மோதவிடுகிறேன்,
அந்த விகாரமான நாட்காட்டியால்
என் வாழ்வை,
அதன் இழுத்துவரப்பட்ட
குறிப்புப் புத்தகங்களை,
நான் வாழ்கிறேன்

■

அட்லாண்டிக்கைக் கடத்தல்

நாங்கள் பருவமற்ற காலத்தில், ஒரு சிப்பிநிறக் காற்றுடன்,
ஒரு பயங்கரமான இறுகிய பரப்பில் கடற்பயணம் கிளம்பினோம்.
எங்கே டிக்கன்ஸ் கடல் நோயால் அவதிப்பட்டு
இருபது வாரங்களிலோ அல்லது இருபது நாட்களிலோ கடந்தாரோ,
அவரை நோக்கி நான் ஐந்து நாட்களில் கடக்கிறேன்.
அங்கிகளால் போர்த்தப்பட்டு –
சீஸரைப் போல இல்லை ஆனால் பன்றி இறைச்சியுடன்
இருக்கும் ஈரலைப் போல –
நான் கப்பலின் பின்புறத்தில் ஓய்வெடுக்கிறேன்
காற்றால் சூடான சாம்பலால் என் வாயைச் சுட்டுக்கொண்டு,
என் கப்பல் அலைகளைத் தவிர்த்து
புறவழியில் எளிதாக
ஒரு பாட்டி மிக எளிதாகக் கைரேகை பார்ப்பது போல்
கடப்பதைக் கவனிக்கிறேன்,
வடக்கே பார்க்கையில், நான் நினைக்கிறேன்,
அங்கே ஒரு வயல் நிறைய கழுதைகள்
சாவதற்காகக் கீழே படுக்கின்றன.

கப்பல் புறப்பட்டு 27 மணி நேரமாகிவிட்டது.
அவளுள் நான் நுழைந்துவிட்டேன்.
அவளொரு திமிங்கலமாக இருக்கலாம்,
2000 பயணிகளும் கப்பல் பணியாளர்களும் உறங்குகிறார்கள்,
அங்கே இரவு என்றென்றும் நீடிக்கும் கடைசி
$40 வெண்மது, எஃகு அறைகள்,
அவற்றினுள்ளே இருப்பதால், நான் நினைக்கிறேன்,
ஒருவர் ஒரு கிரகத்துக்குள் தோண்டிச் செல்கையில்
‘ஒளி’ என்ற சொல்லை மறப்பது போல.
நான் நகரங்களில் நடந்திருக்கிறேன்,
மைல் கணக்கில்
கம்பளங்கள் விரிக்கப்பட்டசந்துகளில்.
உட்புறம் நான் பிரெஞ்சு பேசும்
பத்துப் பெண்களாக இருந்திருக்கிறேன்.
அவர்கள் எல்லா இடங்களிலும் சோர்ந்து கிடக்கிறார்கள்
படுக்கை விரிப்புகளைப் போல.

ஓ, பிளவுபட்ட கரைகளைக் கொண்ட என்
அட்லாண்டிக் பெருங்கடலே,
அந்த ராக்போர்ட் மற்றும் பூத்பேயின்
களங்கப்பட்ட வாயில்களே,
அந்தத் துறைமுகங்கள் விலங்குகளின்
குடல்களைப் போல நாறுகின்றன!
குழந்தைத்தனமான முதிய ராணியே,
நீ எங்கே சென்றாய்,
துறைமுக நடைபாதைகளிலும்
விக்டோரியன் காலத்து வீடுகளிலும் நாறும்
புளித்த மதுவே, ஊளையிடுபவளே?

என் தாயின் கடற்பயணத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் நான் படித்திருக்கிறேன்.
என் தாயின் கடற்பயணத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் நான் படித்திருக்கிறேன்.
அவர்கள் டிக்கன்ஸின் எழுத்துக்களைக் கற்றுக்கொண்டது போல,
நான் அவர்களின் வார்த்தைகளைக் கற்றுக்கொண்டேன்.
இந்த வார்த்தைகளை நான் தோட்டாக்கள்போல் விழுங்கியிருக்கிறேன்.
ஆனால் கடைசி விருந்தாளியான பயத்தை நான் மறந்துவிட்டேன்.
அவர்களைப் போல, என்னால் பிரசவ வேதனையில் துடிப்பதுபோல்
கப்பல் அறையில் துடிக்க முடியவில்லை.
இப்போதும் மேற்கில் என்னை விட்டுச் செல்வது
எப்போதும்போல கப்பலின் அலைச்சுவடுதான்,
ஒரு கந்தலான திருமண முக்காடு,
விளக்க முடியாதது, மயக்கமூட்டுவது,
எப்போதும் படிக்கட்டுகளில் வேகமாக இறங்கி வருவது,
ஒருபோதும் தடுக்கப்படாதது,
ஒருபோதும் போதுமானதாக இல்லாதது.

வேறு எதுவுமே நடக்காதது போல
கப்பல் போய்க்கொண்டே இருக்கிறது.
தலைமுறை தலைமுறையாக
அவள் வழியில் நான் போகிறேன்.
அவள் கிழக்கே ஓடுவாள், முடிச்சு முடிச்சாக,
ஒரு பழைய இரத்த ஓட்டத்தின் மீது,
அதைத் துடைத்துச் சுத்தப்படுத்தி,
ஒவ்வொரு மணி நேரமும் அதைக் கிழித்து,
அடித்து, அடித்து,
ஒரு கன்னியின் வழியாகச் செல்வது போல
வலுக்கட்டாயமாக ஊடுருவிச் செல்வாள்.
ஓ, அவள் மிக வேகமானவள்!
இந்த செத்துப்போன தெரு ஒருபோதும் ஓய்வதில்லை!


 

சமயவேல் .
சமயவேல் .

1980 களில் கவிதைகள் எழுதத் தொடங்கிய சமயவேல் இதுவரை ஒன்பது கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறார். மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுள்ள இவர் இதுவரை எட்டு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு இருக்கிறார். கவிதைக்காக விளக்கு விருதையும் மொழிபெயரப்புக்காக விகடனின் நம்பிக்கை விருது, நல்லி திசையெட்டும் விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். தொலைதொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று மதுரையில் வசித்து வருகிறார்.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • முதலைகளின் தீப்பாடல்

    முதலைகளின் தீப்பாடல்

    March 1, 2026
  • தயவும் பாவமும் :19 ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் நவீன இலக்கியத்தில் தலித்துகள் பற்றிய பதிவுகள்

    தயவும் பாவமும் :19 ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் நவீன இலக்கியத்தில் தலித்துகள் பற்றிய பதிவுகள்

    March 1, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 8 : கோனிராயாவும் காவியாக்காவும்

    இன்கா நாடோடிக்கதைகள் – 8 : கோனிராயாவும் காவியாக்காவும்

    March 1, 2026
  • ஆன் செக்ஸ்டன் கவிதைகள் – 06

    ஆன் செக்ஸ்டன் கவிதைகள் – 06

    March 1, 2026
  • இலங்கையின் இருண்ட யுகம் – ஊடகச் சுதந்திரமும் பாலியல் துஷ்பிரயோகங்களும்

    இலங்கையின் இருண்ட யுகம் – ஊடகச் சுதந்திரமும் பாலியல் துஷ்பிரயோகங்களும்

    March 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (16)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இலக்கியம் (18)
  • உரையாடல் (9)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (95)
  • கட்டுரை (4)
  • கதை (6)
  • கதை (4)
  • கவிதை (76)
  • கவிதை (13)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (13)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (42)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (8)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (11)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (33)
  • வாழ்வியல் (2)

Archives

  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • முதலைகளின் தீப்பாடல்

    முதலைகளின் தீப்பாடல்

    March 1, 2026
  • தயவும் பாவமும் :19 ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் நவீன இலக்கியத்தில் தலித்துகள் பற்றிய பதிவுகள்

    தயவும் பாவமும் :19 ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் நவீன இலக்கியத்தில் தலித்துகள் பற்றிய பதிவுகள்

    March 1, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 8 : கோனிராயாவும் காவியாக்காவும்

    இன்கா நாடோடிக்கதைகள் – 8 : கோனிராயாவும் காவியாக்காவும்

    March 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (16)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இலக்கியம் (18)
  • உரையாடல் (9)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (95)
  • கட்டுரை (4)
  • கதை (6)
  • கதை (4)
  • கவிதை (76)
  • கவிதை (13)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (13)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (42)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (8)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (11)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (33)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top