வானதி – VIII
வயது : 14
கடலில் கலக்காத நதி
இரண்டு நண்பர்கள் நதிக்கரையோரம் பேசிக்கொண்டே நடந்தார்கள்.
நதியின் இரு கரைகளிலும் நிறைய மரங்கள் இருந்தன.
ஒரு நண்பர் சொன்னார் “வேர்களின் வழியாக இந்த நதி ஒவ்வொரு மரத்திலும் செங்குத்தாகப் பாய்கிறது”.
அதைக்கேட்ட இன்னொரு நண்பருக்கு வியப்பாக இருந்தது. நதி செங்குத்தாகப் பாய்கிறது என்று சொன்னது அவருக்குப் பிடித்திருந்தது. அவர் சொன்னார் “அப்படியானால் மரங்களின் ஒவ்வொரு கிளையும் ஒரு கிளை நதியாகிவிடுகிறது”
இந்த நதிகள் எதுவும் கடலில் கலப்பதில்லை.

புவிநதி : XII
வயது :18
குளத்தில் குதிக்கும் குருவிகள்
ஒரு தேங்காயை உடைத்தால் இரண்டு கொட்டாங்கச்சி கிடைக்கும். அதில் ஒரு கொட்டங்கச்சியில் மூன்று கண்கள் இருக்கும். அவை தழும்புகள் போல் இருக்கும். ஆனால், கண்கள் என்று சொல்வது வழக்கம்.
கண்ணுள்ள கொட்டாங்கச்சிதான் அகப்பை செய்ய பயன்படும்.
ஒரு கொட்டங்கச்சியும் ஒரு கை பிடியும் இருந்தால் ஒரு அகப்பை செய்து விடலாம்.
அடுப்பில் சோறு, குழம்பு சமைக்கும்போது அதை அவ்வப்போது கலக்கி விட வேண்டும். அப்போதுதான் சீராக வேகும்.
அடுப்பில் கொதிக்கும்போது அதில் கையை விட்டுக் கலக்க முடியுமா? முடியாது. சமைத்தபிறகு சூடாகப் பரிமாற முடியுமா? முடியாது.
அதனால்தான் தங்கள் கைகளைப் போல, கைகளுக்கு மாற்றாக, அகப்பையைக் கண்டுபிடித்தார்கள். இந்த மனிதர்கள்.
ஒரு பாட்டியின் வீட்டில் இரண்டு அகப்பை இருந்தது. சோற்றுக்கு ஒரு அகப்பை, குழம்புக்கு ஒரு அகப்பை.
இரண்டு அகப்பைகளையும் இரண்டு கைகளில் வைத்துக்கொண்டு திருப்பித் திருப்பிப் பார்த்தார். பிறகு முகம் மலரச் சொன்னார். “கொதிக்கின்ற குளத்தில் குதிக்கின்ற குருவிகள்.”
வேலூரில் வசித்துவருகிறார். பிரியாத மழை நினைவு என்கிற கவிதை கவிதை நூலையும்
புலி கிலி, எருமையின் நிழல் ஆகிய சிறார் கதை நூல்களையும், பூதம் தூக்கிட்டுப்போன தங்கச்சி, தங்க மாங்கனி ஆகிய நாட்டுப்புற சிறார் கதை தொகுப்புகளையும், கை வீசி நடக்கும் நிழல், நீலக்குரல் ஆகிய சிறார் பாடல்களையும் எழுதி உள்ளார். சிறார் கதைச் சொல்லியான இவர் சிறார்களுக்காகக் ‘கூட்டாளிகள்’ என்ற கலைக் குழுவைவையும், ‘தமிழ்க் கனவு’ என்ற இலக்கிய அமைப்பை நடத்திவருகிறார்.
Leave a Reply