Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

புத்தாண்டும் புரிதலற்ற கொண்டாட்டமும்

ஆர்.பாண்டியக் கண்ணன்
ஆர்.பாண்டியக் கண்ணன்
January 2, 2026
புத்தாண்டும் புரிதலற்ற கொண்டாட்டமும்

புத்தாண்டு என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னதே பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளின் வேர்களைக் கொண்டுள்ளது.

 தமிழர்கள் இயற்கையின் சுழற்சியை மையமாக வைத்து புத்தாண்டுக் கொண்டாட்டங்களை வடிவமைத்தனர். வானவியல் வளம் கண்டு தங்களுக்கெனத் தனியாகப் பஞ்சாங்கம் கண்டு வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. வரலாற்றுக் குறிப்புகளின் படி 4000 ஆண்டுகளுக்கு முன்பு பழங்கால பாபிலோனியர்கள் புதிய ஆண்டை வசந்த உத்தராயத்தின் போது கொண்டாடினர். இது மார்ச் மாதத்தில் வரும். இவர்கள் 11 நாட்கள் புத்தாண்டைக் கொண்டாடும் வழக்கம் உள்ளவர்கள். பண்டைய எகிப்தியர்கள் புத்தாண்டை, நைல் நதியின் வெள்ளப்பெருக்கைக் கொண்டாடும் நோக்கில் புத்தாண்டை இணைத்துக் கொண்டு கொண்டாடியுள்ளார்கள்.

பண்டைய ரோமானியர்கள் செவ்வாய் கடவுளைப் போற்றும் வகையில் புத்தாண்டை மார்ச் மாதத்தில் கொண்டாடினார்கள். இருப்பினும் கி.மு 45 இல் ஜூலியஸ் சீசர் புதிய ஜூலியன் நாள்காட்டியை அறிமுகப்படுத்தினார். இது ஜனவரி 1ஆம் தேதியை ஆண்டின் முதல் நாளாக நிறுவியது. ரோமானியர்களின் கடவுளான ஜானஸின் பெயரால் ஜனவரி மாதம் பெயரிடப்பட்டது. அவர் இரண்டு முகங்களைக் கொண்டிருந்தார். ஒன்று பழைய ஆண்டை நோக்கியும் மற்றொன்று புதிய ஆண்டை நோக்கியும் பார்க்கிறது. வெவ்வேறு பிராந்தியங்களில் தேதிகளில் வேறுபட்டது புத்தாண்டு. 1582 ஆம் ஆண்டில் போப் கிரிகோரி XIII கிரிகோரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். இது புத்தாண்டை ஜனவரி 1க்குக் கொண்டு வந்தது.

புத்தாண்டுகள் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்கள் தங்கள் சொந்த மரபுகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. உதாரணமாக சீனப் புத்தாண்டு சந்திரா நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டது. இது ஜனவரி 21 மற்றும் பிப்ரவரி 20 க்கு இடையில் வரும். இது டிராகன் நடனங்கள், பட்டாசுகள் மற்றும் விருந்துக்களுடன் கொண்டாடப்படுகிறது.

இங்கிலாந்தில் புத்தாண்டு பெரும்பாலும் லேடி டே மார்ச் 25 திருவிழாவின் போது கொண்டாடப்பட்டது. ஆனால் 1752 இல் கிரிகோரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டதன் மூலம் இங்கிலாந்து மற்றும் அதன் காலனிகள் ஜனவரி 1 ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாகப் புத்தாண்டைக் கொண்டாடத் தொடங்கினர்.

இந்தியாவில் புத்தாண்டு 

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் புத்தாண்டு பெரும்பாலும் அறுவடைக் காலத்துடன் ஒத்துப்போகிறது. அதே நேரத்தில் இந்தியா முழுமைக்கும் ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. மாறாத அந்தப் பகுதியின் நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தின்படி தேதிகள் தீர்மானிக்கப்பட்டது. ஆகவே இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வாழும் மக்களின் புத்தாண்டு தினம் “யுகாதி” பண்டிகை என்ற பெயரில் அறியப்படுகிறது. இந்த யுகாதி பண்டிகையை “உகாதி” என்று மற்றொரு பெயரிலும் அழைக்கிறார்கள். பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாளே யுகாதிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் “அம்பிகை வழிபாடு” குலதெய்வ வழிபாடு, போன்றவை நடக்கின்றன. இதே யுகாதி நாளைத்தான் மராத்தியர்களும், குடீபாட்வா என்ற பெயரில் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். குடீபாட்வா புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது வசந்த காலத்தின் வருகையும் ரபி பயிர்களின் அறுவடையையும் குறிக்கிறது.

கேரளா முழுவதும் விஷி பண்டிகை நாளாக சித்திரை திங்கள் முதல் நாளில் புத்தாண்டாக கோலாலமாகக் கொண்டாடப்படுகின்றது. மேலும் இது அறுவடை நாட்களாகவும் கருதப்படுகிறது. இன, நிற, மத, மொழி வேறுபாடில்லாமல் உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் புத்தாண்டு எப்படி வந்தது எனக் கேட்டால் நம்மில் பலரிடம் பதிலில்லை.

மொசபடோமியர்களின் புத்தாண்டு:- ஜனவரி 1 ஆம் தேதியைப் புத்தாண்டு எனக் கொண்டாடுவது சுமார் 500 ஆண்டு வருடங்களாகத்தான். 2000 ஆண்டுகளுக்கு முன் மொசபடோமியர்கள் மார்ச் 25 ஆம் தேதியைத்தான் ஆண்டின் முதல் நாளாகக் கருதினர். அவர்கள் காலத்தில் பத்து மாதங்களே இருந்தன. மார்ச்-25ந் தேதி ஆண்டின் முதல் தேதியாகவும் இருந்தது. இயேசுவின் தாய் மேரி கர்ப்பமுற்ற தேதி என்பதால் இந்த நாளை புத்தாண்டு தினமாக அனுசரித்தனர்.

ஜூலியன் காலண்டர்–1 

ரோமானிய மன்னர் ஜூலியஸ் சீசர்தான் ஜனவரி-1 ந் தேதியை ஆண்டின் முதல் நாளாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதை இயேசு பிறப்பதற்கு  46 ஆண்டுகளுக்கு முன்னர் கி.மு 46 ஆம் ஆண்டில் அறிவித்தார். அவர் பின்பற்றிய காலண்டர் முறை ஜூலியன் காலண்டர் முறை என அழைக்கப்பட்டது. கிபி 1582 ஆம் ஆண்டு 13ஆம் கிரிகோரி ஜூலியன் காலண்டரை ரத்து செய்தார். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு ஆண்டு லீப் ஆண்டு என்று கூறி அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்கு 29 நாட்கள் என்று 365 நாட்களையும், 12 மாதங்களுக்குள் மிகச் சரியாக அடக்கினார். இதன் பின்பே உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர்முறை நடைமுறைக்கு வந்தது.

 கிரிகோரியன் காலண்டர் முறைப்படி ஆண்டின் முதல்நாள் ஜனவரி 1 என்று நிர்ணயிக்கப்பட்டது. அதன் முதல் கடந்த 500 ஆண்டுகளாக ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினமாக உலகம் முழுவதுமுள்ள மக்களால் அனுசரிக்கப்படுகிறது. கிறிஸ்தவர்கள் பொதுவாக இயேசுவின் பிறந்தநாளன்று டிசம்பர் 25ஆம் நாளை குறித்துக் கொண்டாலும், இயேசு உயிர்த்தெழுந்த நாளைக் கணக்கிட கிரிகோரியின் நாட்காட்டியை அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஈஸ்டர் எனப்படும் இயேசு உயிர்த்தெழுந்த நாள் ஆண்டுதோறும் வேறு நாட்களில் வருகிறது.

மாதங்களின் மொழியும், காரணமும்,

1 ஜனவரி – ஜனிஷ் என்ற ரோமானியக் கடவுளின் பெயர் – இது லத்தின் மொழி

2 பிப்ரவரி – பெப்ருவா மாதம், ரோமானியர்களின் தூய்மைத் திருவிழா நாளின் பெயர் பிப்ரவரி – 28 நாட்கள்

3 மார்ச்     – ரோமானியர்களின் போர்க்கடவுளைக் குறிக்கும் மாதம் மார்ச்.

4 ஏப்ரல்   – ஏப்ரோடைட் என்ற ரோமானியர்களின் கடவுளைக் குறிக்கும் சொல்

5  மே   –       மலாவின் விவசாயப் பெண் கடவுளின் பெயரே மே 

6 ஜூன் –       ஜுனோ என்ற திருமணம், குழந்தை பிறத்தல் மற்றும் ஆசீர்வாதம் செய்தல் பெண் கடவுளின் பெயர்

7  ஜூலை –   ஜூலியஸ் சீசரின் பிறந்த மாதமே ஜூலை.

8  ஆகஸ்ட் – அகஸ்தஸ் என்ற லத்தின் மொழியில் உள்ள மாதமே ஆகஸ்ட் 

9 செப்டம்பர் – கிமு 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் ஏழாவது மாதம்

10 அக்டோபர் – 1 கிமு 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானியர்களின் எட்டாவது மாதம்

11 நவம்பர் –       கிமு 153 ஆம் ஆண்டுக்கு 9 வது மாதம் 

12 டிசம்பர் –      கிமு 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானியர்களின் பத்தாவது மாதம்

உலகம் முழுமையும் ஒரே ஆண்டை ஏற்றுக் கொண்டாயிற்று என்று ஒற்றையில் சொல்லிவிட முடியாது. நாடு மக்கள், கலாச்சாரம், பண்பாடு எனப் பல்வேறுப்பட்டவைகளில் உலகெங்கிலும் வேறுபட்டுள்ளது. குறிப்பாக விழாக்களும், பண்டிகைகளும் உழைப்பாளிகளின் இளைப்பாறுதல் தரும் நாள் அதை அவரவர் பாணியில் அவரவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ் புத்தாண்டு 

“சித்திரை மாதம் தமிழ் வருடப்பிறப்பாக தமிழர்களிடையே விளங்குகிறது. அதனை “தொல்காப்பியர் திருநாள்” என அறிவிக்கலாம் என பேர.தமிழண்ணல் எழுதியிருந்தார். 33 ஆண்டுகளாய் 55 அமெரிக்கா உள்ளிட்ட நகரங்களின் தமிழ்ச் சங்கங்கள், கூட்டுப்பேரவை இயங்குகிறது. சித்திரை முதல் நாளை தொல்காப்பியர் திருநாள் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துக் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பி உள்ள விளைவால், தைப்பூசம் தமிழர்கள் நாள் என்று புதிய விழா அறிவிக்கப்பட்டது. தமிழ் மொழிக்கு அடிப்படை நுலைத் தந்த தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல் நாள் (தமிழ்ப்புத்தாண்டு) தினம் வரும்போது பண்டைய கலாச்சாரம் வளரும் இளம் தலைமுறைக்கு நமது மரபுகள் வாழையடி வாழையாக வளர்ப்பதன் தேவையை நினைக்க ஒரு வாய்ப்பாக அமையும் என்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைத்தது உலகத் தமிழ்ச் சங்கம்.

மேலை நாடுகளுக்குப் பொருள் இலக்கண நூல் எழுதியவர் கிரேக்க மேதை “அரிஸ்டாட்டில்” இந்தியாவில் மரபியல் பண்பாடு கலாச்சாரம் சூழல் பற்றிய பொருள் இலக்கணம் எழுதியவர் “தொல்காப்பியர்”

திராவிட மொழிகளை ஆராயவும் வட சொற்கள் அளவுக்கு மீறித் தமிழில் புகாமல் இருக்கவும் வேர்ச்சொல் ஆய்வுகளுக்கும், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் படைக்கவும் சிந்து சமவெளி தமிழ் ஆய்வுகளுக்கும் தொல்காப்பியர் தந்த இலக்கணம் மூல ஊற்றாக விளங்குகிறது. அதனால் தமிழின் பெருமையானது தொல்காப்பியம்.

தமிழ் மாதப் பெயர்களில் “ஐ” என்றும் “இ” என்றும் முடியும் என சித்திரை, வைகாசி போன்ற 12 மாதப் பெயர்களின் இலக்கணத்தைத் தந்தது தொல்காப்பியம் என்பதால் சித்திரையே தமிழர்களின் புத்தாண்டு தினமாகக் கொண்டாட வேண்டுமென்று ஒரு சாரரும், “தை முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு என ஒரு சாரரும்”  ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் அடிப்படையில் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றன. இதுவே ஒரு தமிழ் ஆண்டின் கால அளவாகும்.

வரலாறு 

தமிழர்களிடையே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் வழக்கில் இருந்ததற்கான சங்ககாலச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. கார்காலத்தின் ஆரம்பமான ஆவணியை ஆண்டின் தொடக்கமாகத் தமிழர்கள் கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்தைய ஆண்டுகளில் ஆவணியே முதல் மாதம் என்ற குறிப்பைக் காண முடிகிறது. 14ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்கு உரை வகுக்கும் நச்சினார்கினியரும் ஆவணியே முதல் மாதம் என்கிறார். ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும் அதன்போது புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாகப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை.

தை புத்தாண்டு சர்ச்சை 

சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்கின்ற மாற்றுக் கருத்து தமிழ்நாட்டில் 1970 ஆம் மட்டும் 1980 களில் தோன்றியது. தை முதல் தேதியில் துவங்கும் திருவள்ளூர் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆவணங்களில் நடைமுறைக்கு வந்ததே இந்தக் கருத்து இதுவரை பெற முக்கியக் காரணமாகும். இப்பின்னணியில் இதன் முதல் நாள் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று திமுக அரசு 2008ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. 2017 அதிமுக அரசு இந்த அரசாணையை ரத்து செய்தது. தை புத்தாண்டு ஆதரவாளர்கள் 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது என்றும் சங்க கால இலக்கியங்களில் தை மாதமே புத்தாண்டு என்று குறிப்பு உள்ளதாகவும் புத்தாண்டு பிறப்பபுக்காகச் சொல்லப்படும் 60 ஆண்டு வட்டத்தில் எதுவும் தமிழ்ப் பெயர் இல்லை என்றும் கூறுகின்றனர். இதற்கு எதிராக தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் யாவையும் தைமாத நீராட்டு விழா ஒன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி புத்தாண்டைப் பாடவில்லை என்றும் 1921ல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம் பெற்றதாக ஆதாரமாகக் கருதத்தக்க ஆவணங்கள் எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லை என்றும் 1921 மறைமலை அடிகள் இலங்கையில் தைப்பொங்கல்தான் கொண்டாடினார் என்றும் எதிர்வாதக் கூற்றுகள் எழுந்தன. 

காலண்டரில் தமிழ்ப் புத்தாண்டுகள் எனச் சில பெயர்கள் குறிப்பிடப்பட்டியிருக்கும் குரோதி சோமகிருது விஸ்வவஷீ ஆண்டு என்று இருக்கும். இவை 60 வருடங்களாகத் தொகுத்துப் பதிவுருத்தப்பட்டிருக்கும். இந்த ஆண்டுகள்தான் தமிழ் ஆண்டுகள் என நம்ப வைக்கப்பட்டிருக்கும். தமிழ்ப் புத்தாண்டு என்று பிரபவ துவங்கி—அட்சய” என்று 60 ஆண்டுகளின் பெயர்கள். ஆனால் இது தமிழ்ப் பெயர் கிடையாது தமிழ் கிடையாது. 

மாறாக இவையனைத்தும் சமஸ்கிருதப் பெயர்கள். இதைத் தமிழர்கள் மத்தியில் அழுத்தமாகப் பதிவுருத்த ஒரு கதையாடலை மையமாக வைத்துள்ளார்கள். நாரதர்க்கும், கிருஷ்ணருக்கும் பிறந்த 60 குழந்தைகளின் பெயர்களே தமிழாண்டுகளின் பெயர்களாகக் கூறப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுகள் குறிப்பாக 1987 துவங்கி 2047 முடிந்து மீண்டும் 60 ஆண்டுகள் துவங்கும். இதைத்தான் எண்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழறிஞர் கூடி, தமிழாண்டுகளுக்கு எப்படி சமஸ்கிருதப் பெயர்கள் இருக்கமென்று, கேள்வியை முன்வைத்து 1937 இல் மறைமலை அடிகளாரின் சீடர் ‘நாவலர்” சோமசுந்தர பாரதி தலைமையில் அகில இந்திய தமிழர்கள் மாநாடு நடக்கிறது. இதில் தந்தை பெரியார் மறைமலை அடிகளார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி பி.டி.ராசன் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் நாவல
ர் சோமசுந்தர பாரதியார்,
‘தை முதல் நாளே தமிழ்புத்தாண்டு என்றும் தை இரண்டாம் நாளை திருவள்ளுவர் நாள் என்றும் முன்வைத்தார். 1937–ல் முன்வைத்த இந்தத் தீர்மானம் 1971–ல் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. தை முதல் நாள், புத்தாண்டு என்றும் தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாள் என்றும் அறிவிக்கிறார்! சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்பட்ட காலம் எதுவென்றால் தை மாதம்தான். இதனடிப்படையில் சோமசுந்தர பாரதி முன்மொழிவை மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து அறிஞர்களும் ஏற்றுக் கொண்டனர். இதை மறைமலை அடிகளார். வள்ளுவர் தினத்திற்கு ஆதரமாக, கிருஸ்த்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் பிறந்தார் என்பதால் திருவள்ளுவர் ஆண்டு என வறையறுக்கப்பட வேண்டுமென்று முன் மொழிந்தார். இதனை தொடர்ந்து ஆண்டுகளை வறைமுறைப்படுத்த 1959–ல் நடந்த திருக்குறள் மாநாட்டிலும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக 1971-ல் கி.பெ.விஸ்வநாதன் திருச்சியில் நடந்த கூட்டத்தில் புத்தாண்டை ஒருவார காலத்திற்குக் கொண்டாட வேண்டுமென்று, மார்கழி இறுதி நாளை “போகிப் பாண்டிகை, பழையதை களைதல் என்றும் தை ஒன்றாம் நாளில் புதியதைத் துவக்குதல் என்றும் துவங்கி இரண்டாம்நாள் வள்ளுவர் விழா, மூன்றாம் நாள் உழவர் விழா, நான்காம் நாள் இயல் விழா, ஐந்தாம் நாள் இசை விழா, ஆறாம் நாள் நாடகத்தமிழ் விழா கொண்டாடப்பட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதனடிப்படையில் 1971 தமிழ்நாடு அரசு சட்டமியற்றி 1972–ல் அமல்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக 1981–ல் தமிழக அரசு அலுவலகங்களில் வள்ளுவர் ஆண்டே கணக்கிட்டு நிர்வாகம் நடந்தேறியது. என்னதான் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என இருந்த போதிலும் சித்திரை-1 தான் தமிழ்ப் புத்தாண்டு என்று 2008–ல் மீண்டும் நடைமுறைக்கு வந்தது. இதற்குப் பின் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு மீண்டும் ஆட்சிமுறைக்கு வந்தவர்கள் தை திருநாளே தமிழ்ப் புத்தாண்டு என அரசு கெஜட் மூலமாக அரசாணை வெளியிடப்படுகிறது.

இதற்கு அரசு தரப்பின் வலுவான வாதமாக முன்வைக்கப்படுவது. சங்கத்தமிழ் இலக்கியங்களில் உதாரணங்களை முன்வைக்கிறது.

‘தை திங்கள் தண்யம் படியும் – என்ற – நற்றினை

‘தை திங்கள் தண்ணிய தரினம் – என்று குறுந்தொகை சொல்கிறது.

இதைப்போன்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

‘பத்தன்று நூறன்று பன்னூறன்று

பல்லாயிரத் தாண்டாய்த் தமிழர் வாழ்வில்,

புத்தாண்டு தைம் முதல் நாள். பொங்கல் நன்னாள் என பாடினார்.

தொ.பரமசிவம் – தமிழர்கள் சந்திர நாட்காட்டியைப் பயன்படுத்தி வந்தார்கள் எனத் தனது தமிழ் ஆய்வறிக்கையை முன்வைக்கிறார். அதாவது முழு நிலவு நாள், பௌர்ணமி என்றும் சொல்வதைத்தான் சந்திர நாட்காட்டியாகப் பயன்படுத்தி வந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார். உதாரணமாக முழு நிலவு மாதத்தின் முதல் நாளும், நிலவு தேய்ந்து அமாவாசையாக மாறும் நாள்தான் மாத்தின் கடைசி நாளாகும் என தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். தமிழர்கள் சந்திரனை நாட்காட்டியாகப் பயன்படுத்தி வந்தவர்கள். பின்பு சூரியன் நாட்காட்டியைப் பின்பற்றத் துவங்கியதால்தான். சித்திரை-1 புத்தாண்டாக மாறுவதற்கு வழியானது. 

ஆரியர்கள் வருகைக்குப் பின்புதான் பக்தி இலக்கிய காலம் என்று உருவாகி சூரிய நாட்காட்டியின்படி சமஸ்கிருத மொழியில் 60 ஆண்டுகள் தொகுக்கப்பட்டு சித்திரை முதல்நாளே புத்தாண்டு என மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

7–ம் நூற்றாண்டில் திருப்பாவை எழுதிய ஆண்டாள் என்ன பாடுகிறாரென்றால்,

‘மார்கழித் திங்கள் அல்லவா மதி நிறைந்த நன் நாளாம்” எனப் பாடுகிறார். திங்கள் என்பது மாதத்தைக் குறிக்கின்றது. அதுவும் மார்கழி திங்கள்ளல்ல வா மதி நிறைந்த நன்னாள்லலவா, என்பது தை முதல் நாளில் வரும் பௌர்ணமியை குறிக்கின்றது.

இப்படி புத்தாண்டுகள் மத ரீதியாகவும், அரசியல் மாற்றத்தாலும், காலந்தோறும் மாறி மாறி மனிதக் குலத்தைக் குழப்ப நிலையியையே வைத்திருக்கிறது. ஆளும் வர்க்கம்! ரோமானியர்கள் புத்தாண்டின் முன்னோடி என்றும் சீனர்கள் அவர்களுக்கும் முன்னோடியென்றும் இங்கிலாந்தில்தான் ஜனவரி-1 என்ற ஆங்கிலப் புத்தாண்டும் என்று ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்கள் கொண்டாடுவதும், காலம் தொடரும் முரண்பாடு.

தமிழர்கள் புத்தாண்டு என்பது புராணக் கதையின் அடிப்படையில் நாரதர்க்கும், மாதவனுக்கும் இரண்டு ஆண்களுக்கும் பிறந்த 60 குழந்தைகளின் பெயர்களே 60 ஆண்டுகளாகத் தொகுக்கப்பட்டு இந்த ஆண்டுகளின் முதல் பெயர் ‘பிரபவ எனத் துவங்கி அட்சய” முடியும் காலத்தைத் தொகுத்து சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு என ஆன்மீக ரீதியாகவும், தைத்திருநாளே புத்தாண்டின் முதல் என்று தமிழர்களின் வாழ்வியழில் இருந்தும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக தை மாதம் முதல் ஆடி மாதம் வரை விதைப்புக் காலம் முடிந்து விவசாயப் பொருட்கள் அனைத்தும் பொருளாக்கப்பட்டு, சந்தையில் விற்றுப் பணம் ஈட்டி அதன் நன்றிக் கடனாகவே தைத்திருநாளின் முதல் நாளை மனிதக் குலம் கொண்டாடுகிறது. அதுவும் இஷ்ட தெய்வ வழிபாடு கிடையாது. ஆதிமனிதன் எப்படி சூரியன், சந்திரன், மழை, இடி, மின்னலை வணங்கினானோ, அதன் பரிணாமம்தான் சூரியனுக்குப் பொங்கல் வைத்துத் தானியங்கள், பழங்கள், காய்கள், கிழங்குகள் எனத் தன்னால் உருவாக்கப்பட்ட விவசாயப் பொருட்களை இயற்கைக்குப் படைத்து வணங்குவதுதான் தமிழர்களின் உண்மையான கலாச்சாரம், பண்பாடு, இதைத்தான் பதவியில் இருப்பவர்கள் பல பெயர்களை வைத்துப் புத்தாண்டை புரிதலற்ற ஆண்டாக மாற்றி உள்ளார்கள்.


 

ஆர்.பாண்டியக் கண்ணன்
ஆர்.பாண்டியக் கண்ணன்

ஆர்.பி.கண்ணன் என்னும் இயற்பெயர் கோண்ட R.பாண்டியக்கண்ணன் விருதுநகர் மாவட்டம் கட்ராம்பட்டியைச் சேர்ந்தவர். தமிழ்நாடு அரசு சுகாதாரப் போக்குவரத்துறத் துறையில் பணி செய்கிறார். 2008 ஆம் ஆண்டு சலவான், மழைப்பாறை, நுகத்தடி, மேடை, துயர் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • மாதுளை மரம்

    மாதுளை மரம்

    January 4, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    January 4, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 6

    இன்கா நாடோடிக்கதைகள் – 6

    January 4, 2026
  • நிணம் : நுண்கதை- குறுங்கதை- சிறுகதை

    நிணம் : நுண்கதை- குறுங்கதை- சிறுகதை

    January 4, 2026
  • சிக்கிம் சுந்தரி

    சிக்கிம் சுந்தரி

    January 4, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (9)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (11)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இதழ் 8 (44)
  • இலக்கியம் (15)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (80)
  • கட்டுரை (2)
  • கதை (4)
  • கதை (3)
  • கவிதை (62)
  • கவிதை (11)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (11)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (36)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (5)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (9)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (3)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (27)
  • வாழ்வியல் (2)

Archives

  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • மாதுளை மரம்

    மாதுளை மரம்

    January 4, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    January 4, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 6

    இன்கா நாடோடிக்கதைகள் – 6

    January 4, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (9)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (11)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இதழ் 8 (44)
  • இலக்கியம் (15)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (80)
  • கட்டுரை (2)
  • கதை (4)
  • கதை (3)
  • கவிதை (62)
  • கவிதை (11)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (11)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (36)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (5)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (9)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (3)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (27)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top