ஓவியம் : லக் ஷண்யா ராஜாஸ்ரீ
குரங்கும் வாலும்
ஒருவர் ஒரு கூரான கல்லை வைத்து மரத்தில் குத்திக் குத்தி குரங்கு என்று எழுதினார்.
அவர் எழுதிவிட்டுப் போன பிறகு அந்த மரத்திற்கு ஒரு குரங்குக் கூட்டம் வந்தது. அந்த வழியாக வந்த ஒருவர் மரத்தில் குரங்கு என்று எழுதியிருப்பதைப் படித்துப் பார்த்தார். மரத்திலிருந்த குரங்குகளை அழைத்து அதைக் காட்டினார்.
அதைப் பார்த்து விட்டு ஒரு குரங்கு கேட்டது. “எங்களுக்கு வால் இருக்கிறது. அதுபோல குரங்கு என்ற சொல்லுக்கு வால் இருக்கிறதா?”
அவர் சொன்னார் “குரங்கு என்ற சொல் கு- என்ற எழுத்தில் ஆரம்பித்து அதே கு-என்ற எழுத்தில் முடிகிறது. கு-என்ற எழுத்துக்கு வால் இருக்கிறது. அந்த வாலை அது சுருட்டி வைத்திருக்கிறது. உங்களைப் போல் அதை நீட்டவோ பிறகு சுருட்டவோ அதனால் முடியாது”.
கத்தரிக்கோல்
என் பெயர் கத்தரிக்கோல். கைப்பிடியுடன் இரண்டு கத்திகள். இரண்டையும் இணைப்பதற்கு ஒரு திருகு. இதுதான் என் பாகங்கள்.
நான் கத்தரிப்பதற்குப் பயன்படுகிறேன்.
இரண்டு பேர் ஒரு புள்ளியில் இணைந்து ஒற்றுமையாகச் செயல்படுவதற்கு நானும் ஒரு நல்ல உதாரணம்.

Art : csaimages
வேலூரில் வசித்துவருகிறார். பிரியாத மழை நினைவு என்கிற கவிதை கவிதை நூலையும்
புலி கிலி, எருமையின் நிழல் ஆகிய சிறார் கதை நூல்களையும், பூதம் தூக்கிட்டுப்போன தங்கச்சி, தங்க மாங்கனி ஆகிய நாட்டுப்புற சிறார் கதை தொகுப்புகளையும், கை வீசி நடக்கும் நிழல், நீலக்குரல் ஆகிய சிறார் பாடல்களையும் எழுதி உள்ளார். சிறார் கதைச் சொல்லியான இவர் சிறார்களுக்காகக் ‘கூட்டாளிகள்’ என்ற கலைக் குழுவைவையும், ‘தமிழ்க் கனவு’ என்ற இலக்கிய அமைப்பை நடத்திவருகிறார்.








Leave a Reply