கிணறு
ஒரு சிறுமி மரத்திலிருந்து குச்சிகளை உடைத்தார்.
அவற்றை வைத்து ஒரு சதுரம் செய்தார். இது என் வீடு போல் உள்ளது என்றார். அடுத்து ஒரு செவ்வகம் செய்தார். இது எங்கள் வயல் போல் உள்ளது என்றார்.
அந்த வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச கிணறு தேவை. கிணறு பெரும்பாலும் வட்டமாக இருக்கும். அந்தக் குச்சிகளை வைத்து அவரால் ஒரு வட்டத்தை உருவாக்க முடியவில்லை.
வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச கண்டிப்பாக ஒரு கிணறு தேவை. என்ன செய்வது?
கொஞ்ச நேரம் யோசித்தார்.
அந்த மரத்தைச் சுற்றி ஒரு கொடி படர்ந்திருந்தது. அதிலிருந்து ஒரு ஈர்க்கை அறுத்தார். இலைகளை உருவிவிட்டு அதை வட்டமாகப் பின்னினார். இப்போது கிணறு வந்துவிட்டது.
என் குரலில் பேசிய பலூன்
என்னிடம் ஒரு பலுான் இருந்தது. அந்தப் பலுானிடம் “உனக்கு என் குரலைக் கொடுக்கின்றேன், அதை வைத்து எதாவது சொல்ல விரும்பினால் சொல்” என்றேன்.
பலூன் சொன்னது, “போதும் என்று சொல்வதற்கு எனக்குக் குரல் இல்லை, அதனால் என்னை ஊதும் போது அளவோடு ஊது, வெடித்து விடாமல் என்னை ஊதி விளையாடுவது உன் பொறுப்பு”.
Art : Anne-Marie Slinkman
வேலூரில் வசித்துவருகிறார். பிரியாத மழை நினைவு என்கிற கவிதை கவிதை நூலையும்
புலி கிலி, எருமையின் நிழல் ஆகிய சிறார் கதை நூல்களையும், பூதம் தூக்கிட்டுப்போன தங்கச்சி, தங்க மாங்கனி ஆகிய நாட்டுப்புற சிறார் கதை தொகுப்புகளையும், கை வீசி நடக்கும் நிழல், நீலக்குரல் ஆகிய சிறார் பாடல்களையும் எழுதி உள்ளார். சிறார் கதைச் சொல்லியான இவர் சிறார்களுக்காகக் ‘கூட்டாளிகள்’ என்ற கலைக் குழுவைவையும், ‘தமிழ்க் கனவு’ என்ற இலக்கிய அமைப்பை நடத்திவருகிறார்.








Leave a Reply